கடந்த ஜூலை மாதத்தில் தரைதட்டிய கிரிப்டோகரன்சிகளின் விலை மதிப்பானது, தற்போது மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. இது தொடர்ந்து பலமான ஏற்ற இறக்கத்தில் இருப்பதால், முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
எனினும் கடந்த சில தினங்களாகவே தொடர்ச்சியாக ஏற்றம் கண்டு வருகின்றது. அவ்வப்போது சரிவினைக் கண்டாலும் ,மொத்தத்தில் ஏற்றத்தில் காணப்படுகிறது.
கடந்த அமர்வில் மட்டும் கிரிப்டோகரன்சி சந்தையில் சந்தை மதிப்பானது 0.21% அதிகரித்து, 2.10 டிரில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இதன் வால்யூம் கடந்த 24 மணி நேரத்தில் 1.24% குறைந்து, 107.43 பில்லியன் டாலராகவும் குறைந்துள்ளது. இதற்கிடையில் இன்று டாப் கிரிப்டோக்களின் நிலவரம் என்ன வாருங்கள் பார்க்கலாம்.
பிட்காயின் நிலவரம்
எனினும் இன்று தற்போது பிட்காயின் மதிப்பானது 1.11% அதிகரித்து, 49,276.89 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 49,836.44 டாலர்களாகும். இதே குறைந்தபட்ச விலை 48,356.77 டாலர்களாகும். நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 68.82% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.
எத்திரியம் மதிப்பு
பிட்காயின் மதிப்பானது அதிகரித்து இருந்தாலும், எத்தரியத்தின் மதிப்பானது 0.36% குறைந்து, 3,267.54 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 3,312.11 டாலர்களாகும். இதே குறைந்தபட்ச விலை 3,212.66 டாலர்களாகும். நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 337.84% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.
கார்டானோ நிலவரம்
கார்டானோ மதிப்பானது 2.94% அதிகரித்து, 2.56 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 2.57 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 2.39 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 1,297.95% ஏற்றம் கண்டுள்ளது. இதன் வரலாற்று உச்சம் 2.58 டாலர்களாகும்.
எக்ஸ்ஆர்பி நிலவரம்
எக்ஸ்ஆர்பி-யின் மதிப்பானது 1.45% குறைந்து, 1.24 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 1.27 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 1.21 டாலராகும். இதன் வரலாற்று உச்ச விலை 3.40 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 445.78% ஏற்றம் கண்டுள்ளது.
டோஜ்காயின் தற்போதைய நிலவரம்
டோஜ்காயின் மதிப்பானது 1.71% குறைந்து, 0.319598 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.329951 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.312421 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 6,622.53% ஏற்றம் கண்டுள்ளது.
யுனிஸ்வாப் மதிப்பு
யுனிஸ்வாப் மதிப்பானது 1.49% குறைந்து, 28.94 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 29.77 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 28.18 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 594.58% லாபத்தில் தான் உள்ளது.
போல்கடோட் நிலவரம் என்ன?
போல்கடோட் மதிப்பானது தற்போது 3.05% குறைந்து, 27.94 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 29.14 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 27.55 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 282.16% லாபத்தில் தான் உள்ளது.
More From GoodReturns

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!



Click it and Unblock the Notifications