சென்னை: ஒரு நாட்டின் பணவீக்கம் உயர்வுக்கு முக்கிய காரணமாக இருக்கும் கச்சா எண்ணெய் விலை கடந்த 6 நாட்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. புதன்கிழமை காலை ஆசியச் சந்தை வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலைகள் முந்தைய நாளை விட சிறிய அளவில் குறைந்துள்ளன.
இந்தியாவில் தேர்தல் முடிந்த நிலையில் பிஜேபி கட்சி பெரும்பான்மையைப் பெற முடியாத காரணத்தால் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயடு ஆகியோரின் கூட்டணியில் NDA 3வது முறையாக ஆட்சியைப் பிடிக்க உள்ளது.

தேர்தல் முடிந்த நிலையில் மக்களின் முக்கிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாக இருக்கும் பெட்ரோல், டீசல் விலை குறைக்க வாய்ப்புகள் உருவாகியுள்ளது. கச்சா எண்ணெய் குறைந்து வரும் வேளையில் புதிய கூட்டணி அரசு எப்போது விலையை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
அமெரிக்க பெட்ரோலியம் நிறுவனத்தின் புள்ளிவிவரங்களின்படி, இந்த 6 நாட்களில் அமெரிக்காவின் கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் கையிருப்பு அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அந்நாட்டின் பணவீக்கம் பெரிய அளவில் குறையும் வாய்ப்பு உருவாகியுள்ளது, இதேபோல் கச்சா எண்ணெய் டிமாண்ட் அளவில் பெரும் தேக்க நிலை உருவாகும் எனவும் கருத்து நிலவுகிறது.
இன்றைய வர்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலைகள் காலை வர்த்தகத்தில் ஒரு பேரலுக்கு 14 சென்ட் (0.2%) சரிந்து $77.38 ஆக இருந்தது. அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலைகள் ஒரு பேரலுக்கு 18 சென்ட் (0.3%) குறைந்து $73.07 ஆக இருந்தது.
கச்சா எண்ணெய் விலை சரிவுக்கு முக்கியமான காரணம் OPEC+ குழு அதன் உற்பத்தி அளவை நிர்ணயம் செய்யும் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2 ஆம் தேதி) நடந்தது. இந்த கூட்டத்தில் உலகளவில் கச்சா எண்ணெய் தேவை வளர்ச்சி பலவீனமடைந்து வருவதற்கான அறிகுறிகள் இருந்தபோதிலும், அக்டோபர் மாதம் முதல் உற்பத்தியை அதிகரிப்பதற்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியான பிறகு திங்கட்கிழமை வர்த்தகத்தில் பிரெண்ட் மற்றும் WTI கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 3 டாலரும், செவ்வாய்க்கிழமை 1 டாலரும் குறைந்த நிலையில், இன்று சில சென்ட்கள் மட்டுமே குறைந்து தொடர்ந்து 6 நாள் சரிவைக் கச்சா எண்ணெய் சந்தை பதிவு செய்துள்ளது.
அமெரிக்க பெட்ரோலியம் நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் அடிப்படையில், கடந்த வாரம் அமெரிக்க கச்சா எண்ணெய், பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பு அதிகரித்துள்ளது. கையிருப்பு அதிகரிப்பு என்பது பொதுவாக டிமாண்ட்-ஐ காட்டிலும் சப்ளை ஆதிகமாக இருக்கும் போது நடக்கும் ஒரு செயல்.
சந்தை ஆய்வாளர்கள் அமெரிக்காவின் கச்சா எண்ணெய் கையிருப்பு 2.3 மில்லியன் பேரலுக்கு குறைவாகவே இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், அமெரிக்க பெட்ரோலியம் நிறுவனத்தின் புள்ளிவிவரங்கள் கடந்த வாரம் மே 31ம் தேதி முடிந்த வாரத்தில் கச்சா எண்ணெய் கையிருப்பு 4.1 மில்லியன் பேரலுக்கும் மேல் அதிகரித்துள்ளதாக டேட்டா காட்டுகிறது.
பெட்ரோல் கையிருப்பும் 4 மில்லியனுக்கும் அதிகமாக அதிகரித்துள்ளது மூலம் அமெரிக்காவின் பணவீக்கம் திறம்படக் கட்டுப்படுத்த முடியும். ஆனால் இதே காலகட்டத்தில் OPEC+ அமைப்புகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து விலையைக் குறைக்கத் திட்டமிடுவதால் இது அமெரிக்காவுக்குப் பின்னடைவாக அமையும்.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications