உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் கிரிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo). இவரது வேகமும், திறமையும், கோல் அடிக்கும் துல்லியமும், அவரை மில்லியன் கணக்கான ரசிகர்களின் மனதில் நிலைத்து வைத்திருக்கின்றன. ரொனால்டோ தனது தொழில்முறை பயணத்தை போர்ச்சுகலின் சிறிய கிளப் மூலம் தொடங்கினார்.
பின்னர், ஸ்போர்டிங் லிஸ்பன் என்ற கிளப்பில் விளையாடி, 18-வது வயதில் மாஞ்செஸ்டர் யுனைடெட் என்ற பிரபல இங்கிலாந்து கிளப்புடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டார். பின்னர், ரியல் மாட்ரிட், ஜுவென்டஸ், மற்றும் மீண்டும் மாஞ்செஸ்டர் யுனைடெட் ஆகிய முக்கியமான கிளப்புகளில் சிறந்து விளங்கினார். தற்போது அவர் சவூதி அரேபியாவின் அல் நஸ்ர் என்ற கிளப்புக்காக விளையாடி வருகிறார்.

இந்நிலையில், கிரிஸ்டியானோ ரொனால்டோ சவுதி அரேபியாவின் "அல் நஸ்ர்" (Al Nassr) கால்பந்து அணியுடன் கையெழுத்திட்டுள்ள புதிய ஒப்பந்தம் ஒன்று தற்போது உலகளவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு சுமார் 700 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.5,800 கோடிக்கு மேல்) என கூறப்படுகிறது. இது இரண்டு ஆண்டு கால ஒப்பந்தம் ஆகும். இது, விளையாட்டு வரலாற்றிலேயே மிக அதிக வருமானம் தரும் ஒப்பந்தமாக அமைந்திருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
ரொனால்டோவுக்கு இந்த ஒப்பந்தத்தில் பரிசுத்தொகை மட்டுமின்றி பாதுகாப்பு, தனி ஜெட் விமானம், சொகுசு வீடு, குடும்பத்திற்கான சலுகைகள் போன்ற பல்வேறு வசதிகளும் வழங்கப்பட உள்ளன. பிரபல கால்பந்து பத்திரிகையாளர் பாப்ரிசியோ ரோமானோ மற்றும் தி சன் வெளியிட்ட தகவல்களின் படி, கிரிஸ்டியானோ ரொனால்டோவுக்கு இந்த ஒப்பந்தத்தின் மூலம் சம்பளமாக மட்டுமே $244.4 மில்லியன் (ரூ.2,040 கோடிக்கு மேல்) கிடைக்க உள்ளது.
சம்பளம் மட்டுமின்றி, $33.6 மில்லியன் (ரூ.280 கோடி+) கையெழுத்து போனஸ், $5.5 மில்லியன் (ரூ.45 கோடி+) விமான பயண செலவு சலுகை, Saudi Pro League-இல் டாப் ஸ்கோரராக இருந்தால் கூடுதல் $5.5 மில்லியன் போனஸ் ஆகியவை வழங்கப்படுகிறது. மேலும், பரபரப்பாகக் கருதப்படும் அம்சம் என்னவென்றால், ரொனால்டோவுக்கு Al Nassr கிளப்பில் 15% பங்குச் சொத்து வழங்கப்பட்டுள்ளது.
ரொனால்டோவின் சவூதி அரேபியா Al Nassr கிளப்புடன் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தில், அதிரடியான சம்பளத்துடன் பல்வேறு தனிப்பட்ட வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. ரொனால்டோவின் தினசரி வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் கவனிக்க முழு நேர வேலைக்கு நியமிக்கப்படுவர். சவூதி அரேபியாவில் வருமான வரி (Income Tax) இல்லாததால், ரொனால்டோ தனது முழு வருமானத்தையும் இந்தியா, UK, ஸ்பெயின் போன்ற நாடுகளை விட அதிகமாக வைத்திருக்க முடியும். விளையாட்டு பொருளாதார நிபுணர் விக்டர் மதேசன் கூறுகையில், "ரொனால்டோவுக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் வசதிகள் சவூதி ப்ரோ லீக்-இன் முழு ஆண்டு வருவாயையும் முந்தக்கூடிய அளவில் உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
தற்போது 932 கோல்களை அடித்துள்ள ரொனால்டோ, 1000 கோல்களை அடைய விருப்பம் தெரிவித்துள்ளார். வயது 40 ஆகும் நிலையில் கூட, அவர் இன்னும் சிறந்த விளையாட்டை கொடுத்து வருகிறார். அண்மையில் போர்ச்சுகலை, UEFA Nations League இறுதிப்போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி வெற்றிபெறச் செய்தது. அல் நஸ்ருடன் Arab Club Champions Cup போட்டியில் வென்றிருந்தாலும், ரொனால்டோவுக்கு இன்னும் Saudi Pro League பட்டம் கைவசமில்லை. 2022-23 மற்றும் 2023-24 சீசன்களில் இரண்டாவது இடமும், 2024-25 சீசனில் மூன்றாவது இடமும் மட்டுமே பெற்றது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications