மக்கள் மத்தியில் பணப்புழக்கத்தின் அளவு ரூ.27.7 லட்சம் கோடியாக உயர்வு.. 2020ல் சிறப்பான வளர்ச்சி..!

கொரோனா வைரஸ் தொற்றும், லாக்டவுன் கட்டுப்பாடுகளும் நாட்டின் பொருளாதாரத்தையும், வர்த்தகச் சந்தையும் கடுமையாகப் பாதித்த நிலையில் மக்கள் மத்தியில் அதிகளவிலான பணத் தேவை ஏற்பட்டது.

இதனால் 2020ல் இந்தியாவில் பணப்புழக்கத்தின் அளவு 5 லட்சம் கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.

பணப் புழக்கத்தின் அளவு

பணப் புழக்கத்தின் அளவு

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள தரவுகளின் அடிப்படையில் ஜனவரி 1, 2019 முதல் ஜனவரி 1, 2020 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் பணப் புழக்கத்தின் அளவு எப்போதும் இல்லாத வகையில் 5,01,405 கோடி ரூபாய் உயர்ந்து மொத்த பணப் புழக்கத்தின் அளவு 27,70,315 கோடி ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது.

22 சதவீதம் அதிகம்

22 சதவீதம் அதிகம்

கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 2020ல் பணப் புழக்கத்தின் அளவு சுமார் 22 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட காலத்தைத் தவிர்த்தால் இந்திய வரலாற்றில் பணப் புழக்கத்தின் அளவு அதிகப்படியாக வளர்ச்சி அடைந்தது ஜனவரி 1, 2019 முதல் ஜனவரி 1, 2020 காலகட்டம் தான்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை

பணமதிப்பிழப்பு நடவடிக்கை

இந்தியாவில் 500, 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்ட போது மக்கள் மத்தியில் பணத்தின் தேவை வரலாறு காணாத விதமாக 20 சதவீதம் குறைந்து, புதிய ரூபாய் நோட்டுகள் வெளியிட்ட போது தடாலடியாக 37 சதவீதம் வரையில் உயர்ந்தது.

பணப் புழக்கத்தின் சராசரி அளவு

பணப் புழக்கத்தின் சராசரி அளவு

கடந்த 10 வருடத்தில் பணப் புழக்கத்தின் அளவின் வளர்ச்சி சராசரியாக 12.6 சதவீதமும், 50 வருடத்தில் 13.8 சதவீதமாகவும் உள்ளது. தற்போது 2020ல் இதன் அலவு கிட்டத்தட்ட இரட்டிப்பு அளவில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

பணத்தின் தேவை

பணத்தின் தேவை

கடந்த 50 வருடத்தில் பணத்தின் தேவை மக்கள் மத்தியில் 4 முறை மட்டுமே 17 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. ஒன்று பணப்புழக்கத்தின் போது மற்ற மூன்று முறை 1987-90, 1993-96 மற்றும் 2005-09 ஆகிய காலகட்டத்தில். இந்தக் குறிப்பிட்ட காலத்தில் ஜிடிபி வளர்ச்சி காரணமாக மக்கள் மத்தியில் அதிகப் பணத் தேவை ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க டாலர்

அமெரிக்க டாலர்

மேலும் தற்போது புழக்கத்தில் உள்ள 35 சதவீத அமெரிக்க டாலர்கள் கடந்த 10 மாதத்தில் அந்நாட்டின் பொருளாதார வீழ்ச்சியைக் கட்டுப்படுத்த மத்திய வங்கி எடுத்த முடிவின் காரணமாக அதிகளவிலான டாலர்களை அச்சிட்டு உள்ளது.

இதேபோல் உலகில் பெரும்பாலான நாடுகளில் மத்திய வங்கிகள் கொரோனா காலத்தில் அதிகளவிலான நாணயங்களை அச்சிட்டு உள்ளது.

இதனால் கண்டிப்பாகப் பணப்புழக்கத்தின் அளவு நிச்சயம் அதிகரித்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+