உலக அளவில் கடந்த சில நாட்களாக கிரிப்டோ சந்தைகளில் ஏற்பட்ட ஏற்றம் தற்போது இந்தியாவிலும் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளது. அதன்படி இந்தியாவில் உள்ள சில முக்கிய நகரங்களில் கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று டொனால்ட் டிரம்ப் பதவியேற்பார் என்ற உறுதியுடன் கிரிப்டோகரன்சிகள் ஏற்றத்தை தொடங்கியுள்ளன.
இந்தியாவில் வரி தொடர்பான கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தாலும், பல நகரங்களில் கிரிப்டோ சந்தையில் பணம் அனுப்புபவர்கள் உள்ளனர். நாட்டின் மூன்றாவது பெரிய கிரிப்டோ வர்த்தக தளமான CoinSwitch, அதன் வருடாந்திர முதலீட்டாளர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் உள்ள முக்கிய தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன

நகரங்கள் பட்டியல்:நகர அடிப்படையிலான முதலீடுகளை பொருத்தவரையில், நாட்டில் கிரிப்டோ சுற்றுச்சூழல் அமைப்பை வளர்த்து வருவதாக அறிக்கை கூறுகிறது. டெல்லி NCR தொடர்ந்து மூன்றாவது முறையாக அதிக எண்ணிக்கையிலான கிரிப்டோ முதலீடுகளைக் கொண்ட நகரத்தின் பட்டத்தைப் பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள பெங்களூருவை விட டெல்லி இருமடங்கு முதலீடு செய்துள்ளது. மூன்றாவது இடம் மும்பை நகரம் பெற்றுள்ளது.
இந்தியாவின் மொத்த கிரிப்டோ முதலீட்டில் 36 சதவீதத்திற்கும் அதிகமானவை மூன்று நகரங்களில் உள்ளன. அதில் டெல்லி (20.1%), பெங்களூரு (9.6%), மற்றும் மும்பை (6.5%). கடந்த ஆண்டை விட இந்த அனைத்து இடங்களிலும் முதலீடு அதிகரித்துள்ளது. முதல் 10 நகரங்களுக்குள் கொல்கத்தா (9), குஜராத்தின் பொடாட் (10) முதல் முறையாக இடம் பிடித்தன. அறிக்கையின்படி, நாடு முழுவதும் கிரிப்டோகரன்சி ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது என்பதற்கு இதுவே சான்றாக உள்ளது.
டாப் 10 லிஸ்ட்: முதல் 10 நகரங்களில் புனே சிறப்பாக செயல்பட்டுள்ளது. இங்குள்ள 86% முதலீட்டாளர்கள் சிறப்பான வருமானத்தைப் பெற்றுள்ளனர். அதிக லாபம் ஈட்டும் போர்ட்ஃபோலியோ சதவீதத்தைக் கொண்ட இந்திய நகரமாக புனே மாறியுள்ளது. ஜெய்ப்பூர் மற்றும் லக்னோ போன்ற அடுக்கு-2 மற்றும் அடுக்கு-3 நகரங்களிலும் கிரிப்டோ முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. அறிக்கையின்படி, கிரிப்டோ முதலீடு முக்கிய மெட்ரோ நகரங்களில் மட்டுமல்ல, நாட்டின் பிற இடங்களிலும் அடிமட்ட அளவில் அதிகரித்து வருகிறது.
வயது வாரியாக, கிரிப்டோ முதலீடு: இந்தியாவில், 35 வயதுக்குட்பட்டவர்கள் பெரும்பாலும் கிரிப்டோகரன்சிகளில் முதலீடு செய்கிறார்கள். 75% பேர் முதலீடு செய்து இருக்கிறார்கள். 36 முதல் 45 வயது வரையிலான முதலீட்டாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. மிட்-கேரியர் நிபுணர்களும் கிரிப்டோ சந்தையில் ஆர்வம் காட்டுகின்றனர். அதே நேரத்தில், மொத்த முதலீட்டாளர்களில் 11% மட்டுமே பெண்கள் ஆவர். பிட்காயின் (BTC) மற்றும் எதிரியம் (ETH) ஆகியவை முதலீட்டாளர்களுக்கு விருப்பமான காயின்களாக உள்ளன.


Click it and Unblock the Notifications