சிஎஸ்கே பிராண்ட் மதிப்பில் பெரும் சரிவு.. ரசிகர்கள் அதிர்ச்சி..! #Dhoni

இந்திய கிரிக்கெட் உலகை மட்டும் அல்லாமல் சர்வதேச கிரிக்கெட் உலகையும் திரும்பிப் பார்க்க வைக்கும் ஐபிஎல் போட்டிகள் அடுத்தச் சில நாட்களில் தொடங்க இருக்கும் நிலையில், கிரிக்கெட் ரசிகர்களுக்கும், ஐபிஎல் அணிகளுக்கும் அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கடந்த 6 வருடத்தில் முதல் முறையாக ஐபிஎல் மற்றும் ஐபிஎல் அணிகளின் பிராண்ட் வேல்யூ குறைந்துள்ளது.

ஐபிஎல் தடுமாற்றம்

ஐபிஎல் தடுமாற்றம்

கொரோனா பாதிப்பு இருந்த காலகட்டத்தில் நடத்தப்பட்ட ஐபிஎல் போட்டியில் டைட்டில் ஸ்பான்சர் முதல் பல முன்னணி நிறுவனங்கள் ஸ்பானசர்ஷிப்-ல் இருந்து விலகியது. இதனால் செலவுகள் அதிகரித்தது மட்டும் அல்லாமல் புதிய ஸ்பான்சர்களுக்குக் குறைவான தொகையைப் பிராண்டிங் வழங்கப்பட்டது.

6 வருடத்தில் முதல் முறை சரிவு

6 வருடத்தில் முதல் முறை சரிவு

இதன் எதிரொலியாக ஐபிஎல் மற்றும் ஐபிஎல் அணிகளின் பிராண்ட் வேல்யூ அதிகளவில் குறைந்துள்ளது. குறிப்பாக 2014க்குப் பின் முதல் முறையாக ஐபிஎல் பிராண்ட் மதிப்பு குறைந்துள்ளதால் இது வரவிருக்கும் ஐபிஎல் போட்டியின் வர்த்தகத்தையும் பாதிக்கும் என
Duff & Phelps தெரிவித்துள்ளது.

ஐபிஎல் பிராண்ட் மதிப்பு

ஐபிஎல் பிராண்ட் மதிப்பு

இந்நிலையில் 2020ல் ஐபிஎல்-ன் பிராண்ட் மதிப்பு மட்டும் 3.6 சதவீதம் குறைந்துள்ளது. இது டாலர் மதிப்பில் 2019ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2020ல் 8.7 சதவீதம் குறைந்து 6.2 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது.

ஐபிஎல் 2020 போட்டிகள்

ஐபிஎல் 2020 போட்டிகள்

2020 ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் வெளிநாட்டில் நடந்த காரணத்தால் மைதானத்தில் கிடைக்கும் வர்த்தகம், வருமானம், விளம்பரம், உணவு மற்றும் குளிர்பான வருமானம் ஆகியவை பெரிய அளவிலான இழப்பு ஏற்பட்டு உள்ளது.

ஐபிஎல் அணிகள்

ஐபிஎல் அணிகள்

இதன் எதிரொலியாக ஐபிஎல் அணிகளின் பிராண்ட் வேல்யூவும் குறைந்துள்ளது பெரும் பாதிப்பாக அமைந்துள்ளது. அதிலும் முக்கியமாக ஐபிஎல்-ல் மிக முக்கிய அணியாகக் கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிராண்ட் மதிப்பு அதிகளவில் குறைந்துள்ளது.

மும்பை இந்தியன்ஸ்

மும்பை இந்தியன்ஸ்

2019ல் மும்பை இந்தியன்ஸ் அணியின் பிராண்ட் வேல்யூ 809 கோடி ரூபாயாக இருந்த நிலையில் 2020ல் 5.9 சதவீதம் சரிந்து 761 கோடி ரூபாயாகக் குறைந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ்

சென்னை சூப்பர் கிங்ஸ்

இதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மதிப்பு அதிகப்படியாக 16.5 சதவீதம் வரை சரிந்து 732 கோடி ரூபாயில் இருந்து 611 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.

மற்ற அணிகளை விடவும் சென்னை அணி தான் அதிகப்படியான சரிவை எதிர்கொண்டு உள்ளது.

 

மற்ற ஐபிஎல் அணிகள்

மற்ற ஐபிஎல் அணிகள்

கொல்கத்தாவின் KKR அணியின் மதிப்பு 13.7 சதவீதம் சரிந்து 629 கோடி ரூபாயில் இருந்து 543 கோடி ரூபாய் அளவில் குறைந்துள்ளது. இதேபோல் ஆர்சிபி அணி 9.9 சதவீதம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 8.5 சதவீதம், டெல்லி கேபிடல்ஸ் 1 சதவீதம், கிங்ஸ் XI பஞ்சாப் 11.3 சதவீதம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8.1 சதவீதம் பிராண்டு வேல்யூ குறைந்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+