சில மாதங்கள் முன்பு வரையில் கிரிப்டோ முதலீட்டாளர்களுக்குப் பொற்காலமாக இருந்தது, மட்டும் அல்லாமல் இனி முதலீட்டாளர்களுக்கு எதிர்காலமே கிரிப்டோகரன்சி என்ற நிலை உருவானது.
ஆனால் ஜனவரி மாதம் மிகவும் மோசமான நிலைக்குக் கிரிப்டோகரன்சி மதிப்பும், கிரிப்டோ முதலீட்டாளர்கள் நிலையும் மாறியுள்ளது. நவம்பர் மாத உச்சத்தில் இருந்து ஜனவரி வரையில் ஏற்பட்டு உள்ள சரிவின் அளவை கண்டால் ஆடிப்போயிருவீங்க.
பிட்காயின்
கிரிப்டோகரன்சி சந்தையில் மிகவும் முக்கியமான மற்றும் அதிகச் சந்தை மதிப்பு கொண்ட கிரிப்டோகரன்சியாக விளங்கும் பிட்காயின் இன்னும் உற்பத்தி செய்யப்படச் சில லட்சங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், 2022 ஆரம்பம் முதல் பிட்காயின் மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் வரலாற்று உச்ச அளவான 1,00,000 டாலர் அளவீட்டைத் தொடும் என எதிர்பார்க்கப்பட்டது.
நவம்பர் மாத உச்ச விலை
ஆனால் நவம்பர் மாதம் உச்ச விலையைத் தொட்ட பின்பு தொடர்ந்து சரிவை மட்டுமே பிட்காயின் எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக நேற்று ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் பிட்காயின் மதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் சுமார் 12 சதவீதம் சரிந்து 36,000 டாலருக்கு குறைவான அளவீட்டைத் தொட்டது, மேலும் நவம்பர் மாத உச்ச விலையில் இருந்து பிட்காயின் மதிப்பு 45 சதவீதம் வரையில் சரிந்தது குறிப்பிடத்தக்கது.
1 டிரில்லியன் டாலர் இழப்பு
இதன் மூலம் பிட்காயின் சந்தை மதிப்பு மட்டும் சுமார் 600 பில்லியன் டாலர் அளவிற்குச் சரிந்து உள்ளது. பிட்காயின் போலவே பிற முன்னணி கிரிப்போடகரன்சியும் அதிகப்படியான சரிவை எதிர்கொண்ட காரணத்தால் கிரிப்டோகரன்சின்யின் மொத்த சந்தை மதிப்பு நவம்பர் மாதத்தில் இருந்து சுமார் 1 டிரில்லியன் டாலர் அதாவது 1 லட்சம் கோடி டாலருக்கும் அதிகமாகச் சரிந்துள்ளது.
பெடரல் ரிசர்வ் முடிவு
இந்தத் திடீர் மற்றும் தொடர் சரிவுக்கு மிகவும் முக்கியமான காரணம் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் எடுத்து முடிவு தான், ஒமிக்ரான் பாதிப்பைக் குறைக்கவும், பணவீக்க பாதிப்புகளைக் குறைக்கவும், நாணய புழக்கத்தைக் குறைக்கவும், வட்டி விகிதத்தை உயர்த்தவும் முடிவு செய்துள்ளது. இந்த அறிவிப்புக்குப் பின்பு அனைத்து ஆபத்து நிறைந்த முதலீடுகளும் அதிகப்படியான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
90 நாட்கள் நிலவரம்
கடந்த 90 நாட்களில் பிட்காயின் மதிப்பு 40.97 சதவீதமும், எதிரியம் 38.52 சதவீதமும், கார்டானோ 50.08 சதவீதமும், சோலானோ 46.69 சதவீதமும், ரிப்பிள் 43.14 சதவீதமும், டோஜ்காயின் 45.83 சதவீதமும், போல்காடாட் 58.73 சதவீதமும், ஷபா இனு 48.54 சதவீதமும் சரிந்துள்ளது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications