உக்ரைன் மீது தொடர்ந்து ஏழாவது நாளாக தாக்குதல் நடத்திக் கொண்டுள்ளது. இது வான் வழி, தரை வழி மற்றும் கடல் வழி என மும்முனை பக்கங்களில் இருந்தும் தாக்குதல் நடத்தி வருகின்றது.
நாளுக்கு நாள் போரின் உக்கிரம் அதிகரித்து வரும் நிலையில், அதனை எதிர்கொள்ள முடியாமல் உக்ரைன் தவித்து வருகின்றது.
இந்த விவகாரத்தில், ராணுவ உதவிகள், நிதி உதவிகள் என பலவும் மேற்கத்திய நாடுகள் செய்து வருகின்றன. பிரிட்டன்,அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட பலவும் ரஷ்யாவுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன.
எதனையும் கண்டு கொள்ளவில்லை
சில நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. ரஷ்யா போரை நிறுத்தவில்லை எனில், இன்னும் அதிகமான பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம் என்ற சூழலே நிலவி வருகின்றது. எனினும் அதனை பற்றித் கவலைபடாமல் போரை தொடர்ந்து வருகின்றது ரஷ்யா.
அமெரிக்காவின் தடை
குறிப்பாக அமெரிக்கா ரஷ்யா மீது தொடர்ந்து அடுத்தடுத்த தடைகளை விதித்து வருகின்றது. இதற்கிடையில் அமெரிக்க வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியையும் தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மாற்று வழி என்ன?
ஏற்கனவே இது குறித்து அமெரிக்க அரசு இறக்குமதியாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும், ரஷ்யாவிடம் வாங்குபவர்கள் மாற்று வழிகளை தேடவும் ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. ரஷ்யாவில் இருந்து அமெரிக்கா குறைந்த அளவிலான எண்ணெய் மட்டுமே இறக்குமதி செய்து வருகின்றது. எனினும் இதுவும் ரஷ்யாவுக்கு பெரும் அடியாக இருக்கலாம். ஏற்கனவே கனடாவும் ரஷ்யாவில் இருந்து இறக்குமதியினை தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் இறக்குமதி
ஜனவரி மாதத்தில் அமெரிக்கா ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படவில்லை என்றே தரவுகள் காட்டுகின்றன. எனினும் பிப்ரவரி மார்ச் மாதத்தில், போருக்கு முன்னதாக கணிசமாக இறக்குமதி செய்துள்ளதை தரவுகள் காட்டுகின்றது. வாங்குபவர்கள் வேறு நாடுகளை இறக்குமதிக்காக அணுகும் நிலையில், புதியதாக இறக்குமதிக்கு எந்த முன்பதிவும் செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகின்றது. கடந்த ஆண்டில் அமெரிக்காவின் மொத்த இறக்குமதியில் 3% மட்டுமே அமெரிக்கா இறக்குமதி செய்துள்ளதாக தரவுகள் காட்டுகின்றன.
தொடர் உச்சத்தில் எண்ணெய் விலை
இப்படி ஒவ்வொரு நாடும் தொடர்ந்து ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை தவிர்த்து மற்ற நாடுகளை நாடி வரும் நிலையில், கச்சா எண்ணெய் விலையானது தொடர்ந்து உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. இது இன்னும் தொடர்ந்து அதிகரிக்கலாமோ என்ற அச்சமும் இருந்து வருகின்றது.
WTI கச்சா எண்ணெய் விலை
WTI கச்சா எண்ணெய் விலையானது தற்போது பேரலுக்கு 6.01% அதிகரித்து, 109.61 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது. இது இன்னும் ஏற்றம் காணலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
பிரெண்ட் கச்சா எண்ணெய்
இதே பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது 5.98% அதிகரித்து, 111.22 டாலராக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று சற்று மேலாக தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலையையும் உடைத்துள்ளது. இது இன்னும் அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.
இந்திய கமாடிட்டி சந்தையில் என்ன நிலவரம்?
இந்திய எம்சிஎக்ஸ் சந்தையினை பொறுத்தவரையில் பேரலுக்கு 4.95% அதிகரித்து, 8293 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று கேப் அப் ஆகி மேலாக தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் உச்ச விலையும் உடைத்துள்ளது. இது இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரச்சனை?
இப்படி தொடர்ந்து அதிகரித்து வரும் எண்ணெய் விலையானது, அதிகளவில் இறக்குமதி செய்யும் இந்தியா போன்ற நாடுகள் அதிகளவில் பாதிப்பினை எதிர்கொள்ளலாம். குறிப்பாக சர்வதேச அளவில் எரிபொருள் விலையானது மீண்டும் உச்சம் தொடலாம். மொத்தத்தில் ரஷ்யாவின் பிடிவாத குணத்தால், இன்று சர்வதேச நாடுகள் பெரும்பாலும் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றன.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications