1 வருடத்தில் இது தான் தரமான சம்பவம்.. கச்சா எண்ணெய் விலை அதிரடி மாற்றம்.. பெட்ரோல்,டீசல் குறையுமா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு ஆண்டில் கச்சா எண்ணெய் விலையானது யாரும் எதிர்பாராத அளவுக்கு உச்சம் தொட்டு, பிறகு சரிவினைக் கண்டு வருகின்றது.

கடந்த மார்ச் மாதம் 129 டாலர்களை எட்டிய கச்சா எண்ணெய் விலையானது, தற்போது 76 டாலர்களாக சரிவினைக் கண்டுள்ளது.

இந்த விலை சரிவானது மேற்கொண்டு சரியுமா? அல்லது மீண்டும் உச்சம் தொடுமா? பெட்ரோல்,டீசல் விலையானது குறையுமா? அடுத்து என்ன நடக்கும் என்ற பலத்த எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.

ரஷ்யா எண்ணெய் மீதான உச்ச வரம்பு நன்மையை விட தீமை தான் அதிகம்.. கிரெம்ளின் எச்சரிக்கை! ரஷ்யா எண்ணெய் மீதான உச்ச வரம்பு நன்மையை விட தீமை தான் அதிகம்.. கிரெம்ளின் எச்சரிக்கை!

இந்தியாவில் தாக்கம் எப்படியிருக்கும்?

இந்தியாவில் தாக்கம் எப்படியிருக்கும்?

சர்வதேச அளவில் நிலவி வரும் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், கச்சா எண்ணெய் தேவையானது சரிவினைக் காணலாம் என்ற அச்சத்தின் மத்தியில் விலையானது பெரியளவில் சரிவினைக் கண்டுள்ளது. இது இந்தியாவில் எந்தளவுக்கு தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதும் பெரியளவில் கேள்வியை எழுப்பியுள்ளது.

தேவை பற்றிய கவலை?

தேவை பற்றிய கவலை?

சர்வதேச பொருளாதாரம் என்பது தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் நிலையில், இது தொடர்ந்து சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்ற அச்சம் இருந்து வருகின்றது. தொடர்ந்து பல்வேறு நாடுகளில் ரெசசன் அச்சம் என்பது இருந்து வருகின்றது. இதற்கிடையில் மானிட்டரி கூட்டத்தில் வட்டி விகிதம் அதிகரிக்கப்படலாம். இது தொடர்ந்து பணவீக்கத்தினை அதிகரிக்க வழிவகுக்கலாம். இது மக்கள் மத்தியில் நுகர்வினை குறைக்க வழிவகுக்கலாம்.

சீனாவின் நிலையற்ற தன்மை

சீனாவின் நிலையற்ற தன்மை

சீனாவில் கொரோனாவின் தாக்கம் நிலவி வரும் நிலையில், அங்கு, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாடுகள் குறைக்கப்பட்டதாக கூறினாலும், பெரியளவில் கொரோனாவின் தாக்கம் குறையவில்லை. இதன் காரணமாக தேவையானது சரியலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா சப்ளையில் பாதிப்பு ஏற்படுமா?

ரஷ்யா சப்ளையில் பாதிப்பு ஏற்படுமா?

ரஷ்யாவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், சப்ளை சரிவர இருக்குமா? என்பதும் பெரும் கேள்வியாக எழுந்துள்ளது. ரஷ்யாவின் மீது ஜி7 மற்றும் சில நாடுகள், கச்சா எண்ணெய்க்கு விலை உச்ச வரம்பினை நிர்ணயம் செய்துள்ளன. அதனை மீறி ரஷ்யா விற்பனை செய்தால், இன்சூரன்ஸ் உள்ளிட்ட சலுகைகள் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது மேற்கொண்டு ரஷ்யாவின் ஏற்றுமதியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

மேற்கண்ட பல காரணிகளுக்கு மத்தியில் பெட்ரோல், டீசல் விலையானது குறையுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. எனினும் இந்தியாவில் விலையானது உச்சம் தொட்ட போதும் கூட விலையானது விலை ஏற்றம் காணவில்லை. இதனை அரசு விலை ஏற்றத்தினை நிறுத்தி வைத்திருந்தது. தற்போது அதனை போல விலை குறையும் போது அதனை கொடுக்காமல் விட்டு விடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

crude oil price fallen to its lowest level this year: Will the price of petrol and diesel go down?

Crude oil price is seen at the level of 76 dollars. It reached $129 last March. Meanwhile, there is an expectation that the price of petrol and diesel will decrease.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X