தீபாவளி வந்துவிட்டால் நகரின் பல்வேறு தெருக்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பட்டாசு கடைகள், துணி கடைகள், ஸ்வீட் கடைகள் என ஒரு கடை விடாமல் அனைத்திற்கும் சென்று பலரும் ஷாப்பிங் செய்வார்கள். ஆனால் இந்த முறை சில்லறை விற்பனையாளர்கள் தாங்கள் விற்பனை செய்யும் பொருட்களின் விலையை குறைத்து விற்பனை செய்த போதிலும் வாடிக்கையாளர்களின் வரத்து குறைவாக இருப்பதால் கவலை அடைந்துள்ளனர்.
தீபாவளிக்கு முந்தைய கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்றும் சென்னையில் பிரபலமான ஷாப்பிங் ஸ்பாட்களில் ஒன்றான சவுகார்பேட்டையில் மதியம் 2 மணி வரை மிதமான கூட்டம் மட்டுமே காணப்பட்டது. அதன் பிறகு தான் மக்கள் கூட்டம் படிப்படியாக அதிகரித்தது.

பண்டிகை கால ஷாப்பிங் தொடங்கிவிட்டது. இது பொங்கல் வரையிலும் தொடரும் எங்களால் பெரும்பாலான பொருட்களை வாங்கி விற்பனை செய்ய முடியாத அளவுக்கு விலை உயர்ந்துள்ளது. முன்பு 7,500 ரூபாய்க்கு 2 பெரிய பட்டாசு பாக்ஸ்களை பெற்றோம். ஆனால் இப்போது ஒரு பையில் கூட 6,000 ரூபாய் மதிப்பிலான பொருட்களை பெற முடியவில்லை என்று ஒருவர் கூறினார்.
அதேபோல், என்எஸ்சி போஸ் சாலையில், பட்டாசு உற்பத்தி குறைந்ததால், 5% - 15% வரை விலை அதிகரித்துள்ளதாக, பட்டாசு விற்பனையாளர் ஒருவர் கூறியுள்ளார். பட்டாசு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் உற்பத்தியை பாதித்துள்ளதாக சில்லறை விற்பனையாளர்கள் சிலர் கூறியுள்ளனர்.
சக்தி என்ற 39 வயதான வாடிக்கையாளர் ஒருவர் கூறுகையில், "தான் பில்டிங் நடைமுறைகள் குறித்து அதிருப்தி அடைந்துள்ளதாகவும், விற்பனையாளர்கள் விலை உயர்வுக்கு ஜிஎஸ்டி-யைக் குறை கூறினாலும் சரியான பில் அவர்கள் வழங்குவதில்லை. வெறும் பேப்பரில் எழுதி தருகிறார்கள். நான் என் குழந்தைக்கு பட்டாசு வாங்க ரூ.4,850 செலவு செய்தேன். இதனால் இந்த ஆண்டு எனக்கு உடை வாங்க முடியவில்லை. இதுதான் பல குடும்பங்களின் எதார்த்தம் என்று கூறியிருந்தார்.
இந்த விலை உயர்வு பட்டாசுகளுக்கு மட்டுமல்லாமல் இனிப்புகள் மற்றும் விளக்குகள் போன்ற பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. "4 ஆண்டுகளுக்கு முன்பு நான் ஒரு கிலோ காஜு கட்லியை 540 ரூபாய்க்கு வாங்கினேன். இப்போது 800 ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 150 ரூபாய் உயர்ந்துள்ளது என்று தனது மகளுடன் ஷாப்பிங் செய்ய சவுகார்பேட்டைக்கு வந்த விஜய் என்ற நபர் கூறியுள்ளார்.
ரங்கநாதன் தெரு அல்லது உஸ்மான் சாலையுடன் ஒப்பிடும்போது, பாண்டி பஜாரில் மக்கள் கூட்டம் குறைவாகவே இருந்தது என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. சில வாடிக்கையாளர்கள் மற்றும் கடைக்காரர்கள், தீபாவளி பண்டிகை மாத இறுதியில் வருவதால், மக்களுக்கு போனஸ் மற்றும் சம்பளம் இன்னும் கிடைக்கவில்லை. இதனால் விற்பனை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications