கச்சா எண்ணெய் உற்பத்தியில் கிங்மேக்கராக இருக்கும் ஈரான் நாட்டின் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் பலியான நேரத்தில் இதன் விலை பெரிதும் பாதிக்கப்பட்டது. இவரது மரணம் கச்சா எண்ணெய் உற்பத்தியிலும், வர்த்தகத்திலும் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தற்போது மொத்தமாக நிலைமை மாறியுள்ளது.
இந்த நிலையில் ஆசியச் சந்தை வர்த்தகத்தில் செவ்வாய்க்கிழமை நிலைமை மொத்தமாக மாறியது என்றால் மிகையில்லை. நேற்றைய வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்வைக் கண்டு உலக நாடுகள் பலரும் அதிர்ச்சி அடைந்த நிலையில், இன்று காலை வர்த்தகத்தில் எண்ணெய் விலைகள் சரிந்தன.

இன்றைய விலை உயர்வுக்கு முக்கியமான காரணம் அமெரிக்கப் பொருளாதார சூழ்நிலையும், கச்சா எண்ணெய் பயன்பாட்டு குறித்த கணிப்பு தான். அமெரிக்கப் பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள் நீண்ட காலத்திற்கு உயர்வாக இருக்கும் என்ற அச்சமும், நுகர்வோர் மற்றும் தொழில்துறையில் கச்சா எண்ணெய் தேவையைக் குறைக்கும் என முதலீட்டாளர்கள் கணித்துள்ளனர்.
இதன் எதிரொலியாகக் கச்சா எண்ணெய் விலை இன்று குறைந்துள்ளது, பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 83.23 டாலராகக் குறைந்து, இது நேற்றைய விலையைக் காட்டிலும் 0.57% சரிவை சந்தித்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலைகள் ஒரு பேரலுக்கு 79.32 டாலர் என 0.6% சரிவைக் கண்டது.
அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி அதிகாரிகள், பணவீக்கம் குறைவதை உறுதிப்படுத்தும் கூடுதல் அறிகுறிகளுக்காகக் காத்திருப்பதாகத் திங்களன்று தெரிவித்ததால், இரு பென்ச்மார்க் கச்சா எண்ணெய் விலை இன்று அதிகரித்துள்ளது. அமெரிக்கா பெடரல் ரிசர்வ் பணவீக்கம் குறையாமல் வட்டி விகிதத்தைக் குறைக்காது.
இதேபோல் அமெரிக்கா தனது வட்டி விகிதத்தைக் குறைக்காவிட்டால் சர்வதேசச் சந்தையில் தற்போது இருக்கும் மந்த நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொருளாதாரத்தில் மந்த நிலை தொடர்ந்தால் கச்சா எண்ணெய் தேவை குறையும், இதன் காரணமாகவே திங்கட்கிழமை உயர்ந்த கச்சா எண்ணெய் விலை செவ்வாய்க்கிழமை குறைந்துள்ளது.
“வட்டி விகிதக் குறைப்புக்கான வாய்ப்பு குறைந்து வருவதால், சந்தையில் பலவீனமான டிமாண்ட் இருக்கும் என்ற அச்சம் தற்போது கச்சா எண்ணெய் விலை சரிவுக்கு வழிவகுத்தது,” என்று ஃபூஜிடோமி செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் பகுப்பாய்வாளர் டோஷிடாகா டசாவா கூறினார்.
அமெரிக்காவில் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவது, உற்பத்தி செலவுகளை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், நுகர்வோர் செலவுகளையும் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக, எரிபொருள் தேவை குறைய வாய்ப்புள்ளது.
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தவோ அல்லது தற்போது இருக்கும் அதிகப்படியான வட்டி விகிதத்தைத் தொடர்ந்து நோக்கமாகக் கொண்டுள்ளது. வட்டி விகிதங்கள் உயரும்போது, கடன் வாங்குவது கடினமாகிறது, இது முதலீடுகளைக் குறைக்கும் மற்றும் நுகர்வோர் செலவு செய்வதையும் குறைக்கும். இதன் விளைவாக, எரிபொருள் தேவை குறைவதற்கு வழிவகுக்கும்.
முதலீட்டாளர்கள் இந்த காரணிகளைக் கருத்தில் கொண்டு எதிர்கால எரிபொருள் தேவை குறைவாக இருக்கும் என்று அச்சத்தால் இதன் மீதான முதலீடுகள் குறைந்து கச்சா எண்ணெய் விலைகள் குறைந்து வருகின்றன.
அமெரிக்காவில் பணவீக்கம் எப்படிக் கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் ஃபெடரல் ரிசர்வ் வங்கி எப்படி வட்டி விகிதங்களை நிர்வகிக்கிறது என்பதைப் பொறுத்து எண்ணெய் விலைகள் எவ்வாறு மாறுபடும் என்பதைக் கண்காணிக்க இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டியது இருக்கும்.
உலகளாவிய புவிசார் அரசியல் நெருக்கடிகள் போன்ற பிற காரணிகளும் எண்ணெய் விலைகளைப் பாதிக்கும். ஆகவே, எதிர்கால எண்ணெய் விலை போக்கு நிச்சயமற்ற நிலையிலேயே உள்ளது. மேலும் கச்சா எண்ணெய் விலையும், ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் ஒன்றுக்கொன்று பிணைந்துள்ளது.
More From GoodReturns

பெட்ரோல், டீசல் விலை குறையாது..? மத்திய அரசின் 10 ரூபாய் விலை குறைப்பு பின் இருக்கும் உண்மை..!!

பேருந்து டிக்கெட் கட்டணங்கள் குறைப்பு: எரிபொருளை சேமிக்க பொது போக்குவரத்தை பயன்படுத்த அறிவுரை!!

பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு என தகவல் பரப்பினால் சட்ட நடவடிக்கை: மத்திய அரசு கடும் எச்சரிக்கை!!

பெட்ரோல், டீசல் விலை குறையுமா? அதிரடியாக வரியை குறைத்த மத்திய அரசு!! வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்!!

இந்தியாவில் மீண்டும் லாக்டவுன் வருகிறதா? மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!!

பெட்ரோல், டீசல் விலை 15 நாட்களுக்கு ஒருமுறை மாறுமா? மதிப்பாய்வு முறையை மாற்றிய அரசு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நயாரா நிறுவன பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டதால் மக்கள் ஷாக்

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த நாடு!! நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை!!

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!



Click it and Unblock the Notifications