உலகின் முன்னணி கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகளில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக, திங்கள்கிழமை கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்தன. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் பலியான நிலையிலும், சவுதி அரசரின் ஜப்பான் பயணத்தின் திடீர் ரத்தும் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
இஸ்ரேல் - ஈரான் மத்தியில் கடுமையான பிரச்சனை நிலவி வரும் வேளையில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் பெரும் சர்ச்சையாக்கியுள்ளது. உலகளவில் கச்சா எண்ணெய் தேவையின் அளவு சிறிய அளவில் குறைந்திருந்தாலும், முழுமையாக அதன் பயன்பாட்டைக் குறைந்தபட்சம் அடுத்த 30 வருடத்திற்கு நீக்க முடியாது.

இந்த சூழ்நிலையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் உலக நாடுகளின் பொருளாதாரத்தைப் பெரிய அளவில் பாதிக்கும். குறிப்பாகக் கச்சா எண்ணெய் உற்பத்தியில் கிங்மேக்கராக இருக்கும் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் பலியான நேரத்தில் பெரிதும் பாதிக்கப்படும்.
சர்வதேச சந்தையில் முக்கிய பென்ச்மார்க் எண்ணெய் ஆக இருக்கும் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 32 சென்ட் (0.4%) அதிகரித்து $84.30 ஆக உயர்ந்தது. இது மே 10 ஆம் தேதிக்குப் பின்பு பதிவான அதிகபட்ச விலையாகும்.
இதேபோல் அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 5 சென்ட் உயர்ந்து 80.11 டாலராக அதிகரித்தது. இது மே 1 ஆம் தேதிக்குப் பின்பு பதிவான அதிகபட்ச விலையாகும். பிரெண்ட் கச்சா எண்ணெய் மற்றும் WTI கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி-யின் மரணம் முக்கியமான காரணமாகும்.
ஞாயிற்றுக்கிழமை ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக ஈரான் அதிகாரிகள் முதலில் தெரிவித்தனர். மலை பகுதியில் நிலவும் கடுமையான சூழ்நிலை இருந்த போதிலும் மீட்பு குழுக்கள் விபத்து நடந்த இடத்தைக் கண்டறிந்த பிறகு, ராய்ஸியும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமிராப்தொல்லாஹியான்-ம் உயிருடன் இருப்பதற்கான நம்பிக்கை குறைந்து வருவதாகத் திங்கள்கிழமை காலை தகவல்கள் வெளியானது.
அதன் பின்பு சில மணிநேரத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் பலியான செய்து உறுதி செய்யப்பட்டது.
இதற்கிடையில், சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான், அவரது தந்தையும், அந்நாட்டின் அரசருமான சல்மான் உடல்நலக் குறைவு காரணமாகத் திங்கள்கிழமை திட்டமிடப்பட்டு இருந்த வேளையில், முகமது பின் சல்மான் ஜப்பான் பயணத்தை திடீரென ஒத்தி வைத்தார் என்று ஜப்பானின் தலைமை செயலர் யோஷிமாசா ஹயாஷி தெரிவித்தார். இந்த செய்தியும் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரண செய்தியும் கச்சா எண்ணெய் சந்தைக்கு ஷாக் கொடுத்துள்ளது.
88 வயதான மன்னர் சல்மான் நுரையீரல் அழற்சிக்கான சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார் என்று சவுதி அரேபிய அரசு செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. இதைத் தொடர்ந்து முகமது பின் சல்மான் ஜப்பான் பயணம் ரத்தானது குறித்து ஜப்பான் நாடாளுமன்றத்தின் தலைமைச் செயலாளர் Yoshimasa Hayashi அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.
IG மார்க்கெட்ஸ் பகுப்பாய்வாளர் டோனி சைக்காமோர் கூறுகையில், WTI கச்சா எண்ணெய் விலை 200 நாள் சராசரி விலையான 80.02 டாலர் அளவீட்டைத் தாண்டிய பின்பு 83.50 டாலர் வரை மேலும் உயரும் என்று கூறியுள்ளார்.
கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டு உள்ள உயர்வால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது. ஆனால் பொதுத் தேர்தல் காரணமாக தற்போது விலை உயராது, இதேவேளையில் தேர்தல் முடிவுகள் வெளி வந்த பின்னர் விலை உயர்த்தப்படலாம்.


Click it and Unblock the Notifications