சமீப காலமாக பணவீக்கம் அதிகரித்து வருவதால் காய்கறி விலை, மளிகை பொருட்களின் விலை என அன்றாட தேவைப்படும் பொருட்களின் விலை விண்ணை எட்டியுள்ளது. அந்த வகையில் வீட்டில் சமைக்கப்படும் "Veg meals" என்று சொல்லப்படுகிற சைவ தாலியின் விலை அக்டோபர் 2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அக்டோபர் 2024 ஆம் ஆண்டில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே சமயம் அசைவ தாலியின் விலை 5 சதவீதம் உயர்ந்துள்ளது என்று கிரிஸில் ரொட்டி ரைஸ் ரேட் ரிப்போர்ட் தெரிவித்துள்ளது.
2024-ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் சைவ உணவு மற்றும் அசைவ உணவின் விலை அதிகரித்துள்ளது. செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது சைவ தாலியின் விலை 6 சதவீதம் அதிகரித்துள்ளது. அசைவ தாலியின் விலை 4 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வு முக்கியமாக காய்கறி செலவுகளால் ஏற்பட்டுள்ளது. சைவ உணவின் விலையில் சுமார் 40% காய்கறிகளின் பங்கு உள்ளது. அசைவ உணவின் மொத்த செலவில் 22 சதவீதம் மட்டுமே காய்கறிகளின் பங்கு உள்ளது.

பிராய்லர் கோழியின் விலை 9% குறைந்ததால் அசைவ தாலியின் விலை சைவத் தாலியுடன் ஒப்பிடுகையில் குறைவாக இருக்கிறது. 2024-ஆம் நிதியாண்டில் வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கின் விலை கணிசமாக அதிகரித்துள்ளன. 2023-ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் வெங்காய விலை இந்த வருடம் அக்டோபர் மாதத்தில் 46 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேபோல உருளைக்கிழங்கு விலை 51% அதிகரித்துள்ளது. செப்டம்பரில் பெய்த கனமழை காரணமாக வரத்து குறைந்ததே இந்த விலை உயர்வுக்கு காரணம் என்று அறிக்கை கூறுகிறது. மேலும் வெங்காயத்தின் விலை செப்டம்பரில் இருந்ததை விட அக்டோபரில் 6 சதவீதம் அதிகரித்துள்ளது.
அதேபோல 2023-ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் தக்காளியின் விலை கிலோ 1-க்கு 29 ரூபாயாக இருந்தது. ஆனால் 2024-ஆம் ஆண்டின் அக்டோபர் மாதத்தில் ஒரு கிலோ தக்காளி விலை 64 ரூபாயாக அதிகரித்தது. இது சுமார் 2 மடங்கு அதிகரிப்பு. இந்த விலை உயர்வு மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் பெய்த மழையால் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது அக்டோபர் மாதத்தில் 39% தக்காளி விலை அதிகரித்துள்ளது. பண்டிகை கால தேவையும் இந்த விலை உயர்வுக்கு ஒரு காரணமாக உள்ளது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து வரத்து அதிகரித்துள்ளதால், நவம்பர் 2024-இல் விலை நிலையாக இருக்கும் என்றும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
வெஜ் தாலியின் விலையில் 9 சதவீதம் பருப்பு வகைகள் பங்களிக்கின்றன. குறைந்த இருப்பு, வரத்து குறைவாக இருத்தல் மற்றும் பண்டிகை காலத் தேவை போன்ற காரணங்களினால் பருப்பின் விலை 11 சதவீதம் உயர்ந்துள்ளது. இருப்பினும் புதிய ஸ்டாக் வர இருப்பதால் டிசம்பரில் பருப்பு விலை குறையும் என்றும் அறிக்கை கணித்துள்ளது.
அக்டோபர் மாதத்தில் அதிக இறக்குமதி வரி மற்றும் பண்டிகைக்கான தேவை காரணமாக காய்கறி, எண்ணெய் விலை ஆகியவை 10% அதிகரித்துள்ளது. மறுபுறம் எரிபொருள் விலை மற்றும் கறி கோழியின் விலை குறைந்துள்ளது.
டெல்லியில் எல்பிஜி சிலிண்டரின் விலை 11% குறைந்தது. கடந்த ஆண்டு செப்டம்பரில் 903 ரூபாயாக இருந்த எல்பிஜி சிலிண்டர் விலை இந்த ஆண்டு மார்ச் மாதம் 803 ரூபாயாக குறைந்தது.
தானியங்கள், பருப்பு வகைகள், பிராய்லர்கள், காய்கறிகள், மசாலா பொருட்கள், சமையல் எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு போன்ற பொருட்களின் விலையை கருத்தில் கொண்டு வீட்டில் தாலி தயாரிப்பதற்கான சராசரி செலவு கணக்கிடப்படுகிறது.
More From GoodReturns

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications