கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பிறகு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தன. குறிப்பாக, ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்குவதே இந்தத் தடைகளின் முக்கிய நோக்கமாக இருந்தது. இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்ட ரஷ்யா, தனது கச்சா எண்ணெய்க்கு அதிகத் தள்ளுபடி விலையை அறிவித்தது.
இந்தியாவின் சாதனை கொள்முதல் : ரஷ்யாவின் இந்த விலைச்சலுகை இந்திய சந்தையை கவர்ந்தது. போருக்கு முன்பு வரை, இந்தியா தனது ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் வெறும் 1 சதவீதத்தை மட்டுமே ரஷ்யாவிடம் இருந்து பெற்று வந்தது. ஆனால், குறுகிய காலத்திலேயே இந்த நிலை முற்றிலும் மாறி, இந்தியா தனது இறக்குமதியை பல மடங்கு உயர்த்தி சுமார் 40 சதவீதத்தை ரஷ்யாவிடம் இருந்து பெறுமளவு முன்னேறியது. இதன் மூலம், மத்தியக் கிழக்கு நாடுகளை மட்டுமே நம்பியிருந்த இந்தியாவுக்கு ஒரு பெரிய மாற்று கிடைத்தது.

அமெரிக்காவின் புதிய பொருளாதார தடை : இந்நிலையில், கடந்த அக்டோபர் 22-ஆம் தேதி, ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களான ரோஸ்நெப்ட் (Rosneft) மற்றும் லுகோயில் (Lukoil) ஆகிய நிறுவனங்கள் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடைகளை விதித்தது. இந்த தடைகளின் தாக்கம் காரணமாக, இந்தியாவின் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்.பி.சி.எல். - மிட்டல் எனர்ஜி, மங்களூர் சுத்திகரிப்பு நிறுவனம் ஆகியவை இப்போதைக்கு ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.
ரூ.25,500 கோடிக்கு இறக்குமதி : புதிய பொருளாதார தடை அமலுக்கு வருவதற்கு முன்பே, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து அதிக விலைக்கு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்திருப்பது ஐரோப்பிய சிந்தனை அமைப்பான எரிசக்தி மற்றும் தூய்மையான காற்றுக்கான ஆராய்ச்சி மையம் (CREA) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.
சீனாவுக்கு அடுத்தபடியாக உலகிலேயே அதிக கச்சா எண்ணெயை ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்வது இந்தியா தான். கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும், இந்தியா சுமார் ரூ.25,500 கோடி மதிப்புள்ள கச்சா எண்ணெயை இறக்குமதி செய்திருந்தது. அக்டோபர் மாத இறக்குமதியிலும் எந்த மாற்றமும் இல்லை. புதிய தடைக்கு முன்பே அதே அளவு தொகைக்கு இந்தியா கொள்முதல் செய்துள்ளது.
இந்தியாவின் ரஷ்ய இறக்குமதிப் பட்டியலில் கச்சா எண்ணெய் 81 சதவீதமாகவும், நிலக்கரி 11 சதவீதமாகவும், எண்ணெய் பொருட்கள் 7 சதவீதமாகவும் உள்ளன. எனவே, தற்போது தற்காலிகமாக இறக்குமதி நிறுத்தப்பட்டிருந்தாலும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்திய நிறுவனங்களின் முடிவுகள், உலகப் பொருளாதாரச் சூழல் மற்றும் இந்தியாவின் எரிசக்திப் பாதுகாப்பு ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதியாகியுள்ளது.
More From GoodReturns

பெட்ரோல் விலை ரூ.40 வரை உயர வாய்ப்பு? ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்.. மீண்டும் வருகிறதா Oil Bond?

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

1970-களை விட மோசமான எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும்! உலகிற்கு காத்திருக்கும் பேராபத்து?IEA எச்சரிக்கை?

சரியான நேரத்தில் கைகொடுத்த ரஷ்யா! மங்களூரு துறைமுகத்தில் நங்கூரமிட்ட எண்ணெய் கப்பல்! பெரும் நிம்மதி..!

ஜியோ ஹாட் ஸ்டாரின் தலைமை அதிகாரியை தேடி வந்து பதவி கொடுத்த ஓபன் ஏஐ நிறுவனம்!!

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications