அமெரிக்கா ஈரான் பதற்றம்.. இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை உயரும் அபாயம்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கா நடத்திய ராக்கெட் தாக்குதலில், ஈரான் நாட்டின் ராணுவ தளபதி மற்றும் ஈரான் ஆதரவு கிளர்ச்சிக் குழுவின் முக்கிய தளபதி உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்கா-ஈரான் இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

எண்ணெய் வளம் மிக்க ஈரான் நாட்டின் ராணுவ தளபதியை கொன்றுவிட்டதாக அமெரிக்கா கூறியதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தாறுமாறான ஏற்றம் கண்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று மட்டும் விலை 2 சதவிகிதம் அதிகரித்து பேரலுக்கு 70 டாலர்களுக்கும் மேலாக வர்த்தகமாகி வருகிறது.

விலை உயர்வுக்கு முக்கிய காரணம் இதுதான்

விலை உயர்வுக்கு முக்கிய காரணம் இதுதான்

அமெரிக்கா ஈரான் பதற்றத்தால் மத்திய கிழக்கு பகுதியில் மோதல் உருவாகும் என முதலீட்டாளர்கள் அச்சமடைந்ததே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணம் எனவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் 71 டாலர்களுக்கும் மேலாக வர்த்தகமாகிய கச்சா எண்ணெய் விலையானது தற்போது தான் மீண்டும் இந்த உச்சத்தை தொட்டுள்ளது.

தாக்குதல் உறுதி

தாக்குதல் உறுதி

அமெரிக்காவின் வான் தாக்குதலில் ஈரானிய புரட்சி பாதுகாப்பு படையின் குத்ஸ் படைப்பிரிவு தளபதி காசிம் சுலைமணி ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் முக்கிய கமெண்டர் அபு மகாதி உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர். சமீபத்தில் நடந்த அமெரிக்க தூதரக தாக்குதலை இந்த ராணுவக்குழு நடத்தியதாக அமெரிக்கா கூறி வந்தது. ஈரான் ராணுவ தளபதி கொல்லப்பட்டதை உறுதி செய்த பென்டகன், அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவின் பேரில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக உறுதி செய்துள்ளது.

கச்சா எண்ணெய் உற்பத்தி

கச்சா எண்ணெய் உற்பத்தி

கச்சா எண்ணெய் உற்பத்தியில் உலக அளவில் முக்கியமாக இருக்கும் நாடுகளில் ஈரான் மற்றும் ஈராக் உள்ளிட்ட நாடுகளும் ஒன்றாகும். ஆக இப்படி ஒரு சூழ்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் போர் உருவாகலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை திடீரென அதிகரித்து வருகிறது.

பங்கு சந்தைகள் வீழ்ச்சி

பங்கு சந்தைகள் வீழ்ச்சி

இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றம், இந்திய பங்குச் சந்தையில் மட்டுமின்றி, மற்ற நாடுகளின் பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது, பங்குகள் விலை குறைந்தன. மும்பை பங்குச்சந்தையில் எண்ணெய் நிறுவனப் பங்குகள் அனைத்தும் திடீரென விலை குறையத் தொடங்கியுள்ளன. மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் 72.02 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கலாம்

கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கலாம்

மத்திய கிழக்கு பகுதிகளில் நிலவி வரும் பதற்றங்களால் எண்ணெய் விலை உயரும் போது பெரும்பாலான ஆசிய நாணயங்கள் சரிவை சந்திக்கும். இந்த நிலையில் இந்திய ரூபாயின் மதிப்பும் 72.02 ரூபாயாக வீழ்ச்சி கண்டு வர்த்தகமாகி வருகிறது. அமெரிக்கா ஈரான் இடையே அடுத்து வரும் நாட்களில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கும் பட்சத்தில், கச்சா எண்ணெய் விலையில் இன்னும் பெரிய அளவுக்கு ஏற்றம் காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த கட்ட நடவடிக்கை

அடுத்த கட்ட நடவடிக்கை

அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் ஏதாவது பதில் நடவடிக்கையில் இறங்கி, ஈராக், ஏமன், சிரியா, லெபனான் ஆகியவற்றைத் தாக்கினால் கச்சா எண்ணெய் விலை மேலும் கடுமையாக உயர வாய்ப்புள்ளது. ஆக ஈரானின் நடவடிக்கையைப் பொறுத்தே அடுத்த கட்டமாக சந்தையின் நகர்வுகள் இருக்கும் என்றும் பொருளாதார நிபுணர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இந்தியாவுக்கு பாதிப்பு அதிகம்

இந்தியாவுக்கு பாதிப்பு அதிகம்

இந்த பதற்ற நிலையால் இந்த இரு நாடுகள் மட்டும் அல்லாது, இந்தியா போன்றதொரு எண்ணெய் இறக்குமதிக்காக மற்ற நாடுகளை சார்ந்திருக்கும் நிலையில், இந்தியா மேலும் பொருளாதார வீழ்ச்சியை சந்திக்ககூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் போதுமான எண்ணெய் கிடைக்குமா என்பது சந்தேகமான நிலையில், கச்சா எண்ணெய் விலையும் கடுமையான ஏற்றம் காணும் என்றும் கருதப்படுகிறது. இதனால் எண்ணெய்க்காக அதிக செலவிடக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார தடை

பொருளாதார தடை

ஏற்கனவே அமெரிக்காவுக்கும் ஈரானிற்கும் உள்ள பிரச்சனை காரணமாக ஈரான் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டது. அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். ஈரானிடம் எண்ணெய் வாங்கி வரும் மற்ற நாடுகள், இனி யாரும் ஈரானிடம் எண்ணெய் வாங்க கூடாது என்றும் கூறியிருந்தார். அதையும் மீறி ஈரானிடம் எண்ணெய் வாங்கினால், மற்ற நாடுகளின் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படலாம் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது சவுதியிடம் எண்ணெய் வாங்கி வருகிறது இந்தியா. இதனால் ஈரான் தனது கிடைக்ககூடிய பெரும் வருவாயை இழந்துள்ளது என்றே கூறலாம்.

இனி விலை எப்படி இருக்கும்?

இனி விலை எப்படி இருக்கும்?

எண்ணெய் உற்பத்தி நாடுகளில் நிலவி வரும் இந்த பதற்ற நிலையால், நடப்பு 2020ம் ஆண்டில் கச்சா எண்ணெய் விலையானது 65 டாலர் முதல் 75 டாலர் வரை செல்லலாம் என்றும் ஆலோசனை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே 2019ல் 20 சதவிகிதம் ஏற்றம் கண்டுள்ள கச்சா எண்ணெய் விலையானது, இந்த ஆண்டும் இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இது இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையை அதிகரிக்க கூடும் என்ற அச்சமும் நிலவி வருகிறது.

இந்திய சந்தையில் விலை

இந்திய சந்தையில் விலை

சர்வதேச சந்தையில் விலை அதிகரிப்பை ஒட்டி, இந்திய சந்தையிலும் விலை தற்போது 4616 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது. எனினும் இன்று காலை 4,670 ரூபாய் வரை சென்று தற்போது சற்று குறைந்துள்ளது. எனினும் இது ரூபாயின் வீழ்ச்சி, சர்வதேச நிலவரம் காரணமாக விலை இன்னும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கச்சா எண்ணெய் விலையேற்றம் காரணமாக பெட் ரோல் டீசல் விலையும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Crude oil prices increased 2% to $70 a barrel as Us Iran Tensions

Crude oil prices increased 2% to $70 a barrel as Us Iran Tensions. Its may further increase to $65 - $75 in 2020. Almost 20% gain in 2019 year.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X