உலகில் கொரோனாவின் தாக்கம் எப்போது ஆரம்பித்ததோ அதிலிருந்து கச்சா எண்ணெய் விலையும் தாறுமாறாக சரிய ஆரம்பித்தது. இதனை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக சவுதியும் ரஷ்யாவும், அப்போது போர்கொடி தூக்கின.
இதற்கிடையில் அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் அதில் தலையிட்டு அந்த பிரச்சனியயை சற்றே தீர்த்து வைத்தார்.
எனினும் சீனாவில் தோன்றிய இந்த வைரஸ், தற்போது உலக நாடுகளில் பெரும்பாலான நாடுகளில் பரவியுள்ளது. இதனால் கச்சா எண்ணெய் நுகர்வானது வெகுவாக சரிய ஆரம்பித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் உற்பத்தி வரலாறு காணாத அளவு சரிந்தது.
சுத்திகரிப்பாளர்களுக்கான விலை அதிகரிப்பு
இதனால் கச்சா எண்ணெய் விலையானது மைனஸில் சென்று பின் திரும்பியது. இந்த நிலையில் எண்ணெய் உற்பத்தியாளர்கள் பெரும் நஷ்டத்தினை கண்டு வந்தனர். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாது உலகளவில் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கான விலைகளை சவுதி அரேபியா உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலையானது அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு
இந்த நிலையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலையானது தற்போது 3.63% அதிகரித்து, பேரலுக்கு 30.80 டாலராக அதிகரித்துள்ளது. இதே அமெரிக்காவின் டபள்யூடிஐ கச்சா எண்ணெய் விலையானது கிட்டதட்ட 8% அதிகரித்து 25.86 டாலர்களாக அதிகரித்தும் வர்த்தகமாகி வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் கச்சா எண்ணெய் விலையில் விலை யுத்தத்தினை தூண்டும் விதமாக கச்சா எண்ணெய் விலையை குறைத்து விற்க போவதாக எண்ணெய் ஜாம்பவான் ஆன, சவுதி அறிவித்தது.
உற்பத்தி குறைப்பு தான் காரணம்
ஆனால் தற்போது ரஷ்யாவுடன் ஏற்பட்டுள்ள புரிந்துணர்வால் மீண்டும் தனது முடிவினை மாற்றிக் கொண்டுள்ளது. இந்த நிலையில் தான் தற்போது சுத்திகரிப்பாளர்களுக்கு அளிக்கும் எண்ணெய் விலையினை அதிகரித்துள்ளது. மேலும் ஓபெக் நாடுகளும் எண்ணெய் உற்பத்தி குறைப்புக்கு ஒத்துக் கொண்டுள்ள நிலையில், தற்போது உற்பத்தி குறைப்பை செய்ய ஆரம்பித்துள்ளன. இதனால் விலையை சவுதி அதிகரித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
எண்ணெய் இருப்பு
ஒபெக் நாடுகள் மே 1ல் இருந்து ஒரு நாளைக்கு 10 மில்லியன் பேரல்கள் உற்பத்தியினை குறைந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கையானது விலையை மீட்டெடுக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. கொரோனா வைரஸினால் உலகம் முழுக்க எண்ணெய் தேவையானது குறைந்துள்ள நிலையில், உலகம் முழுவதிலும் எண்ணெய் தொட்டிகள் நிரம்பி வழியத் தொடங்கின.
நுகர்வும் அதிகரிக்கலாம்
இந்த நிலையில் தற்போது சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் தற்காலிகமாக நுகர்வு அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அராம்கோவின் இந்த விலை நிர்ணயம் அவசியமான ஒன்று என்றாலும், இனி தேவையும் அதிகரிக்க தொடங்கும் போது விலை இன்னும் அதிகரிக்கலாம் என்ற நிலையும் நிலவி வருகிறது.
பெட்ரோல் டீசல் விலை என்னவாகுமோ?
கச்சா எண்ணெய் விலை இந்த அளவு குறைந்த போதிலும் கூட, இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை அதிகம் குறையவில்லை. மாறாக அதிகரித்து தான் வந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் பெட்ரோல் டீசல் விலை என்னவாகுமோ தெரியவில்லை.
More From GoodReturns

நடுக்கடலில் டோல் பூத் வைத்த ஈரான்.. இதென்னப்பா புது பிரச்சனையா இருக்கு.. உலக நாடுகள் பரிதவிப்பு..!

என்னுடைய பவர் தெரியாம பேசுறீங்க.. டிரம்ப் வாயை திறந்த உடன் கச்சா எண்ணெய் விலை 13% வீழ்ச்சி..!

ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு அனுமதி, ஆனால்..? ஈரான் போடும் 2 கண்டிஷன்கள்!!

1970-களை விட மோசமான எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படும்! உலகிற்கு காத்திருக்கும் பேராபத்து?IEA எச்சரிக்கை?

சரியான நேரத்தில் கைகொடுத்த ரஷ்யா! மங்களூரு துறைமுகத்தில் நங்கூரமிட்ட எண்ணெய் கப்பல்! பெரும் நிம்மதி..!

எண்ணெய் அரசியலில் சீனாவை அசைக்க முடியாது? ஹார்மூஸ் சிக்கலை உடைக்கும் பெய்ஜிங்கின் ரகசிய பிளான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!



Click it and Unblock the Notifications