கடந்த ஜூலை மாதத்தில் தரைதட்டிய கிரிப்டோகரன்சிகளின் விலை மதிப்பானது, தற்போது மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு நல்ல விஷயம் என்றே கூறலாம்.
ஏனெனில் கடந்த ஜூலை மாதத்தில் வாங்கிய முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் எனலாம்.
நாளுக்கு நாள் கிரிப்டோகரன்சியின் மீதான மோகம் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு நாடுகளும் கிரிப்டோகரன்சிகளை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ளன.
கிரிப்டோவுக்கு ஆதரவு அதிகரிப்பு
சில நாடுகள் தங்களது சொந்த டிஜிட்டல் நாணயங்களையும் வெளியிட்டு வருகின்றன. இது மேலும் கிரிப்டோக்களுக்கு ஆதரவாக அமைந்துள்ளது எனலாம்.
கிரிப்டோகரன்சி சந்தையானது தொடர்ந்து பலமான ஏற்ற இறக்கத்தில் இருப்பதால், முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக பெரும் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் கொடுக்கும் ஒரு முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.
பிட்காயின் நிலவரம்
தற்போது பிட்காயின் மதிப்பானது 4.13% அதிகரித்து, 45,390.61 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 46,691.09 டாலர்களாகும். இதே குறைந்தபட்ச விலை 43,374.81 டாலர்களாகும். நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 56.05% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.
எத்திரியம் மதிப்பு
இதே போன்று எத்திரியத்தின் மதிப்பானது 5.94% அதிகரித்து, 3,104.87 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 3,199.68 டாலர்களாகும். இதே குறைந்தபட்ச விலை 2,911.72 டாலர்களாகும். நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 319.12% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.
கார்டானோ நிலவரம்
கார்டானோ மதிப்பானது 3.76% அதிகரித்து, 1.48 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 1.50 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 1.41 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 713.39% ஏற்றம் கண்டுள்ளது. இதன் வரலாற்று உச்சம் 2.47 டாலர்களாகும்.
எக்ஸ்ஆர்பி நிலவரம்
எக்ஸ்ஆர்பி-யின் மதிப்பானது 2.65% அதிகரித்து, 0.811434 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.827757 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.785978 டாலராகும். இதன் வரலாற்று உச்ச விலை 3.40 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 265.15% ஏற்றம் கண்டுள்ளது.
டோஜ்காயின் தற்போதைய நிலவரம்
டோஜ்காயின் மதிப்பானது 5.91% அதிகரித்து, 0.253723 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.266460 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.237216 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 5,221.06% ஏற்றம் கண்டுள்ளது.
யுனிஸ்வாப் மதிப்பு
யுனிஸ்வாப் மதிப்பானது 11.59% அதிகரித்து, 29.08 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 29.57 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 26.01 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 600.13% லாபத்தில் தான் உள்ளது. இதன் வரலாற்று உச்சம் 45.01 டாலர்களாகும்.
போல்கடோட் நிலவரம் என்ன?
போல்கடோட் மதிப்பானது தற்போது 4.99% அதிகரித்து, 20.34 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 21.25 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 19.26 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 178.87% லாபத்தில் தான் உள்ளது.
11 வார உச்சம்
பிட்காயின் மதிப்பானது அதன் 11 வார உச்சத்தினை தொட்டுள்ளது. இதன் சந்தை மதிப்பானது 6% அதிகரித்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், கடந்த வாரத்தில் 17% ஏற்றம் கண்டுள்ளது. இதே எத்திரியம் மற்றும் டோஜ்காயின் தலா 6% அதிகரித்து காணப்படுகிறது.
நிதி வெளியேற்றம்
எனினும் தொடர்ந்து ஐந்தாவது வாரமாக பிட்காயினின் நிதி வெளியேற்றங்கள் இருந்து வருகின்றது. இது கிரிப்டோகரன்சிகளுக்கு ஒரு ஒழுங்கு முறை அமைப்பு இருக்க வேண்டும் என்ற கருத்தும் நிலவி வருகின்றது. இதன் காரணமாக நிதிகள் அதிகளவில் வெளியேறி வருகின்றன. குறிப்பாக மிகப்பெரிய கிரிப்டோவான பிட்காயினில் ஆகஸ்ட் 6ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் மட்டுமே 33 மில்லியன் டாலர் வெளியேறியுள்ளது.
More From GoodReturns

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி



Click it and Unblock the Notifications