உலக நாடுகள் அனைத்தும் அடுத்தடுத்து கிரிப்டோகரன்சி முதலீடு, வர்த்தகம், உற்பத்தி குறித்து அடுத்தடுத்து முடிவுகளை எடுத்து வருகிறது. சமீபத்தில் பாகிஸ்தான், ரஷ்யா ஆகிய நாடுகள் கிரிப்டோ வர்த்தகத்திற்குத் தடை விதிக்க முடிவு செய்து அதற்கான பணிகளைச் செய்து வரும் நிலையில் இந்திய அரசின் நிலைப்பாடு குறித்து முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளனர்.
பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தக்கல் செய்ய உள்ள பட்ஜெட் அறிக்கையில் கிரிப்டோகரன்சி மசோதா தான் மிக முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2022 துவங்கியதில் இருந்து மத்திய அரசு எப்போது கிரிப்டோகரன்சி மசோதாவை வெளியிடும் என்பது தான் பல கோடி முதலீட்டாளர்களின் முதன்மையான கேள்வியாக உள்ளது.
கிரிப்டோகரன்சி மசோதா
இந்திய அரசு கிரிப்டோகரன்சி குறித்து எவ்விதமான முடிவை எடுக்காத நிலையில் கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனங்கள் தொடர்ந்து சட்டத்தில் இருக்கும் க்ரே ஏரியாவை பயன்படுத்தித் தொடர்ந்து இயங்கி வருகிறது.
பட்ஜெட் கூட்டம்
மத்திய அரசு டிசம்பர் மாதம் நடந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய வேண்டிய கிரிப்டோ மசோதா மறு ஆய்வு ஆய்வுக்காக ஒத்திவைக்கப்பட்டது, இந்நிலையில் ஜனவரி 31ஆம் தேதி துவங்கும் பட்ஜெட் கூட்டம், பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் தாக்கலில் கிரிப்டோ மசோதா முழுமையாக அறிவிக்கப்படாவிட்டாலும், கட்டாயம் இதுகுறித்த அறிவிப்புப் பட்ஜெட் அறிக்கையில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரி விதிப்பு
மேலும் கிரிப்டோ துறை வல்லுனர், வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் மத்தியில் கிரிப்டோ முதலீட்டின் மீது கிடைக்கும் லாபத்திற்கு வரி வசூலிக்கும் நிலையான வரி விதிப்புக் கட்டமைப்பு இந்தப் பட்ஜெட் 2022ல் இடம்பெறும் என அதிகளவில் நம்புகின்றனர், மேலும் இது மொத்த கிரிப்டோ மசோதாவில் ஒரு பகுதி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிப்டோகரன்சி தடை
மேலும் இன்று வரையில் மத்திய அரசுக்கு கிரிப்டோகரன்சியைத் தடை செய்யும் திட்டம் இல்லை ஒழுங்கு முறைப்படுத்துவது மட்டுமே இலக்காகக் கொண்டு உள்ளது. இதன் மூலம் கிரிப்டோகரன்சியைக் கேப்பிடல் அசர்ட் அல்லது கமாடிட்டி ஆக அறிவித்து அதன் முதலீட்டு மீது கிடைக்கும் வருமானத்திற்கு வரி விதிக்கவே மத்திய அரசு முயன்று வருகிறது.


Click it and Unblock the Notifications