வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று பங்கு சந்தைகள் பட்டை கிளப்பிக் கொண்டுள்ள நிலையில், கிரிப்டோகரன்சிகளின் மதிப்பானது தொடர்ந்து ஏற்றம் கண்டுள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் பலத்த சரிவினைக் கண்ட கிரிப்டோகரன்சிகளின் விலை மதிப்பானது, தற்போது மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது. இது தொடர்ந்து ஏற்றத்தில் இருப்பதால், முதலீட்டாளர்களள மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அவ்வப்போது சரிவினைக் கண்டாலும், ஒட்டு மொத்தமாக பார்க்கும்[போது ஏற்றத்தில் காணப்படுகிறது.
கவர்ச்சிகரமான முதலீடு
குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் பிட்காயின் மதிப்பானது மீண்டும் 50,000 டாலர்களை உடைத்துக் கொண்டுள்ளது. இது உண்மையில் முதலீட்டாளர்களுக்கு ஒரு மிக நல்ல வாய்ப்பு என்றே கூறலாம். மே மாததில் 64,000 டாலர்களை தொட்ட நிலையில், அதன் பிறகு சரியத் தொடங்கியது பலமான சரிவினைக் கண்டது. எனினும் முதலீட்டாளர்கள் தற்போதும் பிட்காயின் என்பது ஒரு கவர்ச்சிகரமான முதலீடாக பார்க்கப்படுகிறது.
பிட்காயின் நிலவரம்
தற்போது பிட்காயின் மதிப்பானது 2.75% அதிகரித்து, 50,198.37 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 50.495.95 டாலர்களாகும். இதே இதன் குறைந்தபட்ச விலை 48,128.58 டாலர்களாகும். நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 72.56% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.
எத்திரியம் மதிப்பு
பிட்காயின் மதிப்பானது அதிகரித்துள்ள நிலையில், எத்தரியத்தின் மதிப்பானது அதனை விட அதிகரித்துள்ளது. இது தற்போது 3.41% அதிகரித்து, 3,343.32 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 3,363.37 டாலர்களாகும். இதே குறைந்தபட்ச விலை 3,131.68 டாலர்களாகும். நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 351.74% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.
கார்டானோ நிலவரம்
கார்டானோ மதிப்பானது 10.77% அதிகரித்து, 2.85 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 2.88 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 2.52 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 1481.32% ஏற்றம் கண்டுள்ளது. இதன் புதிய வரலாற்று உச்சம் 2.88 டாலர்களாகும். இன்று தான் எட்டியுள்ளது.
எக்ஸ்ஆர்பி நிலவரம்
எக்ஸ்ஆர்பி-யின் மதிப்பானது 4.24% அதிகரித்து, 1.27 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 1.30 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 1.18 டாலராகும். இதன் வரலாற்று உச்ச விலை 3.40 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 455.74% ஏற்றம் கண்டுள்ளது.
டோஜ்காயின் தற்போதைய நிலவரம்
டோஜ்காயின் மதிப்பானது 1.66% அதிகரித்து, 0.321064 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.325055 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.305418 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 6,671.09% ஏற்றம் கண்டுள்ளது.
யுனிஸ்வாப் மதிப்பு
யுனிஸ்வாப் மதிப்பானது 2.88% குறைந்து, 29.12 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 29.64 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 27.22 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 603.41% லாபத்தில் தான் உள்ளது.
போல்கடோட் நிலவரம் என்ன?
போல்கடோட் மதிப்பானது தற்போது 1.44% குறைந்து, 27.95 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 28.64 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 26.56 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 285.93% லாபத்தில் தான் உள்ளது.
More From GoodReturns

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications