கச்சா எண்ணெய் விலை 3% உயர்வு.. பெட்ரோல், டீசல் விலை உயருமா..?

டெல்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு, 3% அதிகரித்துள்ளது.

இது சீனா வெளி நாட்டு பயணிகளுக்கான கட்டுப்பாட்டில் தளர்வினை அறிவித்துள்ளது. சீனாவுக்கு வரும் பயணிகளுக்கும் பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு புறம் கொரோனா பரவும் அச்சம் என்பது அதிகளவில் இருந்தாலும், மறுபுறம் 3 ஆண்டுகளுக்கு பிறகு கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சீனாவில் உள்ள வெளி நாட்டவர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கும், வெளி நாடுகளில் இருந்து சீனாவுக்கும் படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

தேவை அதிகரிக்கலாம்

தேவை அதிகரிக்கலாம்

சீனாவின் இத்தகைய அறிவிப்புகளுக்கு மத்தியில் எரிபொருள் தேவையானது அதிகரிக்கலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இதற்கிடையில் தான் திரவத் தங்கத்தின் விலையானது (கச்சா எண்ணெய்) இன்று சர்வதேச சந்தையில் 3% மேலாக அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் 2020-க்கு பிறகு முதல் முறையாக சீனா தனது கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது.

உச்சம் தொடும் கச்சா எண்ணெய் விலை

உச்சம் தொடும் கச்சா எண்ணெய் விலை

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனா தனது கடுமையான கட்டுப்பாட்டில், சில ஆண்டுகளுக்கு பிறகு தளர்வினை அளித்துள்ளது. இதன் காரணமாக எரிபொருள் தேவையானது அதிகரிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையில் தான் கச்சா எண்ணெய் விலையானது உச்சம் தொட ஆரம்பித்துள்ளது.

கச்சா எண்ணெய்

கச்சா எண்ணெய்

இதில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு 80.94 டாலராகவும், இதே டபள்யூடிஐ கச்சா எண்ணெய் விலையானது, 76.17 டாலராகவும் காணப்பட்டது.

அமெரிக்க மத்திய வங்கியின் நடவடிக்கையும் கச்சா எண்ணெய் விலையை ஊக்குவிக்கலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கச்சா எண்ணெய் விலை சரிவு

கச்சா எண்ணெய் விலை சரிவு

கடந்த வாரத்தில் கச்சா எண்ணெய் விலையானது 8% மேலாக குறைந்தது. இது ரெசசன் அச்சத்தின் மத்தியில், கச்சா எண்ணெய் இருப்பும் உச்சத்தில் இருந்து வருகின்றது. இதற்கிடையில் கச்சா எண்ணெய் விலையானது தொடர்ந்து ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகின்றது. இது கச்சா எண்ணெய் விலைக்கு ஆதரவாக உள்ளது.

இறக்குமதி அதிகரிக்கலாம்

இறக்குமதி அதிகரிக்கலாம்

பொருளாதாரம் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், 2022ம் ஆண்டின் இறக்குமதி வளர்ச்சி விகிதத்தில் இருந்து, நடப்பு ஆண்டில் 20% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கோண்டு கச்சா எண்ணெய் விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+