2014 பெட்ரோல் விலை Vs 2020 பெட்ரோல் விலை! கச்சா எண்ணெய் விலை குறைந்தும் என்ன பயன்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீரின்றி அமையாது உலகு என நம் முன்னோர்கள் சொன்னது போலவே, பெட்ரோல் டீசல் இன்றியும் உலகு அமையாது.

ஒரு லிட்டர் பெட்ரோல், டீசலின் விலை அதிகரித்தால் அது பல்வேறு பொருட்களின் விலையை நேரடியாக அதிகரித்து விடும்.

அந்த அளவுக்கு பொருளாதார சங்கிலிகளில் முக்கிய பங்கு வகிக்கிறது பெட்ரோல் டீசல் விலை. அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பெட்ரோல் டீசல் விலைக்கு அடிப்படையாக இருப்பது கச்சா எண்ணெய்.

 கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

உலக அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால், பெட்ரோல் டீசல் தொடங்கி விமான எரிபொருளான Air Turbine Fuel வரை எல்லா எரிபொருளின் விலையும் அதிகரிக்கும். கச்சா எண்ணெய் விலை குறைந்தால், இந்த எரிபொருட்களின் விலையும் குறைந்து இருக்க வேண்டும் ஆனால் குறையவில்லை.

 2014 Vs 2020 ஒப்பீடு

2014 Vs 2020 ஒப்பீடு

கடந்த 2014-ம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலை எவ்வளவு இருந்தது. அதே காலகட்டத்தில் பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருட்களின் விலை எவ்வளவு இருந்தது. இன்று கச்சா எண்ணெய் விலை எவ்வளவு இருக்கிறது, பெட்ரோல் டீசல் போன்ற எரிபொருட்களின் விலை எவ்வளவு இருக்கிறது என ஒரு குட்டி ஒப்பீடு செய்து பார்ப்போம்.

2014

2014

கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் கச்சா எண்ணெய் விலை சுமாராக 105 டாலரில் வர்த்தகமானது. அப்போது, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ஜூன் 07, 2014 அன்று 74.71 ரூபாயாக இருந்தது. ஒரு லிட்டர் டீசல் விலை ஜூன் 01, 2014 அன்று 61.12 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

2018

2018

கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் கச்சா எண்ணெய் விலை சுமாராக 74 டாலரில் வர்த்தகமாகிக் கொண்டு இருந்தது. அப்போது, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ஜூன் 01, 2018 அன்று 81.28 ரூபாய்க்கு விற்றார்கள். ஒரு லிட்டர் டீசல் விலை ஜூன் 01, 2014 அன்று 70.19 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

2020

2020

இப்போது மார்ச் 09, 2020, பிரண்ட் கச்சா எண்ணெய் விலை 33 டாலருக்கு வர்த்தகமானது. மார்ச் 09, 2020 அன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 70.59 ரூபாய்க்கு விற்றார்கள். சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 63.26 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஆக கச்சா எண்ணெய் என்ன தான் பயங்கரமாக விலை குறைந்தாலும் பெட்ரோல் டீசல் விலை மட்டும் குறையவே இல்லையே, ஏன்..?

இந்த கேள்விக்கு யார் தான் பதில் சொல்வார்கள்? இந்த கணக்கு சரியா நியாய மாரே..? நீங்களே சொல்லுங்க.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

crude oil price crashed but petrol diesel price are not crashed

The international crude oil price has crashed down drastically. But the petrol diesel price are not crashed or not even came down drastically.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X