2022-23 ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கை, பொருளாதார ஆய்வறிக்கை ஹைய்லைட்ஸ், பொருளாதார ஆய்வறிக்கை புள்ளியியல் பின் இணைப்பு ஆகிய 3 அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த 3 அறிக்கைகளையும் ஆங்கிலம் மற்று ஹிந்தி மொழியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்துள்ளார்.
2022-23 ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் 2023-24 நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6-6.8% ஆக இருக்கும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
நடப்புக் கணக்குப் பற்றாக்குறை
பொருளாதார ஆய்வறிக்கை 2023ல் இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறைக்கு (CAD) நிதியளிக்க போதுமான அந்நியச் செலாவணி கையிருப்பு இருப்பதாகவும், ரூபாய் ஏற்ற இறக்கத்தை நிர்வகிப்பதற்கு அந்நியச் செலாவணி சந்தையில் தலையிட போதுமான நிதி ஆதாரம் இருப்பதாகவும் நம்புகிறது.
இந்தியாவில் ஏற்றுமதியைக் காட்டிலும் இறக்குமதி அதிகமாக இருப்பது மட்டும் அல்லாமல் இரண்டுக்கும் மத்தியிலான வித்தியாசம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேவேளையில் இறக்குமதிக்கு டாலரில் பேமெண்ட் செலுத்தப்படும் வேளையில், டாலர் அதிக்கம் காரணமாக ரூபாய் மதிப்பு சரியும்.
வாய்ப்புகள்
2023 ஆம் நிதியாண்டில் இந்த நிலை மோசமாகும் என பொருளாதார ஆய்வறிக்கை 2023ல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதேபோல் இந்திய ரூபாய் மதிப்பில் பல நாடுகளுடன் பேமெண்ட் செலுத்த திட்டமிட்டு வரும் நிலையில் இந்த பாதிப்பு குறைய வாய்ப்பு உள்ளது.
வேகமாக மீண்டது இந்தியா
கோவிட்-19 தொற்றுநோய் அதிர்ச்சியிலிருந்து இந்தியா வேகமாக மீண்டு உள்ளதாக பொருளாதார ஆய்வு 2023 கூறியுள்ளது. அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி உறுதியான உள்நாட்டு தேவை, மூலதன முதலீட்டின் மூலம் அதிகரிக்கும்.
இந்திய ரூபாயின் மதிப்பு
நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (CAD) தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு கூடுதலாகப் பாதிக்கப்படலாம் என்று பொருளாதார ஆய்வு 2023 எச்சரித்துள்ளது.
இந்தியா
இந்தியாவின் வளர்ச்சி வலுவான அடிப்படைகள் மூலம் தொடர் வளர்ச்சிப் பாதையில் உள்ளது என்று பொருளாதார ஆய்வறிக்கை 2023ல் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
நாமினல் ஜிடிபி
பொருளாதார ஆய்வு 2023, அடுத்த நிதியாண்டில் நாமினல் ஜிடிபி அளவு 11% வளரும் என்று எதிர்பார்க்கிறது. 2022-23 ஆம் நிதியாண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில் 2023-24 நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6-6.8% ஆக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications