சென்னை: முக ஸ்டாலின் தலைமையிலான அரசு மாநிலத்தின் பொருளாதாரத்தை 2030ஆம் ஆண்டுக்குள் $1 டிரில்லியனாக உயர்த்த வேண்டும் என்ற முக்கிய இலக்கை கொண்டிருக்கும் வேளையில், இலக்கை வேகமாக அடைய வேண்டும் என்றும், தமிழ்நாடு குஜராத் போல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பில் வர்த்தகத்தைப் பெற வேண்டும் என்ற இலக்குடன் கடலூரில் மாபெரும் திட்டத்திற்குத் தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது.
அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட தனியார் பங்கு நிறுவனமான தி சட்டர்ஜி குரூப், இந்தியாவில் உள்ள எண்ணெய்-கெமிக்கல் திட்டத்திற்காக இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் நிறுவனங்களுடன் கூட்டணி வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தி சாட்டர்ஜி குழுமம் (TCG) பெரும்பான்மையான பங்குகளை வைத்திருக்கும் பெட்ரோ கெமிக்கல் நிறுவனம் தான் ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் (HPL). இந்த நிறுவனம் கடலூரில் சுமார் 10 பில்லியன் டாலர் முதலீட்டில் அதாவது 83000 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை முதலீடு செய்து பெட்ரோ கெமிக்கல் துறையில் இறங்க உள்ளது.
இந்த மாபெரும் திட்டத்திற்காக தி சாட்டர்ஜி குழுமம், தற்போது ONGC மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப் ஆகியவற்றுடன் கூட்டணி அமைக்கப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த கடலூர் எண்ணெய் திட்டத்தில் இந்த எண்ணெய் நிறுவனங்கள் கூட்டாக 49% பங்கு வைத்திருக்கும். அதே சமயம், இந்தியாவில் ஹால்டியா பெட்ரோகெமிக்கல்ஸ் லிமிடெட் வாயிலாக தி சாட்டர்ஜி குழுமம் 51% பங்கு வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தி சாட்டர்ஜி குழுமம், 2028-2029 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் கடலூரில் ஆண்டுக்கு 3.5 மில்லியன் மெட்ரிக் டன் எத்திலீன் மற்றும் புரோபிலீன் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட ஆயில் டூ கெமிக்கல் தொழிற்சாலையை நிறுவ திட்டமிட்டுள்ளதாக ஹால்டியா CEO திரு. நவநீத நாராயண் சில மாதங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் தெரிவித்தார். எத்திலீன் மற்றும் புரோபிலீன் மூலம் ஷாப்பிங் பேக், கார் பாகங்கள், தண்ணீர் குழாய்கள் தயாரிக்க முடியும்.
மேலும் குஜராத் மாநிலத்தின் வரி வசூல், வர்த்தகம், ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிப்பது முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழுமம் ஜாம்நகரில் வைத்திருக்கும் மாபெரும் பெட்ரோ கெமிக்கல் தொழிற்சாலையில் இருந்து தான் பெறுகிறது. கிட்டத்தட்ட இதே வாய்ப்பை தமிழ்நாடு தி சாட்டர்ஜி குழுமம் வாயிலாகப் பெற உள்ளது, தமிழ்நாட்டில் இதுவரையில் மிகப்பெரிய அளவிலான பெட்ரோகெமிக்கல் நிறுவனம் இல்லை.
More From GoodReturns

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!



Click it and Unblock the Notifications