அட இது கொரோனாவ விட மோசமா இருக்கே.. சரியும் கச்சா எண்ணெய் விலை..பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா ரணகளத்திலும் கூட மக்களுக்கு ஆறுதல் தரும் விதமாக உள்ள ஒரே விஷயம் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி தான்.

 

ஆனால் அதன் பலனும் எரிபொருள் விலையில் எதிரொலிக்கவில்லை. சரி அதவிடுங்க, கடந்த மூன்று சந்தை தினங்களாக சற்று ஏற்றம் கண்டு வந்த கச்சா எண்ணெய் விலையானது, இன்றும் மீண்டும் சரிய ஆரம்பித்துள்ளதே ஏன்?

கச்சா எண்ணெய் விலையானது ஏப்ரல் மாதத்தில் உற்பத்தி விகிதமான அதிமாக இருந்தது என அறிக்கைகள் வெளியான நிலையில், கச்சா எண்ணெய் விலையானது மீண்டும் இன்று சரிய ஆரம்பித்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை சரிவு

கச்சா எண்ணெய் விலை சரிவு

அதிலும் இது எந்தளவுக்கு அதிகம் எனில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகளவிலான உற்பத்தியை செய்துள்ளதாக எண்ணெய் உற்பத்தி நாடுகள் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதிலும் கடந்த மாதத்தில் கச்சா எண்ணெய் விலையில் விலை யுத்தம் ஏற்படும் அளவுக்கு -37 டாலர் அளவுக்கு சென்று திரும்பியது.

தொடர்ந்து வீழ்ச்சி

தொடர்ந்து வீழ்ச்சி

இந்த நிலையில் West Texas Intermediate கச்சா எண்ணெய் விலையானது 7.74% வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நிலையில் தற்போது 1.51 டாலர் குறைந்து பேரலுக்கு 18.28 டாலராக வர்த்தகமாகி வருகிறது. கடந்த மூன்று தினங்களாகவே பெரிய அளவில் மாற்றம் இல்லாவிட்டாலும், இன்று விலை குறைய ஆரம்பித்துள்ளது.

விலை அதிகரிப்புக்கு காரணம் என்ன?
 

விலை அதிகரிப்புக்கு காரணம் என்ன?

இதே பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது பெரிய அளவில் குறையா விட்டாலும், தற்போது 1.55% குறைந்துள்ளது. அதாவது 0.43 டாலர் குறைந்து, பேரலுக்கு 26.01 டாலர்களாக வர்த்தகமாகி வருகிறது. கடந்த வாரத்தில் அமெரிக்காவில் உற்பத்தி குறைந்ததால் விலை சற்று அதிகரித்தது. அது மட்டும் அல்ல, கொரோனா வைரஸால் லாக்டவுன் செய்யப்பட்டிருந்த நிலையில், சில தளர்வுகளும் அளிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பில் விலை அதிகரித்தது.

பெட்ரோல் டீசல் விலை குறையவில்லை

பெட்ரோல் டீசல் விலை குறையவில்லை

எனினும் வணிகர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாகவும் கொரோனா வைரஸூக்கு முந்தைய நிலைகளுக்குத் திரும்புவதற்கு, அதிக நேரமாகலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் இதில் கவனிக்க தக்க விஷயம் என்னவெனில் என்னதான் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், பெட்ரோல் டீசல் விலை குறைந்தபாடாக இல்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Crude oil prices continuously fall, but here no changes in petrol, diesel prices

Oil prices slashed after 3 days of gains as worries of a supply glut resurfaced on new data showing production levels were high in last april month.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X