இந்தியாவுக்கு விழுந்த பேரிடி.. கச்சா எண்ணெய் விலை 97 டாலர்.. அமெரிக்காவின் வெறியாட்டத்தின் எதிரொலி..!

அமெரிக்க ராணுவம் கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு பின்பு ஈரான் மீது பெரும் தாக்குதலை தொடர்ந்துள்ளது, நேற்று இரவில் இருந்து சுமார் 100க்கும் அதிகமான இடத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதில் ஈரான் நாட்டில் இருக்கும் இரண்டு பெரிய டேங்கர்கள் மீது தாக்கப்பட்டு அந்நாட்டின் எரிபொருள் சப்ளை மற்றும் சேமிப்பில் பெரும் ஓட்டையை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்கா - ஈரான் மத்தியிலான பேச்சுவார்த்தை, அமைதி தொடர்பான நம்பிக்கை மொத்தமாக குறைந்துள்ளது. மேலும் இப்புதிய போர் தாக்குதல் மூலம் வளைகுடாவில் இருந்து வரும் எரிபொருள் சப்ளை கூடுதலாக பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்தியாவுக்கு விழுந்த பேரிடி.. கச்சா எண்ணெய் விலை 97 டாலர்.. அமெரிக்காவின் வெறியாட்டத்தின் எதிரொலி..!

இதனால் கச்சா எண்ணெய் விலை கடந்த 3 நாட்களாக அதிரடியாக உயர்ந்து இன்றைய வர்த்தகத்தில் மட்டும் 2 சதவீதத்திற்கு மேல் உயர்ந்து 97 டாலர் அருகில் வந்துள்ளது. விரைவில் 100 டாலர் என்ற அளவீட்டை தொடுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை பியூச்சர்ஸ் சந்தை ஒப்பந்தம் ஒரு பேரல் 96.65 டாலருக்கும், WTI கச்சா எண்ணெய் விலை 92 டாலர் வரையில் உயர்ந்துள்ளது. வளைகுடா நாடுகளின் சப்ளை தட்டுப்பாட்டை பிற நாடுகள் பூர்த்தி செய்ய நினைத்தாலும் போதுமானதாக இல்லை என்பதே தற்போதைய பிரச்சனையாக உள்ளது.

இதனால் சப்ளை டிமாண்ட் பிரச்சனை உருவாகி தற்போது விலை தாறுமாற உயர துவங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது எல் நினோ-வின் தாக்கம் எதிரொலிக்க துவங்கியுள்ளது சர்க்கரை, அரசி, கோதுமை-யில் துவங்கி வெங்காயம், தக்காளி வரையில் உணவு பொருட்களின் விலை உயர்ந்து நாட்டின் பணவீக்கத்தை அதிகரித்த துவங்கியுள்ளது.

இத்தகைய நிலையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலர் வரையில் உயர்ந்தால் நாட்டின் அன்னிய செலவணி இருப்பு குறைந்து ரூபாய் மதிப்பு வேகமாக சரியும். ஏற்கனவே வங்கிகள் FCNR வைப்பு நிதி மீதான வட்டி விகிதத்தை குறைத்த காரணத்தால் டாலர் வரத்து குறையும் என கணிக்கப்பட்டு இருக்கும் வேளையில் கச்சா எண்ணெய் உயர்வு மூலம் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கும் மிகவும் மோசமான பாதிப்பை உருவாக்கும் என்ற அச்சம் உள்ளது.

ஈரான் தரப்பில் கூறுகையில் அமெரிக்காவின் இத்தாக்குதல் மிகப்பெரியதாக இருப்பதாக கூறிபியுள்ளது, இதேவேளையில் அமெரிக்க சென்டரல் கமெண்ட் வெளியிட்டுள்ள செய்தியில், சமீபத்தில் ஈரானின் IRGC படைகள் சரக்கு கப்பல்கள் மீது செய்த தாக்குதல் காரணமாக தற்போதைய தாக்குதல் நடப்பதாக தெரிவித்துள்ளது.

மேலும் இந்த தாக்குதல் தொடருமா அல்லது நிறுத்தப்படுமா என்பது இதுவரையில் தெரியவில்லை. தற்போதைய சூழ்நிலையில் கச்சா எண்ணெய் விலை என்பது ஹார்முஸ் வழித்தடத்துடன் இணைக்கப்பட்ட ஒன்றாக மாறியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+