ரஷ்யா போட்ட ஒரே போடு.. பாகிஸ்தானுக்கு, இந்தியாவுக்கு கொடுப்பது போல் கொடுக்க முடியாது.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவுக்கு சலுகை விலையில் எண்ணெய் கொடுத்து வரும் ரஷ்யா, சீனாவுக்கும் ஏற்கனவே சலுகை விலையில் வழங்கி வருகின்றது.

தற்போது இந்தியா, சீனாவுக்கு வழங்குவதை போல தங்களுக்கும் எண்ணெய் வழங்க வேண்டும் என பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகள், ரஷ்யாவிடம் கோரிக்கை விடுத்து வருகின்றன.

ஆனால் ரஷ்யாவோ அதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றது. இது குறித்து ரஷ்யாவும் பாகிஸ்தான் தரப்பிலும் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது.

மீண்டும் லாக்டவுனா.. சீனாவில் வேகமெடுக்கும் கொரோனா.. ! மீண்டும் லாக்டவுனா.. சீனாவில் வேகமெடுக்கும் கொரோனா.. !

பாகிஸ்தானுக்கு மறுப்பு

பாகிஸ்தானுக்கு மறுப்பு

ஆனால் தற்போது வரையில் இந்த பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டதாக தெரியவில்லை. பாகிஸ்தான் இந்தியாவுக்கு வழங்குவதை போல தங்களுக்கும் தள்ளுபடி விலையில் எண்ணெய் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாகவும், ஆனால் அதற்கு ரஷ்யா தரப்பில் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இரண்டாவது பெரிய சப்ளையர்

இரண்டாவது பெரிய சப்ளையர்

இன்றைய நாளில் இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் சப்ளையராக, சவுதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக இருக்கும் ரஷ்யா, கடந்த அக்டோபர் மாதத்திலிருந்து இருந்து வருகின்றது. பங்களாதேஷும் இந்தியாவுக்கு வழங்குவதை போல எதிர்பார்ப்பதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

பாகிஸ்தான் எண்ணெய் குழாய் திட்டம்

பாகிஸ்தான் எண்ணெய் குழாய் திட்டம்

ரஷ்யாவின் உதவியுடன் எண்ணெய் குழாய் திட்டமும் இழுபறி நிலையிலேயே இருந்து வருகின்றது. இது லாகூரில் இருந்து கராச்சியும் இணைக்கும் எரிவாயு குழாய் மூலம் இணைக்கும் 1100 கிலோமீட்டர் கொண்ட ஒரு திட்டமாகும்.

பாகிஸ்தானும் நடு நிலை தான்

பாகிஸ்தானும் நடு நிலை தான்

கடந்த பிப்ரவரி மாதம், இரஷ்யா மீது உக்ரைன் போர் தொடுக்கும் சூழல் நிலவியபோது, இம்ரான் கான் ரஷ்யாவுக்கு 2 நாள் பயணம் மேற்கொள்ளும் திட்டம் வைத்திருந்தார். அவர் மாஸ்கோவில் இருந்தபோதே உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. ஐ நாவில் ரஷ்யாவின் போர் நடவடிக்கையை எதிர்த்து கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு ஆதரவளிக்கக் கோரி, பாகிஸ்தானுக்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் இம்ரான் கானும் இந்தியாவினை போல் ரஷ்ய எதிர்ப்பு தீர்மானத்தை ஆதரிக்காமல் நடுநிலை வகித்தது நினைவு கூறத்தக்கது.

பாகிஸ்தானும் மறுப்பு ஏன்?

பாகிஸ்தானும் மறுப்பு ஏன்?

இந்த நிலையில் தற்போதைய பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு ரஷ்யா தரப்பு மறுத்துவிட்டதாகவும், மேலும் ஏற்கனவே பெரியளவில் ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், குறிப்பாக இந்தியாவுடனான ஒப்பந்தத்தினை மேற்கோள் காட்டியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Crude oil cannot be given to Pakistan like it is given to India: russia

It has been reported that Pakistan has demanded to supply oil to them at a discounted price like India, but Russia has refused to do so.
Story first published: Sunday, December 11, 2022, 23:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X