வருமான வரி வசூலை கண்காணிக்கும் ஏஐ.. கிரிப்டோ வர்த்தகர்களுக்கு ஆப்பு வைத்த மத்திய அரசு..!!

பிட்காயின், கிரிப்டோ கரன்சி மற்றும் இணையவழி டிஜிட்டல் சொத்துகளின் (Virtual Digital Assets - VDA) வரி தவிர்ப்பது இந்தியாவில் கடினமாகிவிட்டது. வருமானவரி துறை இதற்கான கண்காணிப்பை அதிகரித்து, தனிப்பட்ட நபர்களின் டிஜிட்டல் சொத்துகள் தொடர்பான பரிவர்த்தனைகளை கவனித்து வருகிறது. இதற்கு செயற்கை நுண்ணறிவு போன்ற கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கூறுகையில், "2022-23ஆம் நிதியாண்டில் டிஜிட்டல் சம்பந்தப்பட்ட வருமானத்தில் இருந்து ரூ. 437 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு 2022-23ஆம் நிதியாண்டில் இருந்து கிரிப்டோ மற்றும் பிற VDA-களுக்கான வரி விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. அதில் மட்டும் ரூ. 269.09 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி வசூலை கண்காணிக்கும் ஏஐ.. கிரிப்டோ வர்த்தகர்களுக்கு ஆப்பு வைத்த மத்திய அரசு..!!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிரிப்டோ மற்றும் பிற VDA வருமானத்தில் தவறான தகவல் வழங்குதல் அல்லது வருவாய் இழப்பு மற்றும் கிரிப்டோ நடவடிக்கைகளை கண்காணிக்க பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப கருவிகள் குறித்து பல கேள்விகள் எழுப்பினர். அதாவது, கடந்த 3 ஆண்டுகளில் கிரிப்டோவிலிருந்து வருமான வரியாக எவ்வளவு வசூலிக்கப்பட்டது? என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த மத்திய அரசு, "1961 ஆம் ஆண்டு வருமானவரி சட்டத்தின் 115BBH பிரிவின்படி, கிரிப்டோ மற்றும் VDA வருமானத்திற்கு வரி விதிப்பு 2022-23 நிதியாண்டிலிருந்து தான் அமலுக்கு வந்தது. அதன்படி, 2022-23ஆம் ஆண்டில் ரூ. 269.09 கோடி மற்றும் 2023-24 ஆண்டில் (தற்காலிக மதிப்பீடு) ரூ. 437 கோடி வரி வசூலிக்கப்பட்டது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் விதிமுறைகள் இல்லாததால் வரிவசூல் மேற்கொள்ளப்படவில்லை" என விளக்கம் அளித்தது.

அடுத்ததாக, கிரிப்டோ வருமானங்களை குறைவாக அல்லது தவறாக அறிவிப்பதால் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை மதிப்பீடு செய்துள்ளதா...? என்ற உறுப்பினரின் கேள்விக்கு, அரசு இதுவரை எந்தவொரு இழப்பு மதிப்பீடும் செய்யப்படவில்லை என பதிலளித்தது. அடுத்ததாக, வரி தவிர்ப்புகளை கண்டறிய அரசு ஏஐ, இயந்திர கற்றல் கருவிகளை பயன்படுத்துகிறதா..? என்ற கேள்விக்கு, "ஆம்" என உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், அரசு கிரிப்டோ பரிவர்த்தனைகள் தொடர்பான வருமானவரி அறிக்கைகள் மற்றும் கிரிப்டோ நிறுவனங்கள் தாக்கல் செய்யும் TDS விவரங்களை நேரடி முறையில் ஒப்பிட்டு கண்காணிக்க Centralised அமைப்பை உருவாக்கியதா? என கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு, "தற்போது வரை இந்த இரு தரவுகளையும் நேரடியாக ஒப்பிட்டு பார்க்கும் ஒரு மைய கண்காணிப்பு அமைப்பு அமைக்கப்படவில்லை. ஆனால், TDS ரிட்டர்ன்கள் மற்றும் வருமான வரி தாக்கல் செய்த தகவல்களை ஒப்பிட்டு தவறான தகவல்கள் உள்ளதா என்பதை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக CBDT (Central Board of Direct Taxes) என்ற சிறப்புப் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் பெயர் NUDGE (Non-Intrusive Use of Data to Guide and Enable). இத்திட்டத்தின் மூலம், பயனாளர்கள் கிரிப்டோ வருமானத்தை வருமானவரி அறிக்கையில் அறிவிக்க மறந்துவிட்டாலோ அல்லது தவறாக அறிவித்தாலோ அவர்களுக்கு நினைவூட்டல் அனுப்பி, சரியான தகவலை அளிக்க உந்துவதே ஆகும். ரூ.1 லட்சம் அல்லது அதற்கும் அதிக அளவிலான மாறுபாடு இருந்த பயனாளர்களுக்கு, "நீங்கள் தாக்கல் செய்த வருமானத்தில் கிரிப்டோ வருமானம் சேர்க்கப்படவில்லை. தயவு செய்து உங்கள் வருமானவரி அறிக்கையை திருத்தவும்" என்றபடி அரசு அறிவிப்புகள் அனுப்பியுள்ளது.

இந்நிலையில், இந்திய வருமான வரித்துறை, கிரிப்டோகரன்சி மற்றும் பிற டிஜிட்டல் சொத்துகளிலிருந்து பெற்ற வருமானத்தை வருமானவரி அறிக்கையில் சரியாக அறிவிக்காத வருமானதாரர்களுக்கு நோட்டீஸ்கள் அனுப்பி வருகிறதாக கூறப்படுகிறது. இந்த நோட்டீஸ்கள், வருமானம் மற்றும் TDS விவரங்கள் துறையின் தரவுகளுடன் ஒப்பிட்ட பின் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு தனிநபர் வருமான வரி செலுத்தும் நபர், தனது கிரிப்டோ பரிவர்த்தனைகளை வருமானவரி அறிக்கையில் தெரிவிக்காமல் விட்டால், அவருக்கு வருமானவரி சட்டம், 1961-ன் பிரிவு 270A-யின் கீழ் அபராதம் விதிக்கப்படலாம். வரி தொகையின் 50% வரை அபராதமாக கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆனால், அது தவறாக அறிவிக்கப்பட்ட வருமானமாக அரசு கருதினால், அந்த நேரத்தில் செலுத்த வேண்டிய வரி தொகையின் 200% வரை அபராதம் விதிக்கப்படும்.

எனவே, கிரிப்டோ வருமானம் தொடர்பான தகவல்களைத் தவிர்த்தாலோ, குறைவாக அறிவித்தாலோ, மேற்கண்ட சட்டப்பிரிவு படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். எனவே, கிரிப்டோ உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் வெளிப்படையாகவும், சரியாகவும் வருமானவரி அறிக்கையில் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+