ரஷ்ய அதிபரான விளாடிமிர் புடின் மேற்கத்திய நாடுகள் பல முறை எச்சரித்தும் உக்ரைன் நாட்டிற்குள் நுழைந்து இரண்டு பகுதிகளைக் கைப்பற்றியுள்ள நிலையில், அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு நிதியியல் தடைகளை விதித்துள்ளது.
இந்த நிலையிலும் உக்ரைன் நாட்டிற்குள் ரஷ்யா நுழைவதை நிறுத்தாது என்பதால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் சுமார் 100 டாலரை தொட்டு 2014ஆம் ஆண்டு உச்ச அளவீட்டைத் தொட்டு உள்ளது.
இதனால் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட 2022-23ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் மிகப்பெரிய ஓட்டையைப் போட்டு உள்ளது ரஷ்யா.
கச்சா எண்ணெய் விலை
கச்சா எண்ணெய் விலை 100 டாலர் அளவீட்டை தொட்டு உள்ள நிலையில் 2022-23 ஆம் நிதியாண்டில் இந்தியாவில் கச்சா எண்ணெய் தேவையின் அளவு வரலாற்று உச்ச அளவீட்டை தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா
உலகிலேயே 3வது மிகப்பெரிய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருக்கும் நிலையில், கொரோனா தொற்றில் இருந்து மீண்டு பொருளாதாரம் வர்த்தம் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் இந்த நேரத்தில் எரிபொருள் தேவை இந்தியாவில் புதிய உச்சத்தை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
214.5 மில்லியன் டன்
இதன் மூலம் 2022-23ஆம் ஆண்டில் இந்தியாவில் கச்சா எண்ணெய் தேவை 214.5 மில்லியன் டன்னாக உயரும் என எண்ணெய் வள அமைச்சகத்தின் பெட்ரோலியம் திட்டமிடல் மற்றும் ஆய்வு அமைப்பு கணித்துள்ளது.
வரலாற்று உச்சம்
இந்த அளவீட்டை அடைந்தால் ஏற்கனவே திட்டமிட அளவீட்டை விடவும் 5.5 சதவீத அதிகமாகவும், கச்சா எண்ணெய் பயன்பாட்டில் வரலாற்று உச்சத்தையும் இந்தியா அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெட்ரோல், டீசல் விலை
இந்தியாவில் அதிகப்படியான வரி விதிப்பின் வாயிலாக எரிபொருள் விலை வரலாற்று உச்ச விலையில் விற்பனை செய்யப்பட்டது, இதனிடையில் கொரோனா தொற்று அளவு குறைந்து, மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்து 110 நாட்கள் எவ்விதமான மாற்றமும் செய்யாமல் தொடர்ந்து ஓரே விலையில் விற்பனை செய்யப்படும் காரணத்தால் எரிபொருள் விற்பனை சூடுபிடித்து விலைவாசி கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது.
ரஷ்யா
ரஷ்யாவும் தனது ராணுவப் படையை உடனடியாகத் திரும்பப்பெற வாய்ப்பு இல்லாத நிலையில், மேற்கத்திய நாடுகளும் தனது நிதியியல் தடையை உடனடியாகப் பெறாது என்பதால் கச்சா எண்ணெய் விலை அடுத்த சில மாதங்களுக்கு 100 டாலர் அளவில் தான் இருக்கும்.
பட்ஜெட்டில் ஓட்டை
இதனால் மத்திய அரசு அதிகப்படியான பணத்தைச் செலவு செய்து கச்சா எண்ணெய்-ஐ இறக்குமதி செய்ய வேண்டும், இதனால் இந்தியாவின் நிதிப்பற்றாக்குறை, இறக்குமதி செலவுகளைப் பெரிய அளவில் அதிகரிக்கும். இது இந்தியாவின் வளர்ச்சியைக் கட்டாயம் பாதிக்கும்.
மக்கள் நிலை
கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்க மத்திய அரசு ஏற்கனவே எத்தனால் கலக்கும் அளவீட்டை அதிகரித்துள்ள நிலையில், சர்க்கரை மற்றும் தாணியங்ளை பயோபியூல் ஆக அதிகளவில் உற்பத்தி செய்வதன் வாயிலாக அதிகப்படியான சர்க்கரை இருப்பைக் குறைப்பது மட்டும் அல்லாமல் க்ரூட் ஆயில் இறக்குமதியைக் குறைக்க மத்திய அரசு முயற்சி செய்யலாம்.
உண்மையில் இந்தியாவுக்கு இது மிகவும் நெருக்கடியான காலம் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். 5 மாநில தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பெட்ரோல், டீசல் விற்பனையை அதிகரிக்காமல் உள்ளது. எரிபொருள் விலையை உயர்த்தாமல் இருக்கும் வரையில் தான் இந்தியாவுக்கும், இந்திய மக்களுக்கும் நல்ல காலம், உயர்த்தினால் அவ்வளவுதான்...
More From GoodReturns

நிர்மலா சீதாராமன் எடுத்த 10 ரூபாய் முடிவு.. அடுத்தடுத்து சிக்கல் காத்திருக்கு.. என்னதான் தீர்வு?

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த நாடு!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications