கச்சா எண்ணெய் விலை தடாலடி உயர்வு.. பணவீக்கத்திற்கு வேட்டு, ரெப்போ விகிதம் குறைவது கடினம்..!!

சென்னை: ஈரான் நாட்டின் இஸ்ஃபஹான் விமான நிலையம் அருகே வெடிப்புச் சத்தம் கேட்டது அந்நாட்டில் மட்டும் அல்லாமல் உலக நாடுகளையும் அதிர்ச்சி அடைய செய்தது. கடந்த இரண்டு மாதமாக இஸ்ரேல் - ஈரான் மத்தியில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் ஈரான் சில நாட்களுக்கு முன்பு பெரும் தாக்குதலை இஸ்ரேல் மீது நடத்தியது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்க தயாராகி வரும் வேளையில் ஈரான் நாட்டில் நடந்துள்ள குண்டு வெடிப்பு சத்தம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த குண்டு வெடிப்பு நேரத்தில் அமெரிக்க அதிகாரி ஒருவர் ஆஸ்திரேலியா நாட்டின் ஏ.பி.சி சேனலிடம் இஸ்ரேல் ஈரான் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்தார். அடுத்த சில நிமிடங்களில், ஆசிய சந்தை வர்த்தகம் மொத்தமும் தலைகீழாக மாறியது, சர்வதேச சந்தையில் பெரும் பரபரப்பு நிலவி வந்தது.

கச்சா எண்ணெய் விலை தடாலடி உயர்வு.. பணவீக்கத்திற்கு வேட்டு, ரெப்போ விகிதம் குறைவது கடினம்..!!

பங்குச்சந்தை சரிவு, தங்கம் விலை உயர்வு தாண்டி கச்சா எண்ணெய் விலை உயர்வு பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

கச்சா எண்ணெய் விலை உயர்வு: ஈரான் நாட்டில் நடந்துள்ள குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து, ஆசிய சந்தை நேரத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 3 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து ஒரு பீப்பாய்க்கு சுமார் $90 ஐ எட்டியுள்ளது.

இதேபோல் WTI கச்சா எண்ணெய் விலை 3 டாலரும், ஈரான் நாட்டின் மர்பன் கச்சா எண்ணெய் விலை 90 டாலர் அளவீட்டை தொட்டு 88.95 டாலருக்கு சரிந்துள்ளது. இஸ்ரேல் - ஈரான் பிரச்சனையால் பெரும்பாலான கச்சா எண்ணெய் எரிபொருள் ஆகியவை விலை உயர்ந்துள்ளது.

தங்கம் விலை உச்சம்: உலகளவில் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் தங்கத்தின் விலையும் வரலாற்று சாதனை உயர்வைத் தொட்டுள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,400 டாலரை கடந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

பங்குச் சந்தைகள் சரிவு: ஈரானில் ஏற்பட்ட இந்த பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து, ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் முக்கிய பங்குச் சந்தை குறியீடுகள் சரிவைக் கண்டன.

உலகப் பொருளாதாரத்திற்கு சிக்கல்: கச்சா எண்ணெய் விலை உயர்வு வெறும் பெட்ரோல், டீசல் விலையை மட்டும் உயர்த்தாது, ஒவ்வொரு நாட்டிலும் விலைவாசியை உயர்த்தி பணவீக்கத்தை அதிகரிக்கும். இது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும்.

இதைவிட முக்கியமாக அமெரிக்கா அந்நாட்டின் பணவீக்கம் 2 சதவீதத்தில் தொடர்ந்து நிலைபெரும் என்ற நம்பிக்கை வந்தால் மட்டுமே வட்டி விகிதத்தை குறைப்பதாக பெடரல் ரிசர்வ் முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் முடிவை பின்பற்றி ஐரோப்பா வட்டி விகிதத்தை குறைக்க முடிவு செய்துள்ளது. இது சங்கிலி தொடர்ச்சியாக இந்தியாவின் ரெப்போ விகிதம் வரையில் பாதிக்கும்.

உலக கச்சா எண்ணெய் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கு மத்திய கிழக்கு பகுதியிலிருந்தே கிடைப்பதால், அப்பகுதியில் ஏற்படும் எந்த ஒரு பிரச்சனையும் உலக எரிசக்தி சந்தையை பெரிதும் பாதிக்கிறது. கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது உலகப் பொருளாதாரத்திற்கு பெரும் சவாலாக அமையும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+