எலான் மஸ்க் முடிவு, சீனா அரசின் தடை என அடுத்தடுத்து கிரிப்டோ சந்தையைப் பாதிக்கும் அறிவிப்புகள் வந்த காரணத்தால் பிட்காயின், டோஜ்காயின், எதிரியம், ரிப்பிள் உட்பட அனைத்து முன்னணி கிரிப்டோகரன்சியும் அதிகளவிலான சரிவைச் சந்தித்தது.
இதன் வாயிலாகக் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கிரிப்டோகரன்சியின் மொத்த மதிப்பீட்டில் சுமார் 748 பில்லியன் டாலர் நஷ்டம் அடைந்துள்ளது.
எலான் மஸ்க் திடீர் முடிவு
எலான் மஸ்க் பிட்காயின் மற்றும் டோஜ்காயினுக்கும் கொடுத்த ஆதரவு மொத்த கிரிப்டோ சந்தையையும் புரட்டிப்போட்டது என்றால் மிகையில்லை, இந்தச் சூழ்நிலையில் பிட்காயின் உற்பத்தி செய்யச் சுற்றுச்சூழ்நிலை பாதிக்கும் வகையில் நிலக்கரியை வைத்து உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தைப் பயன்படுத்திய காரணத்தால் டெஸ்லா இனி பிட்காயின்-ஐ பேமெண்ட் ஆக ஏற்காது எனத் தெரிவித்தார் டெஸ்லா தலைவர் எலான் மஸ்க்.
சீன அரசின் அதிரடி முடிவு
இந்தச் சரிவை சமாளித்து மேலே வருவதற்குள் ஜி ஜின்பிங் தலைமையிலான சீன அரசு கிரிப்டோகரன்சி வர்த்தகம், முதலீடு, விற்பனை என அனைத்து விதமான வர்த்தகத்திற்கு எவ்விதமான முன் அறிவிப்பும் இன்றி முடக்கியது. இதன் காரணமாகச் சீனாவில் இருக்கும் அனைத்து கிரிப்டோ வர்த்தகத் தளங்களும் 100 சதவீத மூடப்பட்டு மொத்த சந்தையும் முடங்கியது.
கிரிப்டோகரன்சியின் மதிப்புச் சரிவு
சீனாவின் அறிவிப்புக்குப் பின்பு தான் கிரிப்டோகரன்சியின் மதிப்பு பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டது. இந்நிலையில் எலான் மஸ்க் மற்றும் சீனா அரசின் அறிவிப்புக்கு முன்பும், பின்னும் எந்த அளவிற்குப் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என்பதைக் காயின்ஜீக்கோ தெரிவித்துள்ளது.
748 பில்லியன் டாலர் மாயம்
சர்வதேச சந்தையில் மொத்தம் 7,459 கிரிப்டோகரன்சிகள் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. மே 16ஆம் தேதி மொத்த கிரிப்டோகரன்சி சந்தையின் மொத்த மதிப்பு 2.25 டிரில்லியன் டாலர். இது நேற்றைய வர்த்தக முடிவில் 1.50 டிரில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 748 பில்லியன் டாலர் மதிப்பீட்டை கிரிப்டோகரன்சி சந்தை முதலீட்டாளர்கள் இழந்துள்ளனர்.
பிட்காயின், எதிரியம், டோஜ்காயின் மதிப்பு
கடந்த ஒரு வாரத்தில் பிட்காயின் விலை 48,696 டாலரில் இருந்து 27 சதவீதம் சரிந்து 34,224 டாலராகக் குறைந்தது. இதேபோல் டோஜ்காயின் 52 சென்ட்களில் இருந்து 39 சதவீதம் சரிந்து 31 சென்ட் ஆகக் குறைந்தது. மேலும் எதிரியம் 3,730 டாலரில் இருந்து 46 சதவீதம் சரிந்து 35,487 டாலராகக் குறைந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications