சென்னை: ஆக்சிஸ் வங்கியின் டிரேடிங் தளத்தில் மிகப்பெரிய தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதனால் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களின் தரவுகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆக்சிஸ் வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர் குட் ரிட்டர்ன்ஸ் தளத்திற்கு அதிர்ச்சி அளிக்கும் தகவல்களை அளித்துள்ளார். வெங்கி என பெயரிடப்பட்ட நபர் என்ஆர்ஐ ஆவார். இவர் குட் ரிட்டர்ன்ஸ் தளத்திற்கு அளித்துள்ள தகவலில், தன்னுடைய ஆக்சிஸ் வங்கியின் டிரேடிங் தளத்தில் லாகின் செய்ததாகவும் அப்போது மற்ற பயனாளர்களின் போர்ட்போலியோவை தன்னால் அணுக முடிந்தது என்றும் அதில் டிரேடிங் செய்ய முடிந்தது என்றும் கூறியுள்ளார்.
பங்குச்சந்தை நடைபெறும் வேளையில் இவ்வாறு தன்னால் மற்றவர்களின் கணக்குகளில் நுழைந்து வர்த்தகம் செய்ய முடிந்தது என கூறியுள்ளார். இது தொடர்பான ஸ்கிரீன்ஷாட்களையும் அவர் பகிர்ந்துள்ளார். உடனடியாக தான் ஆக்சிஸ் வங்கி, செபி மற்றும் ஆர்பிஐ அமைப்புகளிடம் செப்டம்பர் 13 அன்று காலை 11:30 மணிக்கு புகார் அளித்ததாகவும் ஆனால் இதுவரை அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவில்லை என்றும் கூறுகிறார்.

மற்ற வாடிக்கையாளர்களின் போர்ட்போலியோவை அணுக முடிகிறது என்பதை தாண்டி அவர்களின் கணக்கில் என்னால் டிரேடிங்கும் செய்ய முடிகிறது என்றால் இது எவ்வளவு பெரிய ஒரு தவறு என அவர் கேள்வி அனுப்பியுள்ளார்.
இது தொடர்பாக குட் ரிட்டர்ன்ஸ் சார்பில் ஆக்சிஸ் வங்கிக்கு மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை அவர்கள் தரப்பிலிருந்து பதில் அனுப்பப்படவில்லை. இவ்வாறு பயனாளர்களின் போர்ட்போலியோ உள்ளிட்ட விவரங்கள் மற்ற பயனாளர்களுக்கு அணுகும் வகையில் இருப்பது மிகப்பெரிய ஒரு தனி உரிமை மீறல் ஆகும். இதனால் பயனாளர்களின் தகவல்களுக்கு பாதுகாப்பில்லாத சூழ்நிலை உண்டாகிறது. மேலும் அவர்கள் கணக்கில் இருக்கும் பணத்திற்கும் ஆபத்து உண்டாகிறது.
மற்ற பயனாளர்களின் கணக்குகளில் ஒருவரால் எளிதாக வர்த்தகம் செய்ய முடிகிறது என்றால் இது எவ்வளவு பெரிய ஒரு பாதுகாப்பு மீறல் என்ற கேள்வி எழுகிறது .குறிப்பாக இது பல்வேறு நிதி சார்ந்த மோசடிகளுக்கு வழிவகுக்கும். அதுமட்டுமின்றி வாடிக்கையாளர்களின் தரவுகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டியது வங்கியின் கடமை. ஆனால் இவ்வளவு பெரிய தவறு நிகழ்ந்திருப்பதன் மூலம் பல்வேறு வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிந்திருக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குட் ரிட்டர்ன்ஸ் தளத்திற்கு பேட்டி அளித்துள்ள வெங்கி, ஆக்சிஸ் வங்கி தரப்பில் திங்கள்கிழமை இந்த பிரச்னை சரி செய்யப்படும் என தனக்கு பதில் வழங்கப்பட்டுள்ளதாக கூறுகிறார். இதேபோல தன்னுடைய கணக்கை வேறு யாரேனும் பயன்படுத்தி வர்த்தகம் செய்திருக்கிறார்களோ என்ற கவலை தனக்கு ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளார். தன்னுடைய கணக்கில் மற்றவர்கள் ஏதேனும் வர்த்தகம் செய்திருந்தால் அதற்கான இழப்பீட்டினை ஆக்சிஸ் வங்கி தனக்கு தர வேண்டும் எனவும் இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக தனக்கு ஏற்பட்ட மன அழுத்தம் உள்ளிட்டவருக்கு ஆக்சிஸ் வாங்கி தரப்பில் பதில் வழங்கியே ஆக வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Written by: Devika
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications