கச்சா எண்ணெய் விலையானது சர்வதேச சந்தையில் இன்று கிடு கிடு ஏற்றத்தினை கண்டுள்ளது. இது சவுதி அரேபியா உள்ளிட்ட மற்ற ஓபெக் நாடுகள் உற்பத்தியினை குறைக்க ஒப்புதல் அளித்துள்ள நிலையில், இது விலை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.
ஓபெக் நாடுகளின் இந்த முடிவானது ஒரு வகையில் எரிபொருட்கள் விலையானது அதிகரிக்க வழிவகுக்கலாம் என்றாலும், மறுபுறம் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளுக்கு தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
உலகம் முழுக்க பிரச்சனை
அமெரிக்கா உள்ளிட்ட முன்னணி பொருளாதார நாடுகள் உள்பட பலவும், ஏற்கனவே பணவீக்கத்தின் பிடியில் சிக்கியுள்ளன. இந்த நிலையில் ஓபெக் நாடுகளின் முடிவால் இன்னும் கச்சா எண்ணெய் விலையானது அதிகரிக்கலாம். இது மேற்கொண்டு பணவீக்கத்தினை ஊக்குவிக்கலாம். ஓபெக் நாடுகளின் இந்த ஒற்றை முடிவால் உலக நாடுகள் முழுக்க பிரச்சனையை எதிர்கொள்ளலாம்.
பணவீக்கத்தின் தாக்கம்
அத்தியாவசிய எரிபொருள் விலை அதிகரிப்பால் உலகம் முழுக்க பல நாடுகளும் பணவீக்கத்தினை எதிர்கொள்ளலாம். ஏற்கனவே நிலவி வரும் வங்கி நெருக்கடி, உக்ரைன் ரஷ்யா பிரச்சனை உள்ளிட்ட பல காரணிகளுக்கு மத்தியில் சப்ளை சங்கிலியில் தாக்கம் இருந்து வருகின்றது. இதுவே பணவீக்கத்தினை தூண்டியுள்ளது. இதனால் பணவீக்கத்தினை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ளது.
ரெசசன் அச்சம் அதிகரிக்கலாம்
இதனால் தேவை குறையலாம். இது பொருளாதார சரிவுக்கு வழிவகுக்கலாம். இது நுகர்வானது சரிய வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் இந்தியா போன்ற மிகப்பெரிய இறக்குமதி நாடுகளின் மீது இது மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது மேற்கொண்டு பணவீக்கம், வட்டி அதிகரிப்பு, இதனால் ரெசசன் என அடுத்தடுத்த பிரச்சனைகளுக்கு வழிவகுக்கலாம். இது வேலையின்மை அதிகரிப்புக்கு வழிவகுக்கலாம்.
தற்போதைய நிலவரம் என்ன?
தற்போது சர்வதேச சந்தையில் WTI கச்சா எண்ணெய் விலையானது (11.20 மணி நிலவரப்படி) பேரலுக்கு 4.48% அதிகரித்து, 79.03 டாலராக அதிகரித்து வர்த்தகமாகி வருகின்றது. இது இன்று அதிகபட்சமாக 81.58 டாலராகவும், குறைந்தபட்சம் 79.01 டாலராகவும் காணப்படுகின்றது.
இதே பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது 4.58% அதிகரித்து, பேரலுக்கு 83.55 டாலராகவும் வர்த்தகமாகி வருகின்றது. இது மேற்கொண்டு விலை அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு மற்ற எரிபொருட்கள் விலையை தூண்டலாம்.
இதுவும் ஆதரவு
ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனைகளுக்கு மத்தியில் மேற்கத்திய நாடுகள் பலவும் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை குறைத்து வருகின்றன. பல நாடுகளும் முற்றிலுமாக தடை செய்துள்ளது. இதனால் ரஷ்யாவினை தவிர்த்து மற்ற எண்ணெய் நாடுகளை அணுக ஆரம்பித்துள்ளன. ஆக இதுவே கச்சா எண்ணெய் விலைக்கு ஆதரவாக அமைந்துள்ளது.
கோல்டுமேன் சாச்சஸ் கணிப்பு
நடப்பு ஆண்டின் இறுதிக்குள் கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு 95 டாலர்களை எட்டலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இது மேற்கொண்டு 2024 இறுதிக்குள் 100 டாலர்களை எட்டலாம் என சமீபத்தில் கோல்டுமேன் சாச்சஸ் மதிப்பிட்டது. ஒபெக் நாடுகளின் முடிவால் இந்த விலை அதனை தாண்டியும் செல்ல வழிவகுக்கலாம். விரைவில் கோல்டுமேன் சாச்சஸ் கணிப்பினை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதாரத்தினை பதம் பார்க்கலாம்
மொத்தத்தில் இனி வரவிருக்கும் மத்திய வங்கி கூட்டத்தில், அமெரிக்காவின் மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு மற்ற நாடுகளை சேர்ந்த மத்திய வங்கிகளும் வட்டி விகிதத்தினை அதிகரிக்க வழிவகுக்கலாம். இது மேற்கொண்டு பொருளாதாரத்தினையும் பதம் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications