சென்னை: பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகள் உலக அளவில் அதிக கவனம் பெறக்கூடிய முதலீடுகளாக மாறி இருக்கின்றன. கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பு கடந்த சில ஆண்டுகளில் பல வரலாறு காணாத உச்சங்களை எல்லாம் எட்டிவிட்டது.
இந்தியாவில் மத்திய அரசு கிரிப்டோ கரன்சிகளை இதுவரை அங்கீகரிக்கவில்லை .இருந்தாலும் பல்வேறு இந்தியர்களும் பிட்காயின், எத்திரியம் போன்ற கிரிப்டோ கரன்சிகளில் தொடர்ச்சியாக தங்களுடைய முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றனர் . மத்திய அரசின் அங்கீகாரம் இல்லாததால் கிரிப்டோ சந்தை இந்தியாவில் ஒழுங்குப்படுத்தாத அதே வேளையில் சட்ட பாதுகாப்பு இல்லாத ஒரு முதலீடாக தான் இருந்து வருகிறது.

இந்த சூழலில் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு பரபரப்பான தீர்ப்பை தந்திருக்கிறது, இது கிரிப்டோவில் முதலீடு செய்திருப்பவர்களுக்கு நற்செய்தியாக அமைந்திருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றம் கிரிப்டோ கரன்சிகளை இந்திய சட்டத்தின் கீழ் சொத்தாக பார்க்க வேண்டும் என தீர்ப்பு தந்திருக்கிறது. கிரிப்டோ கரன்சிகள் நாணயங்கள் கிடையாது கிரிப்டோ கரன்சிகள் ஒரு சொத்து என சென்னை உயர்நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டு இருக்கிறது.
கடந்த ஆண்டு கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் ஆன வாஷிரக்ஸில் மிகப்பெரிய ஒரு சைபர் தாக்குதல் நடைபெற்றது. அப்போது பல்வேறு கிரிப்டோ டோக்கன்கள் முடக்கப்பட்டன. இதனை எதிர்த்து ஒரு நபர் தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேசன் இந்திய சட்டத்தின் கீழ் கிரிப்டோ கரன்சிகள் சொத்தாக தகுதி பெறுகிறது எனக் கூறியிருக்கிறார்.
கிரிப்டோ கரன்சி என்பது சட்டபூர்வமானது இல்லை என்றாலும் அது ஒரு சொத்துக்கான அனைத்து அத்தியாவசிய பண்புகளையும் கொண்டிருக்கிறது எனக் கூறியிருக்கிறார். கிரிப்டோ நாணயம் என்பது ஒரு சொத்து என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது என அவர் தன்னுடைய உத்தரவில் சுட்டிக்காட்டி இருக்கிறார் . இதன் மூலம் இது கிரிப்டோ கரன்சிகளுக்கு மிகப்பெரிய ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்தி தந்திருக்கிறது.
கிரிப்டோ ஒரு உறுதியான சொத்தோ ஒரு நாணயமோ இல்லை என்றாலும் ஒரு சொத்தாக கருதப்படுவதற்கான அனைத்து தகுதிகளும் அதற்கு இருக்கிறது , மேலும் அதனை அறக்கட்டளையில் ஒரு சொத்தாக வைத்திருக்க முடியும் எனக் கூறியிருக்கிறார் . வருமான வரி சட்டத்தின் பிரிவு 2( 47 ஏ) யின் கீழ் கிரிப்டோ கரன்சிகளை மெய்நிகர் டிஜிட்டல் சொத்துக்களாக கருத வேண்டும் என தன்னுடைய உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தீர்ப்பு கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி தந்திருக்கிறது. கிரிப்டோ எக்சேஞ்ச்களை சுயாதீன தணிக்கைக்கு உட்படுத்த வேண்டும், வாடிக்கையாளர்கள் மற்றும் கார்ப்பரேட் நிதிகளை பிரித்து ஆய்வு செய்ய வேண்டும், கேஒய்சி நடைமுறைகளை மேம்படுத்த வேண்டும் என தன்னுடைய உத்தரவில் அவர் அறிவுறுத்தி இருக்கிறார்.
இந்தியா வெப்3 தொழில்நுட்பத்தால் உந்தப்பட்ட டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி முன்னேறும் போது முதலீட்டாளர் பாதுகாப்பு மற்றும் நிதி பொறுப்புணர்வை உறுதி செய்யும் வகையில் நிர்வாக கட்டமைப்புகள் உருவாக வேண்டும் என அவர் வலியுறுத்தி இருக்கிறார் . கிரிப்டோ முதலீடுகள் இந்தியாவில் அங்கீகரிக்கப்படாமல் இருப்பது அதன் முதலீட்டாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு இந்தியாவின் கிரிப்டோ சொத்து விவகாரத்தில் ஒரு திருப்புமுனை தருணமாக அமைந்திருக்கிறது.
இந்த தீர்ப்பு டிஜிட்டல் சொத்துக்கள் குறித்த இந்தியாவின் சட்ட புரிதலில் ஒரு முக்கியமான தெளிவை கொண்டு வந்து இருக்கிறது இது முதலீட்டாளர்களை பாதுகாப்பது மட்டுமில்லாமல் கிரிப்டோவிற்கான முறையான ஒழுங்குமுறை அமைப்பு உருவாவதை உறுதிப்படுத்தி இருக்கிறது என நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications