இன்று கிரிப்டோக்களின் சந்தையானது பட்டை கிளப்பிக் கொண்டுள்ள நிலையில், பல்வேறு நாணயங்கள் தொடர்ந்து மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளன.
குறிப்பாக இன்று பல்வேறு நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டாலும், சந்தையில் இன்றளவிலும் அதிக சந்தை மதிப்புக் கொண்ட முதல் நாணயமாக இருப்பது பிட்காயின் தான்.
பிட்காயின் மட்டும் அல்ல, சந்தையில் உள்ள டாப் கிரிப்டோகளின் விலையும் அதிகரித்து தான் காணப்படுகிறது.
எதிர்காலம் எப்படி?
உலகின் பல நாடுகளும் கிரிப்டோகரன்சிகளை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்துள்ள நிலையில், சில நாடுகள் சொந்தமாக டிஜிட்டல் நாணயங்களை அறிமுகப்படுத்தி வருகின்றன. இதனால் எதிர்காலத்தில் கிரிப்டோகரன்சிகளுக்கு நல்ல எதிர்காலம் இருக்கலாம். இதன் ஒழுங்குமுறை அமைப்பு என்பது சரிசெய்யப்பட்டால், நிச்சயம் கிரிப்டோக்களுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாக நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
பிட்காயின் நிலவரம்
தற்போது பிட்காயின் மதிப்பானது 5.4% அதிகரித்து, 50,123.73 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 50,352 டாலர்களாகும். இதே இதன் குறைந்தபட்ச விலை 47,298.79 டாலர்களாகும். நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 72.42% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் சந்தை மதிப்பானது 1.36 பில்லியன் டாலராகும். இதன் மொத்த சந்தை மதிப்பானது 942.51 பில்லியன் டாலராகும்.
எத்திரியம் மதிப்பு
இதே எத்தரியத்தின் மதிப்பானது பிட்காயினை விட ஏற்றத்தினை கண்டுள்ளது. இது தற்போது 6.97% அதிகரித்து, 3,767.65 டாலர்களாக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 3,841.69 டாலர்களாகும். இதே குறைந்தபட்ச விலை 3,520.50 டாலர்களாகும். நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில் இருந்து 408.73% ஏற்றத்தில் தான் காணப்படுகிறது.
கார்டானோ நிலவரம்
கார்டானோ மதிப்பானது 8.37% அதிகரித்து 3.06 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 3.10 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 2.81 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 1591.06% ஏற்றம் கண்டுள்ளது. இதன் புதிய வரலாற்று உச்சம் 3.10 டாலர்களாகும்.
எக்ஸ்ஆர்பி நிலவரம்
எக்ஸ்ஆர்பி-யின் மதிப்பானது 7.31% அதிகரித்து, 1.29 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 1.30 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 1.18 டாலராகும். இதன் வரலாற்று உச்ச விலை 3.40 டாலராகும். இது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 177.04% ஏற்றம் கண்டுள்ளது.
டோஜ்காயின் தற்போதைய நிலவரம்
டோஜ்காயின் மதிப்பானது 7.5% அதிகரித்து, 0.305452 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 0.308646 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 0.280427 டாலராகும்.
யுனிஸ்வாப் மதிப்பு
யுனிஸ்வாப் மதிப்பானது 1.10% அதிகரித்து, 30.46 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 31.41 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 29.59 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 634.37% லாபத்தில் தான் உள்ளது.
போல்கடோட் நிலவரம் என்ன?
போல்கடோட் மதிப்பானது தற்போது 7.46% அதிகரித்த, 32.35 டாலராக காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இதன் அதிகபட்ச விலை 33.84 டாலராகவும், இதே குறைந்தபட்ச விலை என்பது 29.63 டாலராகும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து 345.61% லாபத்தில் தான் உள்ளது.
More From GoodReturns

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications