இன்று கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் என்றே கூறலாம். ஏனெனில் தொடர்ந்து நடப்பு மாதம் சற்று ஏற்றத்திலேயே காணப்படுகின்றது.
இது குறைந்த விலையில் வாங்கியவர்களுக்கு நல்ல லாபத்தினை கொடுத்திருக்கும். இந்தியாவில் தற்போது கிரிப்டோகரன்சி முதலீடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், பிட்காயின், எத்திரியம், பைனான்ஸ் காயின், கார்டானோ, எக்ஸ்ஆர்பி, யுஎஸ்டி காயின், போல்கடோட், யுனிஸ்வாப் உள்ளிட்ட கிரிப்டோகளின் விலை நிலவரம் என்ன? என்பதை பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
தற்போதைய நிலையில் பிட்காயின் பெரும் அளவில் முதலீடு செய்யப்பட்டு வரும் ஒரு கிரிப்டோகரன்சி கரன்சியாக உள்ளது.
Array
தற்போது பிட்காயின் மதிப்பானது 1.70% அதிகரித்து, 34,801.48 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 35,053.01 டாலர்களாகும். இதே குறைந்தபட்ச விலை 33,556.29 டாலர்களாகும்.
இதே போன்று எத்தரியத்தின் மதிப்பானது 2.53% அதிகரித்து, 2,378.56 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 2,407.27 டாலர்களாகும். இதே குறைந்தபட்ச விலை 2274.83 டாலர்களாகும். நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 222.23% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.
கார்டானோ நிலவரம்
கார்டானோ மதிப்பானது 0.46% அதிகரித்து, 1.43 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 1.44 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 1.39 டாலராகும்.இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 697.08% ஏற்றம் கண்டுள்ளது. இதன் வரலாற்று உச்சம் 2.47 டாலர்களாகும்.
Array
எக்ஸ்ஆர்பி-யின் மதிப்பானது 0.37% அதிகரித்து, 0.669573 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.673735 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.652393 டாலராகும். இதன் வரலாற்று உச்ச விலை 3.40 டாலராகும்.
மற்ற நாணயங்களின் மதிப்பானது சற்று ஏற்றம் கண்டிருந்தாலும், டோஜ்காயின் மதிப்பானது 0.84% குறைந்து, 0.234273 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.238455 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.229345 டாலராகும்.
Array
யுனிஸ்வாப் மதிப்பானது 1.80% அதிகரித்து, 22.95 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 23.44 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 21.61 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 453.41% லாபத்தில் தான் உள்ளது.
போல்கடோட் மதிப்பானது தற்போது 7.25% அதிகரித்து, 16.84 டாலராக காணப்படுகிறது.
கிரிப்டோகரன்சிகளை பொறுத்தவரையில் தற்போது இந்தியாவில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், இது குறித்தான புதிய விதிமுறைகள் கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு அதிக ஏற்ற இறக்கம் உள்ளதால், இது சிறு முதலீட்டாளர்களுக்கு ஏற்றதல்ல என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications