அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, கச்சா எண்ணெய் மற்றும் பொருட்களின் இறக்குமதி மூலம் அதிகரிக்கும் பணவீக்கம் குறித்த கவலை அதிகரித்துள்ளது. இது ரிசர்வ் வங்கியின் பணவீக்க கவலையை மேற்கொண்டு அதிகரித்துள்ளது.
அதிகரித்து வரும் இரண்டாம் கட்ட பரவலை கட்டுப்படுத்த, மாநில அரசுகள் கடுமையான லாக்டவுன் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதனால் மேற்கொண்டு விநியோக சங்கிலி மற்றும் லாகிஸ்டிக்ஸ் பாதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மேற்கொண்டு பணவீக்கம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய சில்லறை பணவீக்கம் அல்லது நுகர்வோர் விலை குறையீடு 6% என்ற நிலையில் உள்ளது. ஆர்பிஐ தற்போது 4% பணவீக்க விகிதத்துடன் +2 அல்லது -2 என்ற விகிதத்தில் பராமரித்து வருகின்றது. இதற்கிடையில் கடந்த மார்ச் மாத நுகர்வோர் விலை குறியீடு 5.52% ஆக இருந்தது. இதே பிப்ரவரி மாதத்தில் 5.03% ஆகவும் இருந்தது.
இதற்கிடையில் தான் 2021 - 22ம் நிதியாண்டிற்கான பணவீக்க விகிதம் 5% இருக்கலாம் என்றும் சற்று உயர்த்தியுள்ளது. இதில் நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் 5.2% ஆகவும், மூன்றாவது காலாண்டில் 4.3% ஆகவும் இதே நான்காவது காலண்டில் 5.1% ஆகவும் இருக்கலாம் என்றும் கணித்துள்ளது.
இதற்கிடையில் இரண்டாம் கட்ட பரவல் என்பது அதிகரித்து வரும் நிலையில், ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி கண்டு வருகின்றது. கடந்த 2018ல் 73 - 74 ரூபாய் என்ற லெவலை தொட்டது. அதன் பிறகு பெரியளவில் மாற்றமின்றி 70 ரூபாய் என்ற லெவலிலேயே இருந்தது. 2020ல் கொரோனாவின் தாக்கம் அதிகரிக்க ஆரம்பித்த நிலையிலேயே ரூபாயின் மதிப்பு சரிவினைக் காண ஆரம்பித்துள்ளது. அதிலும் கடந்த இரண்டு மாதங்களில் 72 - 75 ரூபாய் என்ற லெவலை தொட்டுள்ளது.


Click it and Unblock the Notifications