தமிழ்நாடு அரசு சென்னை மெரினா உட்பட மாநிலத்தின் பல்வேறு கடற்கரை பகுதிகளையும் தூய்மையான கடற்கரை என்பதற்கான நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கிறது.
சென்னை கோவளம் கடற்கரை நீலக்கொடி சான்றிதழ் பெற்ற கடற்கரையாக உள்ளது. இதனை அடுத்து சென்னை மெரினா கடற்கரைக்கும் நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கான முதல் கட்ட பணிகள் நிறைவடைந்து இரண்டாம் கட்ட பணிகள் நடைபெற்ற வருகின்றன. தூய்மை, நீரின் தரம், பாதுகாப்பு மற்றும் கடற்கரைக்கு வரக்கூடிய மக்களுக்கு கிடைக்கும் வசதிகள் என 33 கடுமையான விதிகளை அடிப்படையாகக் கொண்டுதான் கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் என்பது வழங்கப்படுகிறது.

அந்த வகையில் கடலூர் மாவட்டத்தின் புகழ்பெற்ற சில்வர் பீச் எனப்படும் வெள்ளி கடற்கரையில் நீலக்கொடி சான்றிதழ் பெறுவதற்கு ஏற்ப கடற்கரையை அழகுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தின் மிகப் பிரபலமான ஒரு சுற்றுலா பகுதியாக சில்வர் கடற்கரை மாறும் என தமிழ்நாடு அரசு நம்பிக்கை தெரிவிக்கிறது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்க கூடிய வழிகாட்டுதல்களின் படி கடலூர் மாவட்டத்தின் சில்வர் கடற்கரை நீலக் கொடி கடற்கரையாக மாற்றப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு தற்போது சென்னை திருவான்மியூர், பாலவாக்கம் மற்றும் உத்தண்டி , தூத்துக்குடி குலசேகரபட்டினம், விழுப்புரம் கீழ்புத்துப்பட்டு , கடலூர் சில்வர் கடற்கரை ஆகிய ஆறு கடற்கரைகளை தூய்மையான கடற்கரைகளுக்கான நீலக் கொடி சான்று பெறுவதற்கான பணிகளை மேற்கொண்டு இருக்கிறது.
அதற்கேற்ப கடலூர் சில்வர் கடற்கரை மாற்றப்பட்டு வருகிறது. பல்வேறு கட்டமைப்பு வசதிகளும் அங்கே கொண்டு வரப்பட்டுள்ளன. நடைபாதை, கண்காணிப்பு கோபுரம், எல்ஈடி விளக்குகள், சிசிடிவி கேமராக்கள் ,வாகன நிறுத்தும் இடம் ,கழிவறை வசதி, உணவகங்கள், குப்பைகளை மேலாண்மை செய்யும் முறை, புகைப்படங்களை எடுத்துக் கொள்வதற்கான இடங்கள், சுற்றுலா தகவல் மையம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
முதல் கட்ட பணிகள் தற்போது முடிந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஒரு கிலோமீட்டர் நீளத்திற்கு பணிகள் முழுவதுமாக முடிந்து விட்டதாக சொல்லப்படுகிறது. 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடலூர் நகராட்சி இந்த பணிகளை மேற்கொண்டு இருக்கிறது. கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தற்காலிக கட்டமைப்புகள், நீர் சுத்திகரிப்பு நிலையம் ,சோலார் மின் உற்பத்தி அமைப்புகள் ,வாகன நிறுத்தும் இடங்கள், மாற்றுத்திறனாளிகள் கடற்கரைக்கு சென்று வரக்கூடிய வகையில் பிரத்தியேக வழித்தடம் , கழிப்பறைகள் மக்கள் அமரும் வகையிலான இருப்பிடங்கள் செல்ஃபி ஸ்பாட்டுகள் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் இதுவரை கோவளம் கடற்கரைக்கு மட்டுமே நீலக்கொடி சான்றிதழ் பெறப்பட்டிருக்கிறது. சென்னை மெரினா கடற்கரையில் நீல கொடி சான்றிதழ் பெறுவதற்காக 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்த பட்டியலில் கடலூரும் இணைந்துள்ளது. இந்த சான்றிதழ் வந்துவிட்டால் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் அனைவரும் இங்கே படை எடுப்பார்கள்.
More From GoodReturns

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

13 ஆண்டுகளாக வேலை பார்த்தவரை ஒரே நொடியில் தூக்கி எறிந்த ஐடி நிறுவனம்: கண்ணீரில் சென்னை டெக்கி

40 ஆண்டுகள், 15 நெருக்கடி.. தட்டி தூக்கிய பங்கு சந்தை.. முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்..!



Click it and Unblock the Notifications