கிரிப்டோகரன்சிகளுக்கான ஆதாரவுகள் ஒரு புறம் பெருகி வரும் நிலையில், இந்தியாவில் இது குறித்தான கட்டுப்பாடுகள் வரலாமோ என்ற அச்சம் நிலவி வருகின்றது.
எனினும் அமெரிக்காவில் கிரிப்டோகரன்சிகளுக்கான ஆதரவு என்பது தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இது எதிர்காலத்தில் தங்கத்திற்கு மாற்றாக இருக்கலாமோ? என்ற அச்சமும் இருந்து வருகின்றது.
இப்படி பல்வேறு காரணிகளுக்கும் மத்தியில் இன்று வரையில் கிரிப்டோகரன்சிகள் குறித்து ஒரு தெளிவான புரிதல் என்பது இல்லை.
சரியான அடித்தளம் என்பது இல்லை
ஏனெனில் இன்று வரையில் இந்த டிஜிட்டல் நாணயங்களுக்கு சரியான அடித்தளம் என்பது கிடையாது. அதிகாரப்பூர்வமான மையப்படுத்தப்பட்ட எக்ஸ்சேஞ்ச் என்று எதுவும் கிடையாது. எனினும் எல்சல்வடா என்னும் சிறிய நாடு சமீபத்தில் இதனை அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவித்தது. அதே நேரம் இன்று உலகின் முதன்மை பொருளாதார நாடாக இருக்கும் சீனா தடை செய்துள்ளது.
ஆனால் இவற்றில் எதனையும் எதிர்பாராது கிரிப்டோகரன்சி சந்தையானது நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் ஊடுருவி வருகின்றது. அதெல்லாம் சரி தற்போதைய நிலையில் முக்கிய கிரிப்டோக்களின் நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
பிட்காயின் நிலவரம்
பிட்காயின் மதிப்பானது சற்று அதிகரித்து, 60,423 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 61,381.30 டாலர்களாகும். இதே இதன் குறைந்தபட்ச விலை 58,441.91 டாலர்களாகும். நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 103.96% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.
எத்திரியம் மதிப்பு
இதே எத்தரியத்தின் மதிப்பானது தற்போது 1.25% குறைந்து, 4,215.38 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 4,347.45 டாலர்களாகும். இதே குறைந்தபட்ச விலை 4,069.68 டாலர்களாகும். நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 460.39% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.
கார்டானோ நிலவரம்
கார்டானோ மதிப்பானது 2.34% குறைந்து, 1.86 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 1.95 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 1.80 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 880.99% ஏற்றம் கண்டுள்ளது. இதன் வரலாற்று உச்சம் 3.10 டாலர்களாகும்.
எக்ஸ்ஆர்பி நிலவரம்
எக்ஸ்ஆர்பி-யின் மதிப்பானது சற்று அதிகரித்து, 1.10 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 1.12 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 1.06 டாலராகும். இதன் வரலாற்று உச்ச விலை 3.40 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 383.19% ஏற்றம் கண்டுள்ளது.
ஸ்டெல்லர் மதிப்பு
ஸ்டெல்லர் மதிப்பானது 2.28% குறைந்து, 0.341612 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.35 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.33 டாலராகும். இதன் வரலாற்று உச்ச விலை 0.797482 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 161.81% ஏற்றம் கண்டுள்ளது.
டோஜ்காயின் தற்போதைய நிலவரம்
டோஜ்காயின் மதிப்பானது சற்று குறைந்து, 0.238321 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.25 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.23 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 4,858.67% ஏற்றத்தினைக் கண்டுள்ளது. இதன் வரலாற்று உச்ச விலை 0.740796 டாலராகும்.
யுனிஸ்வாப் மதிப்பு
யுனிஸ்வாப் மதிப்பானது 1% அதிகரித்து, 21.81 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 22.18 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 21.08 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 413.89% லாபத்தில் தான் உள்ளது. இதன் வரலாற்று உச்ச விலை 45.01 டாலராகும்.
போல்கடோட் நிலவரம் என்ன?
போல்கடோட் மதிப்பானது தற்போது 0.75% குறைந்து, 40.70 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 42.79 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 38.82 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 439.84% லாபத்தில் தான் உள்ளது. இதன் வரலாற்று உச்ச விலை 55.11 டாலராகும்.
லைட்காயின் நிலவரம்
லைட்காயின் மதிப்பானது தற்போது சற்று 0.56% குறைந்து, 233.66 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 240.92 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 218.45 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 80.81% லாபத்தில் தான் உள்ளது. இதன் வரலாற்று உச்ச விலை 413.47 டாலராகும்.
ஷிபா இனு நிலவரம்
ஷிபா இனு மதிப்பானது தற்போது 0.61% அதிகரித்து, 0.000050 டாலராக காணப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 61.91M% ஏற்றத்தில் தான் உள்ளது. இதன் வரலாற்று உச்ச விலை 0.000089 டாலராகும்.
More From GoodReturns

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!



Click it and Unblock the Notifications