இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளில் கொரோனா தொற்று குறைந்து லாக்டவுன் கட்டுப்பாடுகள் தொடர்ந்து தளர்த்தப்பட்டு, மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர்.
இதனால் அனைத்து வகையான வர்த்தகம், உற்பத்தி, சேவைகள் வளர்ச்சி அடைந்து வரும் காரணத்தால் எரிபொருளின் தேவை கடந்த சில வாரங்களாகத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஆனால் கச்சா எண்ணெய் உற்பத்தியில் பெரிய அளவிலான மாற்றம் செய்யாமல் இருக்கும் காரணத்தால் இதன் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை
எரிபொருள் தேவை பல முன்னணி பொருளாதார நாடுகளில் அதிகரித்துள்ள காரணத்தால் சர்வதேச கச்சா எண்ணெய் சந்தையில் இதன் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் யிலாக இன்றைய வர்த்தகத்தில் ஒரு பேரல் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 69.79 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. இதேபோல் WTI கச்சா எண்ணெய் விலை 66.51 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
70 டாலர் விலை
பிரென்ட் கச்சா எண்ணெய் மற்றும் WTI கச்சா எண்ணெய் ஆகிய இரண்டும், மார்ச் மாத உச்ச அளவை தாண்டியுள்ளது. 70 டாலர் என்ற மெய்யான நிலைக்குக் கச்சா எண்ணெய் வந்துள்ளது என எண்ணெய் தரகு நிறுவனமான PVM-ன் ஸ்டீபன் பெர்ன்நாக் விமர்சனம் செய்துள்ளார்.
அமெரிக்காவில் எண்ணெய் இருப்பு
மேலும் அமெரிக்காவில் பல்வேறு காரணங்களால் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்துள்ள காரணத்தால் அமெரிக்காவின் கச்சா எண்ணெய் இருப்பு என்பது கணிசமாகச் சரிந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெய் விலையில் குறையாமல் தொடர்ந்து உயர்வு பாதையில் இருக்கு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா
இந்நிலையில் இந்தியாவில் சுமார் 6 வாரங்களுக்குப் பின் பெட்ரோல், டீசல் உயர்ந்து வரும் சூழ்நிலையில் கொரோனா தொற்றுக் காரணமாகச் சில மாநிலங்களில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தளர்வுடன் இருந்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்கவிட்டு முழு லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது, பல மாநிலங்கள் முழு லாக்டவுன் அறிவிப்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறது.
எரிபொருள் தேவை குறையும்
இந்தியாவில் லாக்டவுன் அறிவிப்பட்டால் காரணத்தால் போக்குவரத்து, உற்பத்தி, தொழிற்சாலை ஆகியவை முடங்கும், இதனால் எரிபொருள் தேவை என்பது பெரிய அளவில் குறையும்.
கச்சா எண்ணெய் இறக்குமதி
உலகிலேயே அதிகளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் இந்தியாவில் கச்சா எண்ணெய் தேவை குறைந்துள்ளதால் சர்வதேச சந்தையில் தற்போது கச்சா எண்ணெய் விலை குறையத் துவங்கியுள்ளது.
சரியை துவங்கியது
கச்சா எண்ணெய் சந்தையில் மாலை வர்த்தகத்தில் WTI கச்சா எண்ணெய் விலை 0.94 சதவீதம் சரிந்து 65.01 டாலருக்கும், பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 0.80 சதவீதம் குறைந்து 68.45 டாலருக்கும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
பெட்ரோல், டீசல் விலை
இந்தியாவில் லாக்டவுன் விதிக்கப்பட்டால் அதிகளவிலான முதலீடுகள் வெளியேறும், இதனால் ரூபாய் மதிப்பில் பாதிப்பு ஏற்படும். இதேவேளையில் மத்திய அரசு தொடர்ந்து விலை உயர்த்தும் திட்டத்தில் இருக்கும் காரணத்தால் மீண்டும் ப்ரீமியம் பெட்ரோல் விலை 100 ரூபாயும், சாதாரண பெட்ரோல் விலை 95 ரூபாயை தாண்ட அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
More From GoodReturns

இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்-யின் உண்மையான விலை 160 டாலர்.. அதிர்ச்சி அளிக்கும் தகவல்..!!

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

1970-களை விட மோசமான எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும்! உலகிற்கு காத்திருக்கும் பேராபத்து?IEA எச்சரிக்கை?

சரியான நேரத்தில் கைகொடுத்த ரஷ்யா! மங்களூரு துறைமுகத்தில் நங்கூரமிட்ட எண்ணெய் கப்பல்! பெரும் நிம்மதி..!

பெட்ரோல் விலை ரூ.40 வரை உயர வாய்ப்பு? ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்.. மீண்டும் வருகிறதா Oil Bond?

இந்தியாவுக்கு குட்நியூஸ்..!! ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் திடீரென மனம் இறங்கிய ஈரான்..!!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

ஈரான் போர்: சத்தமில்லாமல் லாபம் பார்க்கும் ரஷ்யா!! டிரம்ப் எடுத்த முடிவால் புதினுக்கு கொண்டாட்டம்!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!



Click it and Unblock the Notifications