இன்று கிரிப்டோ முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் என்றே கூறலாம். ஏனெனில் தொடர்ந்து சமீபத்திய நாட்களாக சரிவில் இருந்து வந்த நிலையில், இன்று அனைத்தும் பச்சை நிறத்திற்கு திரும்பியுள்ளன.
இது குறைந்த விலையில் வாங்கியவர்களுக்கு நல்ல லாபத்தினை கொடுத்திருக்கும்.
இந்தியாவில் தற்போது கிரிப்டோகரன்சி முதலீடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், பிட்காயின், எத்திரியம், பைனான்ஸ் காயின், கார்டானோ, எக்ஸ்ஆர்பி, யுஎஸ்டி காயின், போல்கடோட், யுனிஸ்வாப் உள்ளிட்ட கிரிப்டோகளின் நிலவரம் என்ன வாருங்கள் பார்க்கலாம்.

தற்போதைய நிலையில் பிட்காயின் பெரும் அளவில் முதலீடு செய்யப்பட்டு வந்தாலும், டாப் 10 கிரிப்டோகரன்சிகளின் விலையினை பற்றித் தான் தற்போது பார்க்கவிருக்கிறோம்.
சமீப காலமாக தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்த பிட்காயின், தற்போது 5.14% அதிகரித்து, 35,898.62 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 35,939.76 டாலர்களாகும். இதே குறைந்தபட்ச விலை 33,976.55 டாலர்களாகும். இந்த ஆண்டில் இதுவரையில் 22.56% லாபத்தில் பிட்காயின் உள்ளது.
இதே எத்தரியத்தின் மதிப்பானது 9.15% அதிகரித்து, 2,183.33 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 2,190.01 டாலர்களாகும். இதே குறைந்தபட்ச விலை 2,001.88 டாலர்களாகும். இது நடப்பு ஆண்டில் இதுவரையில் 194.92% லாபத்தில் உள்ளது.
எக்ஸ்ஆர்பி-யின் மதிப்பானது 14.47% அதிகரித்து, 0.720054 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.7328.06 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.628300 டாலராகும். இது நடப்பு ஆண்டில் இதுவரையில் 228.50% ஏற்றத்தில் காணப்படுகிறது.
கார்டானோ மதிப்பானது 6.99% அதிகரித்து, 1.40 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 1.41 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 1.31 டாலராகும். இது நடப்பு ஆண்டில் இதுவரையில் 673.68% ஏற்றத்தில் காணப்படுகிறது.
டெதரின் மதிப்பானது 0.06% அதிகரித்து, 1 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலையான 1 டாலராகவும், குறைந்தபட்ச விலை என்பது 0999649 டாலராகும்.
டோஜ்காயின் மதிப்பானது 7.30% அதிகரித்து, 0.274097 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.275650 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.251869 டாலராகவும் உள்ளது. நடப்பு ஆண்டில் இது வரையில் 5597.99% ஏற்றத்தில் காணப்படுகிறது.
யுனிஸ்வாப் மதிப்பானது 10.37% அதிகரித்து, 18.82 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 19.01 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 16.99 டாலராகவும் உள்ளது. எப்படியிருப்பினும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 354.53% லாபத்தில் தான் உள்ளது.
போல்கடோட் மதிப்பானது தற்போது 10.30% அதிகரித்து, 16.52 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 16.65 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 14.82 டாலராகவும் உள்ளது.
இதே யுஎஸ்டி காயின் சற்று ஏற்றம் கண்டு 1 டாலராகவும் காணப்படுகின்றது.
More From GoodReturns

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

பங்குச்சந்தை பக்கம் தலை வச்சு கூட படுக்க கூடாது!! 6 லட்சம் கோடி அவுட்!! கதறும் முதலீட்டாளர்கள்!!

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!



Click it and Unblock the Notifications