தொடர் ஏற்றத்தில் கிரிப்டோகரன்சிகள்.. பிட்காயின் 7% மேலாக ஏற்றம்.. மற்ற கரன்சிகள் நிலவரம்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிரிப்டோகரன்சிகளின் மதிப்பு தொடர்ந்து ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் சர்வதேச அளவிலான கிரிப்டோகளின் சந்தை மூலதன மதிப்பானது கடந்த அமர்வில் 189.26 லட்சம் கோடி ரூபாயாக அல்லது 1.87% அதிகரித்திருந்தது.

எனினும் கடந்த 24 மணி நேரத்தில் மொத்த கிரிப்டோ சந்தையின் மதிப்பானது 6,83,293 லட்சம் கோடி ரூபாயாக சரிவினைக் கண்டுள்ளது. அதாவது 6.77% வீழ்ச்சியினை கண்டுள்ளது.

கடந்த அமர்வில் 6 மாத உச்சத்தினை தொட்ட பிட்காயின் மதிப்பானது இன்று மீண்டும் உச்சத்தினை எட்டியுள்ளது. இது அமெரிக்க பங்கு சந்தை கட்டுபாட்டு வாரியம் பிட்காயின் இடிஎஃப் தொடங்கிய நிலையில், பிட்காயின் மதிப்பானது தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இது கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களிடையே மேலும் ஊக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

நம்பிக்கை அதிகரிப்பு

நம்பிக்கை அதிகரிப்பு

இது அமெரிக்காவின் இந்த நடவடிக்கையானது கிரிப்டோகரன்சிகள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தியுள்ளது. சமீபத்தில் சிறிய நாடான எல் சால்வடோர் அரசு, மிகப்பெரிய கிரிப்டோவான பிட்காயினை, அதன் அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவித்தையடுத்து, இது கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை கொடுத்தது.

பிட்காயின் நிலவரம்

பிட்காயின் நிலவரம்

இந்த நிலையில் தான் பிட்காயின் மதிப்பானது மீண்டும் தற்போது 66,000 டாலர்களை தாண்டி வர்த்தகமாக தொடங்கியுள்ளது. தற்போது பிட்காயின் மதிப்பானது 7.53% அதிகரித்து, 66,444.60 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 66,473.50 டாலர்களாகும். இதே இதன் குறைந்தபட்ச விலை 61,424.44 டாலர்களாகும். நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 122.01% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

எத்திரியம் மதிப்பு

எத்திரியம் மதிப்பு

இதே எத்தரியத்தின் மதிப்பானது தற்போது 5.12% அதிகரித்து, 4,001.42 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 4,018.62 டாலர்களாகும். இதே குறைந்தபட்ச விலை 3,746 டாலர்களாகும். நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 440.92% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.

கார்டானோ நிலவரம்

கார்டானோ நிலவரம்

கார்டானோ மதிப்பானது 3.07% அதிகரித்து, 2.19 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 2.19 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 2.09 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பெரியளவில் மாற்றம் காணவில்லை. இதன் புதிய வரலாற்று உச்சம் 3.10 டாலர்களாகும்.

எக்ஸ்ஆர்பி நிலவரம்

எக்ஸ்ஆர்பி நிலவரம்

எக்ஸ்ஆர்பி-யின் மதிப்பானது 4.32% அதிகரித்து, 1.13 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 1.14 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 1.07 டாலராகும். இதன் வரலாற்று உச்ச விலை 3.40 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 407.16% ஏற்றம் கண்டுள்ளது.

ஸ்டெல்லர் மதிப்பு

ஸ்டெல்லர் மதிப்பு

ஸ்டெல்லர் மதிப்பானது 2.83% அதிகரித்து, 0.380926 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.38 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.37 டாலராகும். இதன் வரலாற்று உச்ச விலை 0.797482 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 196.42% ஏற்றம் கண்டுள்ளது.

டோஜ்காயின் தற்போதைய நிலவரம்

டோஜ்காயின் தற்போதைய நிலவரம்

டோஜ்காயின் மதிப்பானது 4.28% அதிகரித்து, 0.252591 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.26 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.24 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 5,127.37% சரிவினைக் கண்டுள்ளது.

யுனிஸ்வாப் மதிப்பு

யுனிஸ்வாப் மதிப்பு


யுனிஸ்வாப் மதிப்பானது 4.44% அதிகரித்து, 26.49 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 26.53 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 25.30 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 522.49% லாபத்தில் தான் உள்ளது.

போல்கடோட் நிலவரம் என்ன?

போல்கடோட் நிலவரம் என்ன?

போல்கடோட் மதிப்பானது தற்போது 6.45% அதிகரித்து, 42.65 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 42.80 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 40.03 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 479.33% லாபத்தில் தான் உள்ளது. இதன் வரலாற்று உச்ச விலை 49.80 டாலராகும்.

லைட்காயின் நிலவரம்

லைட்காயின் நிலவரம்

லைட்காயின் மதிப்பானது தற்போது 7.73% அதிகரித்து, 198.05 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 199.60 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 183.74 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 56.53% லாபத்தில் தான் உள்ளது. இதன் வரலாற்று உச்ச விலை 413.47 டாலராகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Cryptocurrency prices on October 20th, 2021: bitcoin surges above 7%

Cryptocurrency prices on October 20th, 2021: bitcoin surges above 7% cryptocurrency latest updates.. Cryptocurrency prices on October 20th, 2021. Bitcoin surges above 7%, Ethereum also jumped 7.39% to $4,045.91
Story first published: Wednesday, October 20, 2021, 20:14 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X