கிரிப்டோகரன்சி சந்தையானது பலமான ஏற்ற இறக்கத்தில் இருப்பதால், பெரும் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
எப்படியிருப்பினும் இந்திய மக்கள் மத்தியில் இது இன்னும் நன் மதிப்பினை பெறவில்லை எனலாம். இன்னும் இந்திய முதலீட்டாளர்கள் பார்வையில் கிரிப்டோகரன்சிகள் சரியான முதலீடாக பார்க்கப்படவில்லை.
இதனாலேயே இந்தியாவில் கிரிப்டோ முதலீடுகளுக்கு அனுமதி இருந்தாலும், பெரியளவில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டவில்லை எனலாம். அதெல்லாம் சரி இன்றைய டாப் கரன்சிகளின் விலை நிலவரம் என்ன என்பதைத் தான் பார்க்கவிருக்கின்றோம்.
பிட்காயின் நிலவரம்
தற்போது பிட்காயின் மதிப்பானது 3.50% குறைந்து, 32,352.05 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 33,592.57 டாலர்களாகும். இதே குறைந்தபட்ச விலை 32,352.05 டாலர்களாகும். நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 13.26% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.
எத்திரியம் மதிப்பு
இதே போன்று எத்தரியத்தின் மதிப்பானது 6.54% குறைந்து, 1968.32 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 2,108.17 டாலர்களாகும். இதே குறைந்தபட்ச விலை 1965.29 டாலர்களாகும். நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 166.56% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.
கார்டானோ நிலவரம்
கார்டானோ மதிப்பானது 4.54% குறைந்து, 1.27 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 1.34 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 1.27 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 617.78% ஏற்றம் கண்டுள்ளது. இதன் வரலாற்று உச்சம் 2.47 டாலர்களாகும்.
எக்ஸ்ஆர்பி நிலவரம்
எக்ஸ்ஆர்பி-யின் மதிப்பானது 2.77% குறைந்து, 0.617551 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.642301 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.616994 டாலராகும். இதன் வரலாற்று உச்ச விலை 3.40 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 182.92% ஏற்றம் கண்டுள்ளது.
டோஜ்காயின் தற்போதைய நிலவரம்
டோஜ்காயின் மதிப்பானது 6.02% குறைந்து, 0.199150 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.213351 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.199059 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 4,177.48% ஏற்றம் கண்டுள்ளது.
யுனிஸ்வாப் மதிப்பு
யுனிஸ்வாப் மதிப்பானது 8.19% குறைந்து, 18.68 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 20.42 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 18.64 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 351.88% லாபத்தில் தான் உள்ளது.
போல்கடோட் நிலவரம் என்ன?
போல்கடோட் மதிப்பானது தற்போது 5.89% குறைந்து, 14.30 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 15.21 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 14.27 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 97.15% லாபத்தில் தான் உள்ளது.


Click it and Unblock the Notifications