இந்தியாவில் ஆப்பிள் தொழிற்சாலைகளும், ஆப்பிள் ஐபோன் அசம்பிளி துவங்கிய பின்பு அதன் விலை குறையவில்லை என்றாலும் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 10 வருடத்திற்கு முன்பு 10ல் ஒருவர் மட்டுமே ஆப்பிள் ஐபோன் வைத்திருக்கும் நிலையில் இருந்து, இன்று 10ல் 5 பேர் ஐபோன் வைத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.
இதற்கு ஏற்றார் போல் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை ப்ரீமியம் போன்கள் பக்கம் மக்கள் வேகமாக நகர்ந்து வர துவங்கியதன் விளைவாக 2026ஆம் நிதியாண்டில் மட்டும் ஆப்பிள் நிறுவனம் இந்திய வர்த்தக சந்தையில் இருந்து சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான வருமானத்தை ஈட்டி புதிய சாதனை படைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

இந்திய ஸ்மார்ட்போன் மற்றும் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு வர்த்தகம் கடந்த சில ஆண்டுகளாக மந்தமடையும் வேளையில், கடித்த ஆப்பிள் என செல்லமாக அதன் லோகோவை வைத்து அழைக்கப்படும் ஆப்பிள் நிறுவனம் தனது இந்திய வர்த்தகம் மூலம் மார்ச் 2026 உடன் முடிந்த நிதியாண்டில் சுமார் 1,03,853 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தை ஈட்டியுள்ளது.
இது கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 31 சதவீதம் அதிகமாகும். 2025ஆம் ஆண்டில் 79,060 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தைப் பெற்ற ஆப்பிள் தற்போது 1 லட்சம் கோடி என்ற மார்க்-ஐ தாண்டியுள்ளது என AltInfo தளத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய சந்தையில் கடித்த ஆப்பிள் பிராண்டின் முக்கிய போட்டியாளரான சாம்சங் கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பு நிதியாண்டில் 1.4 சதவீதம் குறைவான லாபத்தைக் கொடுத்துள்ளது, இதன் மூலம் மார்ச் 2026 உடன் முடிந்த நிதியாண்டில் 81,472 கோடி ரூபாய் வருமானத்தை ஈர்த்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் வருமானத்தில் மட்டுமல்ல லாபத்திலும் வலிமையான உயர்வைப் பதிவு செய்துள்ளது, 2025 உடன் ஒப்பிடுகையில் 2026ஆம் நிதியாண்டில் 66 சதவீதம் அதிக லாபத்தைப் பதிவு செய்து 5311 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது. இந்த அதிரடியான லாப உயர்வுக்கு என்ன காரணம் என ஆப்பிள் தெரிவிக்கவில்லை.
சமீபத்தில் ஆப்பிள் அறிமுகம் செய்த ஐபோன் 18 சீரியஸ் போன்கள் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்றாலும் விற்பனை வழக்கம் போல் அதிரடியாக அமைந்ததுள்ளது.
இதேபோல் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐபோன் 18 சீரியஸ் போன்களை அதன் போட்டி நிறுவனமான சாம்சங் கடுமையாக விமர்சனம் செய்தது மறக்க முடியாது. இணையம், பில்போர்டு விளம்பர என அனைத்திலும் கடுமையாக விமர்சனம் செய்தது. ஆயினும் இந்தியாவில் ஆப்பிளின் வருமானம், லாபம் அதிரடியாக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications

