வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான இன்று மிகப்பெரிய கிரிப்டோவான, பிட்காயின் மதிப்பானது 4 வாரத்தில் இல்லாதளவுக்கு, இன்று 50,000 டாலர்களை எட்டியுள்ளது.
இது கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களிடையே மேலும் ஊக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பிட்காயின் 5% ஏற்றம் கண்டுள்ள நிலையில், அதன் முதலீட்டாளர்கள் மத்தியில் குதூகலத்தினை ஏற்படுத்தியுள்ளது.
சிறிய நாடான எல் சால்வடோர் அரசு, மிகப்பெரிய கிரிப்டோவான பிட்காயினை, அதன் அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவித்துள்ளது. இது கிரிப்டோகரன்சி சந்தைக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்த நிலையில் தான் பிட்காயின் மதிப்பானது மீண்டும் 50,000 டாலர்களை எட்டியுள்ளது.
கிரிப்டோக்கள் சரிவு?
கடந்த செப்டம்பர் 7 அன்று சால்வடோர் நாடு அதிகாரப்பூர்வ நாணயமாக, சட்டபூர்வமாக பிட்காயினை ஏற்றுக் கொண்ட நிலையில், பிட்காயினை ஏற்றுக் கொண்ட முதல் நாடாக உள்ளது. அன்று 17% அதிகமாக பிட்காயின் விலையானது 52,000 டாலர்களில் இருந்து சரிவினைக் காண்டது. மற்ற கிரிப்டோக்களின் விலையும் அன்று சரிவினைக் கண்ட நிலையில், தற்போது தான் மீண்டும் வரத் தொடங்கியுள்ளது.
பிட்காயின் நிலவரம்
தற்போது பிட்காயின் மதிப்பானது 5.04% அதிகரித்து, 49,980 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 50,361.60 டாலர்களாகும். இதே இதன் குறைந்தபட்ச விலை 49,937.62 டாலர்களாகும். நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 72.92% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.
எத்திரியம் மதிப்பு
இதே எத்தரியத்தின் மதிப்பானது தற்போது 4.02% அதிகரித்து, 3,450.60 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 3,473.46 டாலர்களாகும். இதே குறைந்தபட்ச விலை 3,275.13 டாலர்களாகும். நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 368.24% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.
கார்டானோ நிலவரம்
கார்டானோ மதிப்பானது 2.55% அதிகரித்து, 2.23 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 2.25 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 2.15 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பெரியளவில் ஏற்றம் கண்டுள்ளது. இதன் புதிய வரலாற்று உச்சம் 3.10 டாலர்களாகும்.
எக்ஸ்ஆர்பி நிலவரம்
எக்ஸ்ஆர்பி-யின் மதிப்பானது 3.03% அதிகரித்து, 1.06 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 1.07 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 1.01 டாலராகும். இதன் வரலாற்று உச்ச விலை 3.40 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 377.81% ஏற்றம் கண்டுள்ளது.
டோஜ்காயின் தற்போதைய நிலவரம்
டோஜ்காயின் மதிப்பானது 11.51% அதிகரித்து, 0.238842 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.25 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.21 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 4928.60% சரிவினைக் கண்டுள்ளது.
யுனிஸ்வாப் மதிப்பு
யுனிஸ்வாப் மதிப்பானது 1.89% அதிகரித்து, 25.43 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 25.75 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 24.28 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 517.12% லாபத்தில் தான் உள்ளது.
போல்கடோட் நிலவரம் என்ன?
போல்கடோட் மதிப்பானது தற்போது 3.16% அதிகரித்து, 31.75 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 32.14 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 30.07 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 339.53% லாபத்தில் தான் உள்ளது.
More From GoodReturns

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!



Click it and Unblock the Notifications