வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று பங்கு சந்தைகள் பட்டையை கிளப்பிக் கொண்டுள்ள நிலையில், கிரிப்டோகரன்சிகளின் மதிப்பானது தொடர்ந்து வீழ்ச்சியினை சந்தித்து வருகின்றன.
இது கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களிடையே சற்று அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும், பிட்காயினில் ஏற்ற இறக்கம் அதிகம் என்பதால் இது பெரியளவில் அதன் முதலீட்டாளர்கள் மத்தியில் தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை.
உலகின் பல நாடுகளும் கிரிப்டோகரன்சிகளை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ள நிலையில், சில நாடுகள் சொந்தமாக டிஜிட்டல் நாணயங்களை அறிமுகப்படுத்த தொடங்கியுள்ளன.
ஒரு புறம் எதிர்காலத்தில் கிரிப்டோகரன்சிகளின் நிலை என்னவாகும் என்ற அச்சம் இருந்து வந்தாலும், அமெரிக்காவின் மிகப்பெரிய கார்ப்ரேட் நிறுவனங்கள் கூட கிரிப்டோகரன்சிகளை ஏற்றுக் கொண்டுள்ளன. இது எதிர்காலத்தில் இந்த கிரிப்டோ சந்தையில் மாபெரும் புரட்சி ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தானோ என்னவோ சில நாடுகள் சொந்தமாக ஒரு டிஜிட்டல் கரன்சியை உருவாக்க ஆரம்பித்துள்ளன.
பலத்த சரிவு
பிட்காயின் மதிப்பானது கடந்த மே மாதத்தில் 64,000 டாலர்களை தொட்ட நிலையில், நல்ல வாய்ப்புகளை மிஸ் செய்துவிட்டோமோ என்ற கருத்தும் நிலவி வந்தது. ஆனால் சில மாதங்களிலேயே மீண்டும் அதல பாதாளம் நோக்கி சென்றது பிட்காயின். எனினும் கடந்த சில வாரங்களாகவே சற்று பெரியளவில் மாற்றமில்லாமல் வர்த்தகமாகி வருகின்றது. எப்படியிருப்பினும் சந்தை மதிப்பில் இன்று பிட்காயின் என்பது ஒரு கவர்ச்சிகரமான காயினாகத் தான் பார்க்கப்படுகிறது.
பிட்காயின் நிலவரம்
தற்போது பிட்காயின் மதிப்பானது 1.82% குறைந்து, 47,849.09 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 48,712.68 டாலர்களாகும். இதே இதன் குறைந்தபட்ச விலை 47,151.93 டாலர்களாகும். நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 63.94% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.
எத்திரியம் மதிப்பு
இதே எத்தரியத்தின் மதிப்பானது அதனை விட சரிவினைக் கண்டுள்ளது. இது தற்போது 3.46% குறைந்து, 3,154.96 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 3,273.03 டாலர்களாகும். இதே குறைந்தபட்ச விலை 3,081.68 டாலர்களாகும். நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 326.42% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.
கார்டானோ நிலவரம்
கார்டானோ மதிப்பானது 2.92% குறைந்து, 2.69 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 2.85 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 2.59 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 1393.57% ஏற்றம் கண்டுள்ளது. இதன் புதிய வரலாற்று உச்சம் 2.97 டாலர்களாகும். இன்று தான் எட்டியுள்ளது.
எக்ஸ்ஆர்பி நிலவரம்
எக்ஸ்ஆர்பி-யின் மதிப்பானது 4.28% குறைந்து, 1.15 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 1.21 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 1.11 டாலராகும். இதன் வரலாற்று உச்ச விலை 3.40 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 424.72% ஏற்றம் கண்டுள்ளது.
டோஜ்காயின் தற்போதைய நிலவரம்
டோஜ்காயின் மதிப்பானது 3.76% குறைந்து, 0.287041 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.302398 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.276477 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 6007.10% ஏற்றம் கண்டுள்ளது.
யுனிஸ்வாப் மதிப்பு
யுனிஸ்வாப் மதிப்பானது 4.88% குறைந்து, 26.55 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 28.10 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 25.71 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 540.68% லாபத்தில் தான் உள்ளது.
போல்கடோட் நிலவரம் என்ன?
போல்கடோட் மதிப்பானது தற்போது 4.66% குறைந்து, 25.50 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 26.87 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 24.40 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 251.83% லாபத்தில் தான் உள்ளது.


Click it and Unblock the Notifications