உலகின் பல முன்னணி நிறுவனங்கள் கிரிப்டோகரன்சி மற்றும் அதன் மூலம் செய்யப்படும் பரிமாற்றங்களை ஆதரித்து வரும் நிலையில், கிரிப்டோகரன்சி சந்தையில் முதலீடு செய்வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாகப் பல தடுமாற்றங்களின் மத்தியிலும் பிட்காயின் உட்படப் பல கிரிப்டோகரன்சிகள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது.
இதன் வாயிலாக 2 மாதங்களுக்கு முன்பு கிரிப்டோகரன்சியின் மொத்த சந்தை மதிப்பு 1 டிரில்லியன் டாலராக மட்டுமே இருந்த நிலையில் வெறும் 60 நாட்கள் அல்லது 2 மாதங்கள் இடைவேளையில் மொத்த சந்தை மதிப்பு 2 டிரில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
பிட்காயின் சந்தை மதிப்பு
காயின்ஜீக்கோ செய்த ஆய்வில் கிரிப்டோகரன்சி சந்தையில் மிக முக்கியக் கரன்சியாக விளங்கும் பிட்காயின் மட்டும் சுமார் 58,858 டாலர் வரையில் உயர்ந்து மொத்த சந்தை மதிப்பு 1 டிரில்லியன் டாலரை தாண்டி தொடர் வளர்ச்சிப் பாதையில் உள்ளது.
முக்கியமான 5 கிரிப்டோகரன்சி
பிட்காயினை அடுத்து டாப் 5 கிரிப்டோகரன்சியாகக் கருதப்படும் எதர், பினான்ஸ் காயின், போல்காடாட், டீதர், கார்டானோ ஆகியவற்றின் மொத்த சந்தை மதிப்பு 422 பில்லியன் டாலராக உள்ளது எனக் காயின்ஜீக்கோ தெரிவித்துள்ளது.
எலான் மஸ்க்-ன் டெஸ்லா
இந்த அதிரடி வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணம் எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா என்றால் மிகையில்லை, உலகளவில் பல நிறுவனங்கள் கிரிப்டோகரன்சியை ஆதரித்தாலும் உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனமான டெஸ்லா பிட்காயினில் 1 பில்லியன் டாலர் முதலீடு செய்தது, டெஸ்லா கார் விற்பனையில் பிட்காயினை முக்கியப் பேமெண்ட் முறையாக அறிவித்தது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிட்காயினுக்கு ஆதரவு
டெஸ்லா-வின் இந்த முடிவை பல கார்ப்ரேட் தலைவர்கள் எதிர்த்தாலும் இந்நிறுவனத்தைத் தொடர்ந்து மாஸ்டர்கார்ட், விசா, மோர்கன் ஸ்டான்லி, பேபால், பாங்க் ஆப் நியூயார்க் மெலன் ஆகியவை பிட்காயினையும், பிட்காயின் பேமெண்ட் முறையையும் ஆதரித்தது.
பிட்காயின் விலை
இன்றைய வர்த்தகத்தில் கிரிப்டோகரன்சியின் மிக முக்கிய நாணயமாக விளங்கும் பிட்காயின் 2.75 சதவீதம் அதிகரித்து 58,888.92 டாலருக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் பிட்காயின் மொத்த சந்தை மதிப்பு 1.10 டிரில்லியன் டாலரை தொட்டு உள்ளது.
பிட்காயின் அதிரடி வளர்ச்சி
கிரிப்டோ சந்தை வெறும் 2 மாதத்தில் 2 டிரில்லியன் டாலர் அளவில் உயர மிக முக்கியமான காரணம் ரீடைல் முதலீட்டாளர்களை விடவும் நிறுவன முதலீட்டாளர்கள், பெரும் முதலீட்டாளர்கள் அதிகளவில் கிரிப்டோகரன்சி சந்தைக்குள் முதலீடு செய்துள்ளனர். இதன் வாயிலாக 2021ல் பிட்காயின் அதிரடியான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications