உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால் தொழில்துறை, போக்குவரத்து என இயல்பு வாழ்க்கை முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் தற்போது கச்சா எண்ணெய் தேவை என்பது அதிகளவில் குறைந்துள்ளது.
இதன் எதிரொலியாக கச்சா எண்ணெய் மீதான முதலீடு குறைந்துள்ளது மட்டும் அல்லாமல் வர்த்தக போட்டியின் காரணமாக OPEC அமைப்பில் இருக்கும் நாடுகள் அனைத்தும் ரஷ்யாவிற்கு எதிராக சந்தையில் அதிகளவிலான கச்சா எண்ணெய் உற்பத்தி செய்வதால் கச்சா எண்ணெய் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு தொடர் சரிவை எட்டி வருகிறது.
இந்த நிலை அடுத்த சில வாரங்களுக்கு நிச்சயம் மாறப்போவது இல்லை என்பது உறுதியாகியுள்ள நிலையில், கச்சா எண்ணெய் ஒரு பேரல் 20 டாலருக்கும் குறைவான விலையில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் இந்தியாவில் பெட்ரோல் விலை குறையுமா..?
கச்சா எண்ணெய் விலை
புதன்கிழமை வர்த்தகத்தில் WTI கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 23.41 டாலருக்கு வர்த்தகமானது. இதேபோல் பிரென்ட் கச்சா எண்ணெய் ஒரு பேரல் விலை 26.02 டாலர் என்கிற 16 வருட சரிவில் வர்த்தகமானது. இது 2008இல் ஒரு பேரல் 147 டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விலை அதிமாக இருந்த போது இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை என்னவோ அதே தான் இப்பவும் இருக்கிறது.
கணிப்புகள்
கச்சா எண்ணெய் சந்தை குறித்து கோல்டுமேன் சாச்சஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய சரிவை எதிர்கொள்ளும். இதுமட்டும் அல்லாமல் அல்லாமல் தற்போது நிலவும் வர்த்தகம் மற்றும் உற்பத்தி சூழ்நிலை தொடர்ந்து நிலவினால் கண்டிப்பாக கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 20 டாலர் என்கிற மோசமான நிலையை அடையும்.
அமெரிக்கா
கடந்த 15 வருடத்தில் அமெரிக்கா தொடர்ந்து தனது கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து இதன் முலம் அதிகளவிலான வர்த்தகத்தையும் வருமானத்தையும் பெற்று வருகிறது. அமெரிக்காவின் வர்த்தக வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் ரஷ்யா அரபு நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைப்பிற்கு ஒப்புக்கொள்ளவில்லை. இதன் காரணமாகவே அரபு நாடுகள் விலையை குறைத்து ரஷ்ய வர்த்தகத்தை வீழ்த்த உற்பத்தியை அதிகரித்தது.
ஆனால் இப்போது எல்லோருக்கும் பெரிய அளவிலான வருமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் அதிகம் பாதித்தது, அமெரிக்கா தான் என்றால் மிகையில்லை.
இதுதான் நல்லது..
சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பதற்றம், பொருளாதார சிக்கல்கள் மற்றும் சரிவுகள் மற்றும் கொரோனா பாதிப்பு ஆகியவை தற்போது உலக நாடுகளை பெரிய அளவில் பாதித்து வரும் நிலையில் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருப்பது நல்லது தான். உலகில் தற்போது ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சனைகளும் தீரும் வரையிலும் கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தாலும் நன்மை தான் என கிரிசில் அமைப்பு தெரிவித்துள்ளது.
உற்பத்தி
இதில் என்ன கொடுமை என்றால் ஏப்ரல் மாத துவக்கத்தில் இருந்து அரபு நாடுகள் தங்களது உற்பத்தியை தற்போதைய அளவை விடவும் அதிகமாக அளவில் உற்பத்தி செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இது நடந்தால் ஏப்ரல் மாதத்தில் கச்சா எண்ணெய் 20 டாலருக்கும் குறைவான விலைக்கு செல்லும்.
அப்போதாவது இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை குறையுமா..?
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications