வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு, பெரியளவில் மாற்றமின்றி ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
ஒரு புறம் கிரிப்டோகரன்சிகள் மீதான ஆதரவுகள் அதிகரித்து வந்தாலும், மறுபுறம் கிரிப்டோவுக்கு எதிரான எச்சரிக்கைகளும் வந்து கொண்டு தான் உள்ளது.
அமெரிக்காவின் தொழில்நுட்ப நிபுணர் எட்வர்ட் ஸ்னோடென், ஷிபா இனுவில் முதலீடு செய்வதற்கு எதிராக மக்களை எச்சரித்துள்ள நிலையில், ஷிபா இனுவின் மதிப்பானது சரிவினைக் கண்டு வருகின்றது.
பிட்காயின் நிலவரம்
பிட்காயின் மதிப்பானது சற்று அதிகரித்து, 63,195.97 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 64,292.82 டாலர்களாகும். இதே இதன் குறைந்தபட்ச விலை 62,671.43 டாலர்களாகும். நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 118.36% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.
எத்திரியம் மதிப்பு
இதே எத்தரியத்தின் மதிப்பானது தற்போது 3.08% அதிகரித்து, 4,584.30 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 4,642.48 டாலர்களாகும். இதே குறைந்தபட்ச விலை 4,415.94 டாலர்களாகும். நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 523.22% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.
கார்டானோ நிலவரம்
கார்டானோ மதிப்பானது 8.50% அதிகரித்து, 2.14 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 2.14 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 1.95 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பெரியளவில் மாற்றம் காணவில்லை. இதன் புதிய வரலாற்று உச்சம் 3.10 டாலர்களாகும்.
எக்ஸ்ஆர்பி நிலவரம்
எக்ஸ்ஆர்பி-யின் மதிப்பானது 8.40% அதிகரித்து, 1.20 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 1.24 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 1.11 டாலராகும். இதன் வரலாற்று உச்ச விலை 3.40 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 443.23% ஏற்றம் கண்டுள்ளது.
ஸ்டெல்லர் மதிப்பு
ஸ்டெல்லர் மதிப்பானது 5.76% அதிகரித்து, 0.391703 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.40 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.37 டாலராகும். இதன் வரலாற்று உச்ச விலை 0.797482 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 207.27% ஏற்றம் கண்டுள்ளது.
டோஜ்காயின் தற்போதைய நிலவரம்
டோஜ்காயின் மதிப்பானது 0.26% அதிகரித்து, 0.273856 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.28 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.27 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 5,726.87% சரிவினைக் கண்டுள்ளது. இதன் வரலாற்று உச்ச விலை 0.740796 டாலராகும்.
யுனிஸ்வாப் மதிப்பு
யுனிஸ்வாப் மதிப்பானது 3.94% அதிகரித்து, 26.59 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 27.08 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 25.52 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 545.35% லாபத்தில் தான் உள்ளது. இதன் வரலாற்று உச்ச விலை 45.01 டாலராகும்.
போல்கடோட் நிலவரம் என்ன?
போல்கடோட் மதிப்பானது தற்போது 1.54% குறைந்து, 51.73 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 53.37 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 49.70 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 609.39% லாபத்தில் தான் உள்ளது. இதன் வரலாற்று உச்ச விலை 53.37 டாலராகும்.
லைட்காயின் நிலவரம்
லைட்காயின் மதிப்பானது தற்போது 2.26% அதிகரித்து, 205.84 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 209.22 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 198.50 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 66.29% லாபத்தில் தான் உள்ளது. இதன் வரலாற்று உச்ச விலை 413.47 டாலராகும்.
ஷிபா இனு நிலவரம்
ஷிபா இனு மதிப்பானது தற்போது 7.58% சரிந்து, 0.000065 டாலராக காணப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 84.43% லாபத்தில் தான் உள்ளது. இதன் வரலாற்று உச்ச விலை 413.47 டாலராகும்.
More From GoodReturns

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

பங்குச்சந்தை பக்கம் தலை வச்சு கூட படுக்க கூடாது!! 6 லட்சம் கோடி அவுட்!! கதறும் முதலீட்டாளர்கள்!!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:



Click it and Unblock the Notifications