சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையானது 2 மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தினை எட்டியுள்ளது. இது இன்னும் எந்த மாதிரியான தாக்கத்தினை ஏற்படுத்துமோ? என்ற அச்சத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
இது ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ரஷ்ய எண்ணெய்-க்கும் தடை விதிக்க ஒப்புக் கொண்டுள்ளதையடுத்து விலையானது உச்சம் எட்டியுள்ளது.
ஐரோப்பிய நாடுகளின் இந்த நடவடிக்கையானது ரஷ்யாவினை குறி வைத்து திட்டமிடப்பட்டிருந்தாலும், இது உலக நாடுகளில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை
ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இது இன்றளவிலும் பிரச்சனையாகவே உள்ளது.
இதற்கிடையில் தான் சர்வதேச சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது பேரலுக்கு 122 டாலர்களை எட்டியுள்ளது. இது ஐரோப்பிய நாடுகளின் தடைக்கு மத்தியில் ஏற்றம் கண்டு வருகின்றது. இந்த நாடுகள் ரஷ்யாவில் இருந்து பெரும்பகுதி எண்ணெய்-ஐ இறக்குமதி செய்கிறது.
இறக்குமதி
இந்த தடை காரணமாக ரஷ்யாவின் 75% எண்ணெய் இறக்குமதியில் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஆசிய நாடுகளுக்கு நீண்ட வழிகளில் செல்ல கட்டாயப்படுத்துகிறது, மேற்கு ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய்க்கான மிகப்பெரிய சந்தையாக இந்தியா உள்ளது.
இந்தியா அதிகம்
இந்தியாவில் கடல் வழியாக இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் இறக்குமதியானது, ஏப்ரல் மாதத்தில் ஒரு நாளைக்கு 4.8 மில்லியன் பேரல்களை தாண்டியுள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் 5% மேலாக இருந்தது. இது கடந்த ஆண்டில் 1% கீழாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.
இறக்குமதி சரிவு
சர்வதேச அளவில் எண்ணெய் விலையானது உச்சத்தினை எட்டியுள்ள நிலையில், 2014 - 15ம் நிதியாண்டில் இருந்து உள்நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைந்து, 2022ம் நிதியாண்டில் வெறும் 28.4 மில்லியன் டன்னாக குறைந்துள்ளது. இதே இந்தியாவிலும் உற்பத்தியானது 11.8% சரிவினைக் கண்டு, 32.2 MT குறைந்துள்ளது.
எச்சரிக்கை
எனினும் ஐரோப்பிய ஒன்றிய குழு தடை விதிக்க திட்டமிட்டாலும், ஹங்கேரி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த தடை ஒப்பந்தம் அமலுக்கு வரவேண்டுமெனில், 27 நாடுகளும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
முன்னதாக போலந்து, பல்கேரியா மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு எரிவாயு விநியோகத்தினை குறைத்த பின்னர், டச்சு எரிசக்தி நிறுவனத்திற்கு பைப் மூலமாக ஏற்றுமதி செய்வதை ரஷ்யா நிறுத்தபோவதாக எச்சரித்துள்ளது.
கட்டண விதிமுறைகள்
ரஷ்யாவின் புதிய கட்டண விதிமுறைகளை ஏற்க மறுத்த நிலையில், ரஷ்யா இதுபோன்ற எச்சரிக்கைகளை விதித்து வருகின்றது. இப்படி பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலையானது பெரும் உச்சத்தினை எட்டியுள்ளது.
More From GoodReturns

பெட்ரோல் விலை ரூ.40 வரை உயர வாய்ப்பு? ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்.. மீண்டும் வருகிறதா Oil Bond?

இந்தியா வாங்கும் கச்சா எண்ணெய்-யின் உண்மையான விலை 160 டாலர்.. அதிர்ச்சி அளிக்கும் தகவல்..!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

இந்தியாவுக்கு குட்நியூஸ்..!! ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் திடீரென மனம் இறங்கிய ஈரான்..!!

1970-களை விட மோசமான எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும்! உலகிற்கு காத்திருக்கும் பேராபத்து?IEA எச்சரிக்கை?

சரியான நேரத்தில் கைகொடுத்த ரஷ்யா! மங்களூரு துறைமுகத்தில் நங்கூரமிட்ட எண்ணெய் கப்பல்! பெரும் நிம்மதி..!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!



Click it and Unblock the Notifications