வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான, இன்று பங்கு சந்தைகள் பட்டையை கிளப்பிக் கொண்டுள்ளது. இந்த நிலையில் கிரிப்டோகரன்சிகளின் மதிப்பும் தொடர்ந்து ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது.
இது கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களிடையே மேலும் ஊக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பிட்காயின் கிட்டதட்ட 8% ஏற்றம் கண்டுள்ளது.
கடந்த சில வாரங்களாகவே பெரியளவில் மாற்றமில்லாமல் காணப்பட்ட நிலையில், சிறிய நாடான எல் சால்வடோர் அரசு, மிகப்பெரிய கிரிப்டோவான பிட்காயினை, அதன் அதிகாரப்பூர்வ நாணயமாக அறிவித்ததையடுத்து, இது கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளது.
பிட்காயின் நிலவரம்
இந்த நிலையில் தான் பிட்காயின் மதிப்பானது மீண்டும் 50,000 டாலர்களை தாண்டி வர்த்தகமாக தொடங்கியது. குறிப்பாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. தற்போது பிட்காயின் மதிப்பானது 7.40% அதிகரித்து, 54,404.23 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 55,735.52 டாலர்களாகும். இதே இதன் குறைந்தபட்ச விலை 50,433 டாலர்களாகும். நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 89.05% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.
எத்திரியம் மதிப்பு
இதே எத்தரியத்தின் மதிப்பானது தற்போது 6.30% அதிகரித்து, 3,579.70 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 3,628.01 டாலர்களாகும். இதே குறைந்தபட்ச விலை 3,346.52 டாலர்களாகும். நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 387.57% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.
கார்டானோ நிலவரம்
கார்டானோ மதிப்பானது 10.32% அதிகரித்து, 2.34 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 2.37 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 2.11 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பெரியளவில் மாற்றம் காணவில்லை. இதன் புதிய வரலாற்று உச்சம் 3.10 டாலர்களாகும்.
எக்ஸ்ஆர்பி நிலவரம்
எக்ஸ்ஆர்பி-யின் மதிப்பானது 5.77% அதிகரித்து, 1.09 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 1.11 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 1.02 டாலராகும். இதன் வரலாற்று உச்ச விலை 3.40 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 389.58% ஏற்றம் கண்டுள்ளது.
ஸ்டெல்லர் மதிப்பு
ஸ்டெல்லர் மதிப்பானது 15.59% அதிகரித்து, 0.354905 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.37 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.31 டாலராகும். இதன் வரலாற்று உச்ச விலை 0.797482 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 181.67% ஏற்றம் கண்டுள்ளது.
டோஜ்காயின் தற்போதைய நிலவரம்
டோஜ்காயின் மதிப்பானது 0.11% குறைந்து, 0.244232 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.26 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.24 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 5,130.43% சரிவினைக் கண்டுள்ளது.
யுனிஸ்வாப் மதிப்பு
யுனிஸ்வாப் மதிப்பானது 6.58% அதிகரித்து, 25.58 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 26.09.75 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 23.83 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 522.49% லாபத்தில் தான் உள்ளது.
போல்கடோட் நிலவரம் என்ன?
போல்கடோட் மதிப்பானது தற்போது 13.77% அதிகரித்து, 33.31 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 33.99 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 29.13 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 349.09% லாபத்தில் தான் உள்ளது. இதன் வரலாற்று உச்ச விலை 49.80 டாலராகும்.
லைட்காயின் நிலவரம்
லைட்காயின் மதிப்பானது தற்போது 10.40% அதிகரித்து, 182.35 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 186.86 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 164.01 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 48.71% லாபத்தில் தான் உள்ளது. இதன் வரலாற்று உச்ச விலை 413.47 டாலராகும்.


Click it and Unblock the Notifications